ஹூவாய் y9 ஸ்மார்ட்போனானது, 6.5 இன்ச் நாட்ச் டிஸ்பிளே, பின்பக்கம் டூயல் கேமரா, கிரிண் 710soC, 4,000mAh பேட்டரி கொண்டுள்ளது
ஹூவாய் y9 வெளியிட்டு தேதி தெரியாமல் இருந்த நிலையில், வரும் ஜன.7ஆம் தேதி வெளியாகிறது.
ஹூவாய் y9 ஸ்மார்ட்போனானது, வரும் ஜன.7ஆம் தேதி வெளியாக உள்ளது.
இந்த வெளியிட்டு நிகழ்ச்சிக்கு ஊடகத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இ-காமர்ஸ் ஜெயிண்ட் என அழைக்கப்படும் அமேசான், இந்த போனுக்காக முன்பதிவை அறிவித்துள்ளது. அதன்படி, இணையத்தில் 'நோட்டிஃபை மீ' பட்டனை அழுத்தும் வகையில் மாற்றியமைத்துள்ளது.
இதன் சிறப்பம்சம் என்னவெனில், ஹூவாய் y9 ஸ்மார்ட்போனானது, 6.5 இன்ச் நாட்ச் டிஸ்பிளே, பின்பக்கம் டூயல் கேமரா, கிரிண் 710soC, 4,000mAh பேட்டரி கொண்டுள்ளது. ஜிபியூ டர்போ, கைரேகை சென்சார் 4.0 டெக்னாலஜியும் உள்ளது.
ஹூவாய் y9 (2019) விலை, டிசைன், வெளியிடு,
ஹூவாய் y9 (2019) ஸ்மார்ட்போனின் இந்திய விலையானது இதுவரை அறிவிக்கப்படவில்லை. எனினும், இந்த போன் பட்ஜெட் ஸ்மார்ட்போன் பட்டியலில் இடம்பிடிக்கும் என தெரிகிறது. இதன் வெளியிட்டு விவரமும் இதுவரை அறிவிக்கப்படவில்லை. எனினும் இந்த போனிற்கான முன்பதிவு மட்டும் அமேசான் இந்தியா வலைதளத்தில் தொடங்கப்பட்டுள்ளது.
இந்த ஸ்மார்ட்போனில், டிஸ்பிளே நாட்ச், முன்பக்கம் 2 கேமரா சென்சார் மற்றும் பின்பக்கம் டூயல் கேமரா சென்சார் கொண்டுள்ளது. இதில் டிஸ்பிளேவில் பெசல் இல்லை என்பது தெரிகிறது.
டூயல் சிம் ஹூவாய் y9 (2019) ஸ்மார்ட்போனானது, EMUI 8.2 ஆண்ட்ராய்டு 8.1 ஒரியோவில் இயங்குகிறது. இதன் 6.5 இன்ச் டிஸ்பிளே (1080x2340 பிக்செல்ஸ்) புல்வீயூ டிஸ்பிளே உடன் 3D டிஸைசன், 19.5:9 அக்ஸப்ட் ரேஸியோ கொண்டுள்ளது. இதில், கிரின் 710 பிராசஸர், எ.ஐ பவர் 7.0 3ஜிபி ரேம் + 64ஜிபி நினைவகம், 4ஜிபி ரேம் + 64 ஜிபி நினைவகம் கொண்டது.
இந்த ஸ்மார்ட்போனின் பின்பக்கம் டூயல் கேமரா உடன் 13 மெகா பிக்ஸெல்ஸ் சென்சாருடன் f/1.8 அப்பர்சர் மற்றும் 2 மெகா பிக்செல் சென்சார் f/2.4 அப்பர்சர் கொண்டுள்ளது. இதன் பின்பக்கம் எல்இடி பிளாஷ், எச்டிஆர் கொண்டுள்ளது. முன்பக்கம், டூயல் கேமராவில் 16 மெகா பிக்செல்ஸ் சென்சார் f/1.0 அப்பர்சர் மற்றும் 2 மெகா பிக்செல்ஸ் f/2.4 அப்பர்சர் கொண்டுள்ளது.
ஹூவாய் y9 (2019) ஸ்மார்ட்போனானது, கைரேகை 4.0 டெக்னாலஜி கொண்டுள்ளது. இதன் மூலம் 0.3 செகண்ட்ஸில் அன்லாக் செய்யலாம். இந்த அப்கிரேடட் கைரேகை சென்சார் டெக்னாலஜி மூலம் கைரேகை நேவிகேஷன் கொண்டுள்ளது. 4,000mAh பேட்டரி மற்றும் ப்ளூடூத், மைக்ரோ யூஎஸ்பி கொண்டுள்ளது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹59,909
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Nothing Deals Revealed for Phone 4 Series, CMF Buds Lineup, More Ahead of Flipkart's Big Billion Days Sale