டூயல் செல்பி கேமராவுடன் ஹவாய் ஒய் 8 எஸ்  ஸ்மார்ட்போன் அறிமுகம்!

ஹவாய் ஒய் 8 எஸ் 48 மெகாபிக்சல் பிரதான சென்சாருடன் பின்புறத்தில் இரட்டை பின்புற கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது.

டூயல் செல்பி கேமராவுடன் ஹவாய் ஒய் 8 எஸ்  ஸ்மார்ட்போன் அறிமுகம்!

ஹவாய் ஒய் 8 எஸ் கிரின் 710 ஆக்டா கோர் செயலி மூலம் இயக்கப்படுகிறது

ஹைலைட்ஸ்
  • ஹவாய் ஒய் 8 எஸ் 4 ஜிபி ரேம் & 2 ஸ்டோரேஜ் ஆப்ஷன்களைக் கொண்டுள்ளது
  • ஸ்மார்ட்போனில் ஆக்டா கோர் கிரின் 710 செயலி உள்ளது
  • டூயல் செல்ஃபி கேமரா என்பது ஹவாய் ஒய் 8 எஸ் ஸ்மார்ட்போனின் சிறப்பு
விளம்பரம்

ஹூவாய் ஒய் 8 எஸ் ஸ்மார்ட்போன் டூயல் பின்புற கேமரா மற்றும் டூயல் செல்பி கேமரா அமைப்புடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த போன் ஜோர்டானில் உள்ள நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது. இருப்பினும், அதன் விலை மற்றும் கிடைக்கும் தன்மை தற்போது அறிவிக்கப்படவில்லை. 


போனின் விலை:

ஹவாய் ஒய் 8 எஸ்-ன் வடிவமைப்பு மற்றும் விவரக்குறிப்புகள் பற்றிய முழுமையான தகவல்களை ஜோர்டானின் ஹவாய் வலைத்தளம் வழங்குகிறது. ஆனால், இந்த பட்டியலில் போனின் விலை தகவல்கள் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளன.போனின் விற்பனை விவரங்கள் விரைவில் வர வேண்டும். இந்த போன் எமரால்டு கிரீன் மற்றும் மிட்நைட் பிளாக் உள்ளிட்ட இரண்டு கலர் ஆப்ஷன்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
 

போனின் விவரங்கள்:

Huawei Y8s, ஆண்ட்ராய்டு 9 பை உடன் EMUI 9.1-ல் இயங்குகிறது. இது 6.5 இன்ச் ஃபுல்-எச்டி + (1080x2340 பிக்சல்கள்) டிஎஃப்டி எல்சிடி டிஸ்ப்ளேவைக்கொண்டுள்ளது. இந்த போன் கிரின் 710 ஆக்டா கோர் செயலி மூலம் இயக்கப்படுகிறது. இது மாலி ஜி 51-எம்பி 4 ஜிபியு மற்றும் 4 ஜிபி ரேம் உடன் வருகிறது.

இந்த போன், 4 ஜிபி ரேம் + 64 ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் 4 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன்கள் உட்பட இரண்டு வேரியண்டுகளில் இந்த அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இந்த ஸ்டோரேஜை மைக்ரோ எஸ்டி கார்டு வழியாக 512 ஜிபி வரை விரிவாக்கம் செய்யலாம்.

இந்த போன், டூயல் பின்புற கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. இதில் 48 மெகாபிக்சல் முதன்மை சென்சார் மற்றும் 2 மெகாபிக்சல் இரண்டாம் நிலை சென்சார் ஆகியவை அடங்கும். முன்பக்கத்தில் இரண்டு செல்பி கேமராக்கள் உள்ளன. ஒன்று 8 மெகாபிக்சல் சென்சார் மற்றும் மற்றொன்று 2 மெகாபிக்சல் சென்சார் ஆகும்.

ஸ்மார்ட்போனில் 4,000 எம்ஏஎச் திறன் கொண்ட பேட்டரி உள்ளது. இந்த போனில் பின்புற கைரேகை சென்சாரும் உள்ளது.


In 2020, will WhatsApp get the killer feature that every Indian is waiting for? Samsung Galaxy S20 in India? We discussed this on Orbital, our weekly technology podcast, which you can subscribe to via Apple Podcasts or RSS, download the episode, or just hit the play button below.

  • KEY SPECS
  • NEWS
Display 6.50-inch
Processor HiSilicon Kirin 710
Front Camera 8-megapixel + 2-megapixel
Rear Camera 48-megapixel + 2-megapixel
RAM 6GB
Storage 128GB
Battery Capacity 4000mAh
OS Android Pie
Resolution 1080x2340 pixels
Comments

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

தொடர்புடைய செய்திகள்

#சமீபத்திய செய்திகள்
  1. லாவா போல்ட் என்2 5ஜி 6,000mAh பேட்டரி, 6.75-இன்ச் டிஸ்ப்ளேவுடன் இந்தியாவில் விற்பனைக்கு வந்தது: விலை, சலுகைகள்
  2. புதிய அம்சத்தால் இன்ஸ்டாகிராம் பயனர்கள் தங்களது புரொஃபைல் கிரிட்டை இனி விருப்பம்போல மறுவரிசைப்படுத்தலாம்
  3. ஐஓஎஸ் தளத்தில் வாட்ஸ்அப் பல-கணக்கு ஆதரவு (Multi-Account Support) கூடுதல் பயனர்களுக்கு வழங்கப்படுவதாகத் தகவல்
  4. WWDC 2026: iOS 27 வெளியீட்டுத் தேதி, அப்டேட் செய்யும் முறை மற்றும் ஆதரவுள்ள சாதனங்களின் பட்டியல்
  5. WWDC 2026: முக்கிய ஆப்பிள் இண்டெலிஜென்ஸ் மேம்பாடுகளுடன் கூடிய சிரி AI-ஐ ஆப்பிள் நிறுவனம் அறிமுகப்படுத்தியது
  6. WWDC 2026: ஜெமினி AI மூலம் இயங்கும் புதிய சிரி அம்சங்களை அறிமுகம் செய்தது ஆப்பிள் நிறுவனம்
  7. அமேசான் மெகா டீல்ஸ்: விவோ X300 FE, ஒன்பிளஸ் நோர்ட் CE 6 மற்றும் முக்கிய கேஜெட்டுகளுக்கு அதிரடி தள்ளுபடி!
  8. ஒன்பிளஸ் கம்யூனிட்டி சேல்: ஒன்பிளஸ் 15, நோர்ட் 6, பேட் 4 மற்றும் பல தயாரிப்புகளுக்கு அதிரடி சலுகைகள் அறிவிப்பு
  9. இந்தியாவில் சியோமி பேட் 8 இன் விலை உயர்ந்தது: இப்போது அதன் விலை எவ்வளவு என்று இங்கே தெரிந்துகொள்ளுங்கள்
  10. இந்தியாவில் வாங்குபவர்களின் முடிவுகளில் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் முக்கிய பங்கு வகிப்பதாக மெட்டா ஆய்வு கூறுகிறது
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »