Pop-Up செல்ஃபி கேமராவுடன் வெளியானது Huawei P Smart Pro!

Pop-Up செல்ஃபி கேமராவுடன் வெளியானது Huawei P Smart Pro!

Huawei P Smart Pro-வானது Huawei Y9s-ன் ஐரோப்பிய மாடலாகத் தோன்றுகிறது

ஹைலைட்ஸ்
  • Huawei P Smart Pro பல ஐரோப்பிய சந்தைகளில் பட்டியலிடப்பட்டுள்ளது
  • Huawei போன் HiSilicon Kirin 710F SoC-யால் இயக்கப்படுகிறது
  • Huawei P Smart Pro இரண்டு தனித்துவமான வண்ண விருப்பங்களில் வருகிறது
விளம்பரம்

Pop-Up செல்ஃபி கேமராவுடன் Huawei P Smart Pro அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. Huawei Y9s-ன் ஐரோப்பிய வேரியண்டாக தோன்றும் ஹவாய் போன், Honor 9X உடன் இணையான தோற்றத்துடன் உலகளவில் அறிமுகப்படுத்தப்பட்டது. full-screen அனுபவத்துடன் வருகிறது. வாடிக்கையாளர்களை, முதல் பார்வையில் ஈர்க்க gradient back finish-ஐக் கொண்டுள்ளது. 


Huawei P Smart Pro-வின் விலை, கிடைக்கும் விவரங்கள்:

Huawei P Smart Pro-வின் ஒரே 6GB RAM + 128GB ஸ்டோரேஜ் மாடலின் விலை PLN 1,399 (சுமார் ரூ. 25,900) என நிர்ணயிக்கப்படுள்ளது. இது Midnight Black மற்றும் Breathing Crystal வண்ண விருப்பங்களில் வருகிறது. மேலும், பல்கேரியா, குரோஷியா, கிரீஸ், போலந்து மற்றும் உக்ரைன் போன்ற ஐரோப்பிய சந்தைகளில் பட்டியலிடப்பட்டுள்ளது. இருப்பினும், பிற பிராந்தியங்களில் அறிமுகமான விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.

நினைவுகூர, நவம்பர் மாதம் நிறுவனத்தின் உலகளாவிய தளத்தில் Huawei Y9s காணப்பட்டன. இந்த ஸ்மார்ட்போன் பாகிஸ்தானில் PKR 34,999 (சுமார் ரூ. 16,000) விலையுடன் அறிமுகமாகும் என்று வதந்தி பரவியது.


Huawei P Smart Pro-வின் சிறப்பம்சங்கள்:

டூயல்-சிம் (நானோ) Huawei P Smart Pro, EMUI 9.1 உடன் Android 9 Pie-ல் இயங்குகிறது. இது 19.5:9 aspect ratio உடன் 6.59-inch full-HD+ (1080x2340 pixels) TFT பேனலைக் கொண்டுள்ளது. ஹூட்டின் கீழ், இந்த ஸ்மார்ட்போன், 6GB RAM உடன் இணைக்கப்பட்டு, octa-core HiSilicon Kirin 710F SoC-யால் இயக்கப்படுகிறது. P Smart Pro-வின் டிரிபிள் ரியர் கேமரா அமிப்பில் f/1.8 lens உடன் 48-megapixel முதன்மை சென்சார் மற்றும் f/2.4 ultra-wide-angle lens உடன் 8-megapixel இரண்டாம் நிலை சென்சாரைக் கொண்டுள்ளது. இதில், portrait bokeh effects-ஐ செயல்படுத்த f/2.4 lens 2-megapixel depth சென்சாரும் உள்ளது.

மைக்ரோ ஸ்மார்ட் கார்டு வழியாக (512 ஜிபி வரை) விரிவாக்கக்கூடிய P Smart Pro-வில் 128 ஜிபி UFS 2.1 ஸ்டோரேஜை ஹவாய் வழங்கியுள்ளது. இணைப்பு விருப்பங்களில்4G LTE, Wi-Fi 802.11 b/g/n, Bluetooth v4.2, GPS/ A-GPS, USB Type-C மற்றும் 3.5mm headphone jack ஆகியவை அடங்கும். போனில் உள்ள சென்சார்களில் ambient light sensor, gravity sensor, gyroscope, magnetometer மற்றும் proximity சென்சார் ஆகியவை அடங்கும்.

எந்தவொரு விரைவான சார்ஜிங் தொழில்நுட்பத்தையும் ஆதரிக்காத 4,000mAh பேட்டரியை Huawei P Smart Pro பேக் செய்கிறது. கடைசியாக, இந்த போன் 163.1x77.2x8.8mm அளவீட்டையும், 206 கிராம் எடையும் கொண்டது.

 

Huawei Y9s With Kirin 710F, Triple Rear Cameras Goes Official

Huawei Y9s Said to Be Global Variant of Honor 9X, Launch Soon With Pop-Up Selfie Camera

  • KEY SPECS
  • NEWS
Display 6.59-inch
Processor HiSilicon Kirin 710F
Front Camera 16-megapixel
Rear Camera 48-megapixel + 8-megapixel + 2-megapixel
RAM 6GB
Storage 128GB
Battery Capacity 4000mAh
OS Android Pie
Resolution 1080x2340 pixels
Comments

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

பேஸ்புக்கில் பகிரலாம் Gadgets360 Twitter Shareட்வீட் பகிர் Snapchat ரெட்டிட்டில் கருத்து
#சமீபத்திய செய்திகள்
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »