Huawei Y9 Prime 2019, EMUI 10-ஐ அடிப்படையாகக் கொண்ட ஆண்ட்ராய்டு 10-ஐப் பெறத் தொடங்கியுள்ளது. புதிய அப்டேட் இந்தியாவில் புதிய பயனர் அனுபவம் (user experience - UX) மற்றும் system-wide Dark Mode உடன் வெளிவருகிறது. நினைவுகூர, Huawei Y9 Prime 2019 கடந்த ஆண்டு ஆகஸ்டில் Android 9 Pie, அடிப்படையிலான EMUI 9.1 உடன் நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்டது.
செய்திக்குறிப்பில் வழங்கப்பட்ட மாற்றங்களின் பட்டியலின் படி, Huawei Y9 Prime 2019-க்கான ஆண்ட்ராய்டு 10 அப்டேட் EMUI 10 மூலம் புதிய தோற்றத்தையும் உணர்வையும் தருகிறது. இந்த அப்டேட், Magazine Design அம்சத்தை திரையில் ஈர்க்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த அப்டேட்டில் Morandi வண்ணத் திட்டமும் உள்ளது. இது இத்தாலிய ஓவியர் ஜார்ஜியோ மொராண்டியால் (Giorgio Morandi) ஈர்க்கப்பட்டுள்ளது.
Huawei Y9 Prime 2019-க்கான சமீபத்திய மென்பொருள் பதிப்பில் system-wide Dark Mode-ம் உள்ளது, இது text, images மற்றும் on-screen icons-ன் நிறத்தை மேம்படுத்துவதற்குப் பதிலாக பல்வேறு ஒளி நிலைகள் மற்றும் சூழல்களுடன் பொருந்தக்கூடிய வகையில் மாற்றியமைக்கப்படுகிறது. மேலும், ஹூவாய் புதிய அனிமேஷன் விளைவுகளை வழங்கியுள்ளது, இது பயனர்களுக்கு போனில் உங்கள் கைக்கு உடனடி feedback வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
நீங்கள் ஒரு Huawei Y9 Prime 2019-ஐ வைத்திருந்தால், வரும் நாட்களில் Android 10 அப்டேட்டை இன்ஸ்டால் செய்வதற்கான அறிவிப்பை பெறலாம். இருப்பினும், புதிய மென்பொருளின் நிலையை அறிய உங்கள் போனில் உள்ள HiCare செயலிக்கு மேனுவலாக செல்லலாம்.
GPU Turbo 3.0 மற்றும் புதிய EROFS (Extendable Read-Only File System) ஆகியவற்றை உள்ளடக்கிய EMUI 9.1 உடன் Y9 Prime 2019-ஐ Huawei இந்தியாவிற்கு கொண்டு வந்தது. தனிப்பயன் ரோம் புதிய அம்சங்களையும் விளைவுகளையும் கொண்டுள்ளது, இது பயனர்கள் தங்கள் vlogs-ஐ ஆன்லைனில் எளிதாகத் திருத்தவும் பகிரவும் Huawei Vlog Editor அனுமதிக்கிறது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்