2020 முதல் காலாண்டில் Huawei Mate Xs என அழைக்கப்படும் Mate X மடிக்கக்கூடிய போனின் புதுப்பிக்கப்பட்ட பதிப்பை அறிமுகப்படுத்துவதாக ஹவாய் சமீபத்தில் உறுதிப்படுத்தியது. இப்போது, Huawei Mate Xs சீனாவில் கட்டாய 3C சான்றிதழைப் பெற்றதாகக் கூறப்படுகிறது. Mate Xs ஒரு விரைவான பிராசசர், சுத்திகரிக்கப்பட்ட கீல் பொறிமுறை மற்றும் ஒட்டுமொத்தமாக நீடித்த மற்றும் நெகிழக்கூடிய கட்டமைப்பை வழங்குவதன் மூலம் Huawei Mate X மேம்படும் என்று கூறப்படுகிறது. ஆனால், வடிவமைப்பு அதன் முன்னோடிக்கு இணையாகவோ அல்லது குறைவாகவோ இருக்கும்.
மாடல் எண் TAH-AN00m-ஐக் கொண்ட ஒரு ஹவாய் போன், Huawei Mate Xs எனக் குறிக்கப்படுகிறது. இது சீனாவில் 3C-யால் சான்றிதழ் பெற்றதாக ITHome தெரிவித்துள்ளது. போனின் சான்றிதழ் பட்டியலில், இது 65W ஃபாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கும் என்று குறிப்பிடுகிறது. இது Oppo Reno 3C-யில் சமீபத்தில் பார்த்த Oppo's 65W சார்ஜிங் தொழில்நுட்பத்தின் அதே லீக்கில் வைக்கிறது. மேலும், அடுத்த ஆண்டு Xiaomi போன்களிலும் இதுபோன்ற ஒன்றைக் காண்போம்.
Huawei Mate Xs, Kirin 990 SoC-ஐ பேக் செய்வது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், இரட்டை-பயன்முறை 5G (SA + NSA) இணைப்பு ஆதரவோடு ஒருங்கிணைந்த 5G மோடமுடன் வரும். மறுபுறம், Huawei Mate X, 5G இணைப்பை அனுமதிக்க Kirin 990 SoC உடன் Balong 5000 மோடம் பொருத்தப்பட்டிருந்தது.
வேகமான பிராசசரைத் தவிர, Huawei Mate Xs அதன் முன்னோடியுடன் ஒப்பிடும்போது சில வடிவமைப்பு மாற்றங்களைக் கொண்டுவருவதாகவும் கூறப்படுகிறது. அதாவது மிகவும் திறமையான கீல் பொறிமுறை. மேலும், இது Huawei Mate X உடன் ஒப்பிடும்போது மிகவும் நீடித்த டிஸ்பிளே தொழில்நுட்பத்தைக் கொண்டிருக்கும். மேற்பரப்பில், வடிவமைப்பு மாற்றங்கள் பெரியதாக இருக்காது. ஆனால், Huawei Mate Xs உள்ளே மிக வேகமான போனாக இருக்கும். மேலும், இது போனில் நிறுவப்பட்ட கூகுளின் செயலிகள் தொகுப்பு இல்லாமல் HMS கோரைப் பயன்படுத்தும்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்