லண்டனில் கடந்த மாதம் நடைபெற்ற உலகளாவிய நிகழ்ச்சி ஒன்றில் ஹூவாய் மேட் 20 ப்ரோ அறிமுகப்படுத்தப்பட்டது.
ஹூவாய் மேட் 20 ப்ரோ விலை குறித்து எந்த தகவலும் வரவில்லை
ஹூவாய் நிறுவனம் அதன் முன்னணி தயாரிப்பான மேட் 20 ப்ரோவினை இந்தியாவில் இன்று வெளியிட உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் முதல்முறையாக 7என்.எம் ஹாய்சிலிகான் கிரின் 980 SoC இயங்குகிறது. ஹூவாய் மேட் சீரிஸ்கள் இந்தியாவில் அறிமுகமாவது இதுவே முதல் முறையாகும்.
மேலும் இதில் ட்ரிபிள் கேமரா செட்ஆப் கொண்டுள்ளதே இதன் முக்கியம்சம். முன்னதாக வெளிவந்த ஹூவாய் பி20 ப்ரோவில் உள்ளது போல இதிலும் இந்த ட்ரிபிள் கேமரா பயன்படுத்தப்பட்டுள்ளது. ஹூவாய் நிறுவனம் வயர்லெஸ் சார்ஜிங் டெக்னாலஜி, வாட்டர் ரெசிஸ்டன்ஸ் உள்ளிட்ட அம்சங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த ஸ்மார்ட்போன் பிரத்தியோகமாக அமேசான் இந்தியாவில் கிடைக்கிறது. டெல்லியில் இன்று காலை இதன் அறிமுகவிழா நடைபெறுகிறது. ஹூவாய் மேட் 20 ப்ரோ அறிமுக நிகழ்ச்சியை இங்கு நேரடியாக காணலாம்.
6ஜிபி ரேம்/ 128ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ஹூவாய் மேட் 20 ப்ரோவின் ஆரம்ப விலை EUR 1,049(ரூ.88,400). 8ஜிபி ரேம்/256ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட மாடல் ஹூவாய் தள பட்டியலில் உள்ளது. அதன் விலை குறிப்பிடப்படவில்லை. இதுவும் பிற ஹூவாய் போன்களை போன்றதே, இந்தியாவில் ஹூவாய் மேட் 20 ப்ரோ பிரத்தியோகமாக Amazon.in-ல் விற்பனையாகிறது.
— Huawei India (@HuaweiIndia) November 27, 2018
மேட் 20 ப்ரோ ஆண்ட்ராய்டு பையை அடிப்படையாகக் கொண்டு EMUI 9.0 சாப்ட்வேரில் இயங்குகிறது. 6.39 இன்ச் QHD+(1440x3120 pixels) ஓஎல்இடி டிஸ்பிளே 19:5:9 மற்றும் 86.9 சதவீதம் என்ற வீதத்தில் மொபைல் அளவு இருக்கும்.
(256 ஜிபி வரை) நானோ மெம்மரி கார்டினை பயன்படுத்திக் கொள்ளலாம். 7என்.எம் ஹாய்சிலிகான் கிரின் 980 SoC கொண்டுள்ளது. மேட் 20 ப்ரோவின் பின்புறத்தில் மூன்று கேமிராக்கள் உள்ளன. 24 மெகா பிக்சல் செல்ஃபி கேமிரா உள்ளது. இதில் 4,200 mAh பேட்டரி உள்ளது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Dining With The Kapoors OTT Release Date Revealed: Know When and Where to Watch it Online
Stranger Things Season 5 OTT Release Date: Know When and Where to Watch it Online
Nishaanchi (2025) Now Available for Rent on Amazon Prime Video: What You Need to Know