ஹூவாய் நிறுவனத்திற்கு தடையா! விளக்கும் மத்திய அரசு!

ஹூவாய் நிறுவனத்திற்கு தடையா! விளக்கும் மத்திய அரசு!
விளம்பரம்

ஹூவாய் நிறுவனத்தின் போன்களை பாதுகாப்பு காரணங்களுக்காக பல நாடுகளில் தடை செய்யப்படப்போகிறது என்ற வதந்திகள் தொடர்ந்து வெளியாகி வருகிறது. பல நாடுகளில் இதற்கு தடை விதிக்கப்பட்டது என்று வந்த அறிவிப்பால் மக்களிடையே குழப்பம் ஏற்பட்டது.

மேலும் இந்த வதந்திகளை குறித்து டெலிக்ராம் செக்கரட்டரி அருணா சுந்தர ராஜனிடம் கேட்டபோது இந்தியாவை பொறுத்தவரை ஹூவாய் நிறுவனத்திற்கு தற்போது 5ஜி டேட்டா சோதிப்பதற்கு மட்டுமே அனுமதி வழங்கி இருப்பதாக கூறியுள்ளார்.

மேலும் அவர் அரசு 5ஜி டேட்டாவை அறிமுகப்படுத்துவதற்கு முன்னர் தக்க பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று கூறினார். மேலும் ‘இந்த தொழில்நுட்பத்தை முழுவதுமாக அமல் படுத்துவதற்கு முன்னர் அரசு சோதனை நடத்த மட்டுமே அனுமதிக்கும்' எனக் கூறினார்.

அமெரிக்கா, கனடா மற்றும் சில ஐரோப்பிய நாடுகள் சீன தயாரிப்பான ஹூவாய் நிறுவனத்தின் தயாரிப்புகளை பயன்படுத்த எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. மேலும் கடந்த வாரம் மத்திய தொலைதொடர்பு துறை அமைச்சர் இந்த பிராண்டை இந்தியாவில் தடை செய்ய இன்னும் எந்த நடவடிக்கை எடுக்கவில்லை என அறிவித்தார்.

Comments

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Huawei, Huawei 5G, DoT, Department of Telecommunications
பேஸ்புக்கில் பகிரலாம் Gadgets360 Twitter Shareட்வீட் பகிர் Snapchat ரெட்டிட்டில் கருத்து
 
 

விளம்பரம்

விளம்பரம்

© Copyright Red Pixels Ventures Limited 2024. All rights reserved.
Trending Products »
Latest Tech News »