'ஹவாய் Y9 ப்ரைம்' 2019, இந்தியாவில் ஆகஸ்ட் 1 அன்று அறிமுகம்!

'ஹவாய் Y9 ப்ரைம்' 2019, இந்தியாவில் ஆகஸ்ட் 1 அன்று அறிமுகம்!

16 மெகாபிக்சல் அளவிலான பாப்-அப் செல்பி கேமராவை கொண்டுள்ளது இந்த 'ஹவாய் Y9 ப்ரைம்' 2019

ஹைலைட்ஸ்
  • இந்த ஸ்மார்ட்போன் ஹைசிலிகான் கிரின் 710F எஸ் ஓ சி ப்ராசஸரை கொண்டுள்ளது
  • இந்த ஸ்மார்ட்போனில் 3 பின்புற கேமராக்கள்
  • 16 மெகாபிக்சல் அளவிலான பாப்-அப் செல்பி கேமரா
விளம்பரம்

'ஹவாய் Y9 ப்ரைம்' 2019 ஸ்மார்ட்போன் இந்தியாவில் ஆகஸ்ட் 1 அன்று அறிமுகமாகவுள்ளது. அமேசான் இந்தியா இந்த தகவலை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பு, ஹவாயின் புதிய ஸ்மார்ட்போன் குறித்த சில டீசர்கள் இணையத்தில் வெளியானதற்குப்பிறகு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சம் என்னவென்றால், பாப்-அப் செல்பி கேமராவை கொண்டுள்ளது 'ஹவாய் Y9 ப்ரைம்'. இந்த ஸ்மார்ட்போன் ஓப்போ K3, ரியல்மீ X, ரெட்மீ K20 ஸ்மார்ட்போன்களுக்கு போட்டியாக சந்தையில் அறிமுகமாகவுள்ளது. 'ஹவாய் Y9 ப்ரைம்' ஸ்மார்ட்போன் ஹைசிலிகான் கிரின் 710F எஸ் ஓ சி ப்ராசஸரை கொண்டுள்ளது. 

'ஹவாய் Y9 ப்ரைம்' 2019: இந்தியாவில் எதிர்பார்க்கப்படும் விலை!

இந்தியாவில் இந்த ஸ்மார்ட்போனின் விலை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்றாலும், உலக சந்தையில் அறிமுகமான விலையிலேயே இந்தியாவிலும் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

கென்யாவில் 4GB RAM + 128GB சேமிப்பு அளவு கொண்ட 'ஹவாய் Y9 ப்ரைம்' 15,600 ரூபாயில் அறிமுகமாகியுள்ளது. அதேநேரம், சவுதியில் 17,800 ரூபாய் என்ற விலையில் அறிமுகமாகியுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் கருப்பு (Midnight Black), பச்சை (Emerald Green), மற்றும் நீலம் (Sapphire Blue) என மூன்று வண்ணங்களில் அறிமுகமாகியுள்ளது. 

'ஹவாய் Y9 ப்ரைம்' 2019: சிறப்பம்சங்கள்!

இரண்டு நானோ சிம் வசதி கொண்ட இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்ட் 9 பை அமைப்பு கொண்டு செயல்படுகிறது. 6.59-இன்ச் அளவிலான FHD+ திரை (1080x2340 பிக்சல்கள்) 19.5:9 திரை விகிதம் போன்ற திரை அம்சங்களை கொண்டுள்ளது. 4GB RAM கொண்ட இந்த ஸ்மார்ட்போன் ஹைசிலிகான் கிரின் 710F எஸ் ஓ சி ப்ராசஸர் கொண்டு வெளியாகியுள்ளது.

16 மெகாபிக்சல் முதன்மை கேமரா, 8 மெகாபிக்சல் அளவிலான வைட்-அங்கிள் கேமரா, மற்றும் 2 மெகாபிக்சல் கேமரா என மூன்று பின்புற கேமராக்களை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். முன்புறத்தில் 16 மெகாபிக்சல் அளவிலான பாப்-அப் செல்பி கேமராவை கொண்டுள்ளது. 

இந்த ஸ்மார்ட்போன் 4,000mAh அளவிலான பேட்டரியை கொண்டுள்ளது. மேலும் 4G LTE, வை-பை, ப்ளூடூத், GPS ஆகிய வசதிகளை கொண்ட இந்த ஸ்மார்ட்போன், டை-C சார்ஜர் போர்ட் பொருத்தப்பட்டு வெளியாகியுள்ளது. 

Comments

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

பேஸ்புக்கில் பகிரலாம் Gadgets360 Twitter Shareட்வீட் பகிர் Snapchat ரெட்டிட்டில் கருத்து
#சமீபத்திய செய்திகள்
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »