டிரிபிள் ரியர் கேமராவுடன் வெளியானது Huawei Y7p! 

விளம்பரம்
Written by Kathiravan Gunasekaran மேம்படுத்தப்பட்டது: 7 பிப்ரவரி 2020 11:52 IST
ஹைலைட்ஸ்
  • Huawei Y7p, பின்புறத்தில் 48-மெகாபிக்சல் பிரதான கேமராவைக் கொண்டுள்ளது
  • போனில் 64 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் மற்றும் 4 ஜிபி ரேம் உள்ளது
  • Huawei Y7p-வில் பின்புற கைரேகை சென்சார் உள்ளது

Huawei Y7p, தாய்லாந்தில் முன்கூட்டிய ஆர்டர்களுக்கு தயாராக உள்ளது

Huawei Y7p தாய்லாந்தில் சீன ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரின் புதிய ஸ்மார்ட்போனாக அறிமுகமானது. மேலும், இந்த போன் hole-punch டிஸ்ப்ளே மற்றும் பின்புறத்தில் மூன்று பின்புற கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் பின்புற கைரேகை சென்சார், 48 மெகாபிக்சல் பிரதான பின்புற கேமராவும் உள்ளன. மேலும், Aurora Blue மற்றும் Midnight Black ஆகிய இரண்டு கலர் ஆப்ஷன்களில் இது வழங்கப்படுகிறது. 


Huawei Y7p-யின் விலை:

தாய்லாந்தில் Huawei Y7p-யின் ஒரே 4GB + 64GB வேரியண்டின் விலை THB 4,999 (இந்திய மதிப்பில் ரூ. 11,500)-யாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்டுள்ளபடி, இந்த போன் Aurora Blue மற்றும் Midnight Black ஆகிய இரண்டு கலர் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இது நாட்டின் Lazada, JD central மற்றும் Shopee போன்ற தளங்களில் முன்கூட்டிய ஆர்டர்களுக்காக பட்டியலிடப்பட்டுள்ளது. இந்த மாத இறுதியில் அனுப்பப்பட உள்ளது. இந்த நேரத்தில் போனின் இந்தியா வெளியீட்டில் எந்த வார்த்தையும் இல்லை.


Huawei Y7p-யின் விவரக்குறிப்புகள்:

Huawei Y7p, EMUI 9.1 அடிப்படியிலான Android 9 Pie-ல் இயங்குகிறது. இது 6.39-inch HD+ (720x1560 pixels) TFT LCD hole-punch டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது. இது கட்அவுட் திரையின் மேல் இடது மூலையில் வைக்கப்பட்டுள்ளது. இந்த போன் 4GB RAM உடன் இணைக்கப்பட்டு Kirin 710F octa-core SoC-யால் இயக்கப்படுகிறது. இது 64GB இண்டர்னல் ஸ்டோரேஜைக் கொண்டுள்ளது. இதனை, microSD card வழியாக (512GB வரை) விரிவாக்கம் செய்யலாம்.

Huawei Y7p, பின்புற டிரிபிள் ரியர் கேமரா அமைப்பில் f/1.8 aperture உடன் 48-மெகாபிக்சல் பிரதான சென்சார், f/2.4 aperture உடன் 8-மெகாபிக்சல் ultra-wide-angle கேமரா மற்றும் f/2.4 aperture உடன் மூன்றாவது 2-megapixel கேமரா ஆகியவை அடங்கும். முன்புறத்தில், f/2.0 aperture உடன் 8-மெகாபிக்சல் image சென்சார் உள்ளது.

Huawei Y7p-யில் 4,000mAh பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இணைப்பு விருப்பங்களில் Bluetooth 5.0, MicroUSB port, Wi-Fi 802.11 b/g/n, 3.5mm audio jack, GPS, AGPS, Glonass  மற்றும் பல உள்ளன. ஆன்போர்டு சென்சார்களில் ambient light சென்சார், compass மற்றும் gravity sensor ஆகியவை அடங்கும். இந்த போன் rear fingerprint சென்சாரையும் கொண்டுள்ளது. மேலும், 159.81x76.13x8.13mm அளவீட்டையும் 176 கிராம் எடையையும் கொண்டதாகும்.

 
KEY SPECS
Display 6.39-inch
Processor HiSilicon Kirin 710F
Front Camera 8-megapixel
Rear Camera 48-megapixel + 8-megapixel + 2-megapixel
RAM 4GB
Storage 64GB
Battery Capacity 4000mAh
OS Android 9 Pie
Resolution 720x1560 pixels
 
NEWS

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. iPhone 17 Air: 5.5mm மெல்லிய டிசைன், ₹80,000-க்கு 5G! ஆப்பிளின் புது ஸ்லிம் ஹீரோ!
  2. Apple Watch Series 11, Ultra 3, SE 3: 5G RedCap, S11 சிப், சாட்டிலைட் SOS! #AweDropping இவென்டில் அறிமுகம்! #AppleWatch
  3. iPhone 17 Pro-ல 8X ஜூம், 5,000mAh பேட்டரி, வேப்பர் கூலிங்! 'Awe Dropping' இவென்டுக்கு முன் பெரிய லீக்ஸ்
  4. iPhone 17 Air, Watch Series 11, AirPods Pro 3! ஆப்பிளின் 'Awe Dropping' இவென்ட் இன்று 10:30 PM IST-ல லைவ்
  5. "இது வேற லெவல்!" - Apple-ன் 'Awe Dropping' நிகழ்வு! iPhone 17, Apple Watch Series 11, AirPods Pro 3-ல் என்னென்ன எதிர்பார்க்கலாம்?
  6. 7,000mAh பேட்டரி கொண்ட உலகின் முதல் போன்! Oppo F31 சீரிஸ் லீக் ஆகி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி!
  7. அவசர வேலைகளில் 'உதவாத' ஏர்டெல்! ஒரே வாரத்தில் இரண்டாவது முறை சேவை முடக்கம்
  8. மடக்கலாம், மிரட்டலாம்! Honor-ன் புது போன் சந்தையில் அறிமுகம்! விலை, சிறப்பம்சங்கள் இதோ!
  9. பெங்களூருவில் Apple-ன் புதிய கடை! செப்டம்பர் 2-ல் திறப்பு! என்ன ஸ்பெஷல்?
  10. இந்தியாவில் Pixel 10, Pixel 10 Pro, Pixel 10 Pro XL லான்ச்! ₹79,999-க்கு Google-ன் புது அஸ்திரம்
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.