இந்தியாவில் ரூ.71,990க்கு வெளியாகியுள்ள இந்த ஹூவாய் P30 ப்ரோ ஸ்மார்ட்போன், 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி சேமிப்பு வசதியை கொண்டுள்ளது.
இந்தியாவில் ரூ.71,990க்கு ஹூவாய் P30 ப்ரோ ஸ்மார்ட்போன் விற்பனை செய்யப்படுகிறது.
ஹூவாய் P30 ப்ரோ (Huawei P30 Pro) ஸ்மார்ட்போன் இந்தியாவில் இன்று அறிமுகமாகியுள்ளது. கடந்த மாதம் பாரிஸ் நகரத்தில் ஹூவாய் P30 ஸ்மார்ட்போனுடன் அறிமுகமான இந்த தயாரிப்பு, உலகமெங்கும் இருக்கும் ஆண்ட்ராய்டு வாடிக்கையாளர்களால் அதிகமாக எதிர்பார்கப்பட்டது.
பின்புறத்தில் நான்கு சிறப்பு அமைப்புகளை கொண்ட கேமராக்கள், வயர்லஸ் சார்ஜிங் வசதி, இன்-டிஸ்பிளே ஃபிங்கர் பிரின்ட் சென்சார், தூசி மற்றும் தண்ணீர் புகா வசதி இருப்பதற்கான IP68- சான்றிதழ் மற்றும் 7nm ஹைய்சிலிகான் கீரிண் 980 SoC போன்ற பல முக்கிய அமைப்புகளை இந்த ஸ்மார்ட்போன் கொண்டுள்ளது.
இந்தியாவில் ரூ.71,990க்கு விற்பனை செய்யப்படும் ஹூவாய் P30 ப்ரோ ஸ்மார்ட்போன், 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி சேமிப்பு வசதியை கொண்டுள்ளது. இந்த தயாரிப்பு அரோரா மற்றும் பீரிதிங் கிரிஸ்டல் நிறங்களில் வெளியாகிறது.
அமேசான் இந்தியா மற்றும் குரோமா கடைகளில் இந்த ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வெளியாகிறது. அதில் அமேசான் தளத்தில் வாங்குபவர்களுக்கு 5 சதவிகுதம் கேஷ்பேக் மற்றும் கட்டணமில்லா தவனை திட்டம் போன்ற வசதிகள் வழங்கப்படுகிறது.
இந்த போனுடன் ஜியோ நிறுவனம் சார்பில் ரூ.2,200 கேஷ்பேக், 5 ரீசார்ஜ்களுக்கு டபுள் டேட்டா ஆஃபர் மற்றும் ரூ.10,000 மதிப்புள்ள சேவைகள் இலவசமாக வழங்கப்படுகிறது. மேலும் அறிமுக சலுகையாக இந்த போனுடன் (ரூ.15,990) மதிப்புள்ள ஹூவாய் வாட்ச் ஜிடி-யை வாங்குபவர்களுக்கு கூடுதலாக ரூ.2,000 தள்ளுபடியாக கிடைக்கிறது.
அமேசான் பிரைம் வாடிக்கையாளர்களுக்கு வரும் ஏப்ரல் 15 ஆம் தேதி முதல் இந்த ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வெளியாகின்ற நிலையில் மற்ற வாடிக்கையாளர்களுக்கு ஏப்ரல் 16 ஆம் தேதி முதல் இந்த போன் விற்பனை செய்யப்படுகிறது. குரோமா ஸ்டோர்களில் இந்த போன்களுக்கான முன்பதிவு தொடங்கியுள்ள நிலையில், வரும் மே மாதம் முதல் விற்பனை செய்யப்படவுள்ளது.
இரண்டு சிம்-கார்டு ஸ்லாட்கள், ஆண்ட்ராய்டு 9.1 பைய் மென்பொருள், 6.47- இஞ்ச் OLED ஹெச்டி திரை, வாட்டர்-டிராப் டிசைன் திரை அமைப்பு மற்றும் இன்-டிஸ்பிளே ஃபிங்கர் பிரின்ட் போன்ற பல அமைப்புகளை இந்த ஹூவாய் P30 ப்ரோ ஸ்மார்ட்போன் கொண்டுள்ளது.
ஹூவாய் P30 ப்ரோ ஸ்மார்ட்போனில் ஆக்டா-கோர் ஹைய் சிலிகான் கீரிண் 980 SoC இடம்பெற்றுள்ளது. இந்த போனில் 8ஜிபி ரேம் வசதியும் (128/256/512) சேமிப்பு வசதி வகைகளும் அமைந்துள்ளது. பின்புறத்தில் குவாட்-கேமரா அமைப்பை பெற்றுள்ள இந்த ஹூவாய் P30 ப்ரோ ஸ்மார்ட்போன் 40-மெகா பிக்சல் முதற்கட்ட கேமரா சென்சார், 20 மெகா பிக்சல் இரண்டாம் நிலை சென்சார் மற்றும் 8 மெகா பிக்சல் டெலிஃபோட்டோ கேமரா சென்சாரை கொண்டுள்ளது.
இந்த தயாரிப்பில் வெப்பநிலை கொண்டு நிறத்தை தேர்வு செய்யும் சென்சார் மற்றும் ஃபிளிக்கர் சென்சார் நான்காவது கேமராவாக அமைந்துள்ளது. மேலும் இந்த தயாரிப்பில் சிறந்த செல்ஃபிகளுக்காக 32 மெகா பிக்சல் கேமரா பொருத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
4,200mAh பேட்டரி வசதி கொண்ட இந்த ஸ்மார்ட்போன் வயர்லஸ் சார்ஜிங் வசதியை பெற்றுள்ளது. அதுபோல் புளுடூத் 5.0, 4ஜி VoLTE, Wi-Fi 802.11ac, இன்ஃபரா ரெட் சென்சார் மற்றும் பிராக்சிமிட்டி சென்சார்போன்றவை இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹64,999
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
iPhone 18 Pro, iPhone 18 Pro Max Sale Today: India Price, Offers, and Everything Else You Need to Know