48 மெகாபிக்சல் கேமராவுடன் ஹவாய் ஒய் 9 எஸ் இந்தியாவில் அறிமுகம்! 

48 மெகாபிக்சல் கேமராவுடன் ஹவாய் ஒய் 9 எஸ் இந்தியாவில் அறிமுகம்! 

ஹவாய் ஒய் 9 எஸ் ஒரு பாப்-அப் செல்பி கேமரா கொண்டுள்ளது

ஹைலைட்ஸ்
  • 4,000 எம்ஏஎச் பேட்டரி மூலம் 10W சார்ஜிங் உள்ளது
  • பின்புறத்தில் மூன்று கேமராக்கள் உள்ளன
  • இந்த போன் 128 ஜிபி ஸ்டோரேஜில் கிடைக்கிறது
விளம்பரம்

மிட்ரேஞ்ச் பிரிவில் ஹவாய் மற்றொரு போனைக் கொண்டு வந்துள்ளது. புதிய ஹவாய் ஒய் 9 எஸ்-ல் மேம்படுத்தப்பட்ட செல்பி கேமரா உள்ளது. சீன நிறுவனம் கிரின் 710 எஃப் சிப்செட் மூலம் இந்த போனில் 4,000 எம்ஏஎச் பேட்டரியைப் பயன்படுத்தியுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் குறைந்த எண்ணிக்கையிலான பச்சை மற்றும் ஆரஞ்சு வண்ணங்களில் கிடைக்கும்.


போனின் விலை:

6 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ஹவாய் ஒய் 9 எஸ்-ன் விலை ரூ.19,990 ஆகும். இந்த போன் மே 19-ந் தேதி Amazon-ல் இருந்து மட்டுமே கிடைக்கும்.


போனின் விவரங்கள்:

Huawei Y9s நிறுவனத்தின் EMUI 9.1 உடன் Android 9 பை-ல் இயக்கும். இந்த போனில் 6.59 இன்ச் எஃப்.எச்.டி + டிஸ்ப்ளே உள்ளது. இது கிரின் 710 எஃப் சிப்செட், 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் உடன் வருகிறது.

Huawei ஒய் 9 எஸ்-ன் பின்புறத்தில் மூன்று கேமராக்கள் உள்ளன. இந்த கேமரா 48 மெகாபிக்சல் முதன்மை சென்சார், 8 மெகாபிக்சல் வைட்-ஆங்கிள் கேமரா மற்றும் 2 மெகாபிக்சல் டெப்த் சென்சாரைக் கொண்டுள்ளது. இந்த போன்16 மெகாபிக்சல் பாப்-அப் செல்பி கேமராவுடன் வருகிறது.

இணைப்பிற்காக இந்த போனில் வைஃபை 802.11 பி / ஜி / என், 4 ஜி எல்டிஇ, புளூடூத் 4.2, ஜிபிஎஸ் / ஏ-ஜிபிஎஸ், க்ளோனாஸ், யூ.எஸ்.பி டைப்-சி உள்ளது. போனில் கைரேகை சென்சார் உள்ளது. 4,000 எம்ஏஎச் பேட்டரி கொண்ட இந்த போனின் எடை 206 கிராம் ஆகும்.


Is Mi 10 an expensive OnePlus 8 or a budget budget S20 Ultra? We discussed this on Orbital, our weekly technology podcast, which you can subscribe to via Apple Podcasts or RSS, download the episode, or just hit the play button below.

Comments

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Huawei, Huawei Y9s, Huawei Y9s price in India, Huawei Y9s specifications
பேஸ்புக்கில் பகிரலாம் Gadgets360 Twitter Shareட்வீட் பகிர் Snapchat ரெட்டிட்டில் கருத்து
#சமீபத்திய செய்திகள்
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »