48 மெகாபிக்சல் டிரிபிள் கேமராக்களுடன் Huawei Enjoy Z 5G அறிமுகம்!

விளம்பரம்
Written by Kathiravan Gunasekaran மேம்படுத்தப்பட்டது: 25 மே 2020 12:26 IST
ஹைலைட்ஸ்
  • Huawei Enjoy Z 5G-யில் 4,000 எம்ஏஎச் பேட்டரி உள்ளது
  • போனின் பின்புறத்தில் 48 மெகாபிக்சல் பிரதான கேமரா உள்ளது
  • Huawei Enjoy Z 5G 16 மெகாபிக்சல் செல்பி கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது

Huawei Enjoy Z 5G பிளாக், ப்ளூ மற்றும் பிங்க் ஆகிய மூன்று வண்ணங்களில் வருகிறது.

Huawei Enjoy Z 5G சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. போனில் 48 மெகாபிக்சல் பிரதான கேமராவுடன் பின்புறத்தில் மூன்று பின்புற கேமரா அமைப்பு உள்ளது. பின்புற கேமராக்கள் செவ்வக தொகுதிக்குள் பின்புற பேனலின் மேல் இடது மூலையில் வைக்கப்பட்டுள்ளன. இந்த போன் மூன்று வண்ணங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 


போனின் விலை:

சீனாவில் 6 ஜிபி ரேம் + 64 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட Huawei Enjoy Z 5G-யின் விலை சிஎன்ஒய் 1,699 (இந்திய மதிப்பில் சுமார் ரூ.18,900) ஆகும். அதன் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜின் விலை சிஎன்ஒய் 1,899 (இந்திய மதிப்பில் சுமார் ரூ.20,200) மற்றும் 
8 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜின் விலை சிஎன்ஒய் 2,199 (இந்திய மதிப்பில் சுமார் ரூ.23,400) ஆகும். 

இந்த போன் பிளாக், ப்ளூ மற்றும் பிங்க் ஆகிய மூன்று வண்ணங்களில் வருகிறது. இந்த போன் ஏற்கனவே சீனாவில் Vmall வழியாக விற்பனைக்கு வந்துள்ளது.


போனின் விவரங்கள்:

ஹைப்ரிட் டூயல் சிம் (நானோ + நானோ / என்எம் கார்டு) கொண்ட Huawei Enjoy Z 5G ஆண்ட்ராய்டு 10 உடன் EMUI 10.1-ல் இயங்குகிறது. இது 6.57 அங்குல முழு-எச்டி + (1080x2400 பிக்சல்கள்) எல்சிடி டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. போனின் உள்ளே மீடியாடெக் டைமன்சிட்டி 800 ஆக்டா கோர் செயலி, 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் உள்ளது.

போனில் ஒரு டிரிபிள் கேமரா அமைப்பு உள்ளது. அதில் 48 மெகாபிக்சல் பிரதான கேமரா, 8 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் கேமரா மற்றும் 2 மெகாபிக்சல் மேக்ரோ கேமரா ஆகியவை உள்ளது. செல்ஃபி எடுக்க 16 மெகாபிக்சல் செல்பி சென்சார் உள்ளது. இது வாட்டர் டிராப் நாட்சில் உள்ளது.

இணைப்பிற்காக, இந்த போனில் வைஃபை 802.11 ஏசி, 5 ஜி, யூ.எஸ்.பி டைப்-சி, ஜி.பி.எஸ் மற்றும் 3.5 மி.மீ ஆடியோ ஜாக் ஆகியவை உள்ளன. போனின் உள்ளே 22.5W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 4,000 எம்ஏஎச் பேட்டரி உள்ளது. Huawei Enjoy Z 5G எடை 182 கிராம் ஆகும்.

 
KEY SPECS
Display 6.57-inch
Front Camera 16-megapixel
Rear Camera 48-megapixel + 8-megapixel + 2-megapixel
RAM 6GB
Storage 64GB
Battery Capacity 4000mAh
OS Android 10
Resolution 1080x2400 pixels
 
NEWS

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. ₹43,000-க்கு புது Nothing போன்! Phone 4a Pro-ல eSIM சப்போர்ட், புது பிங்க் கலர்! ஆடியோவுல 'Headphone a' வருது
  2. WhatsApp-ல இனி Missed Call வந்தா Voice Message அனுப்பலாம்! புது ஆப்ஷன் வந்துருச்சு! நீங்க ட்ரை பண்ணீங்களா?
  3. WhatsApp-ல இனி Missed Call வந்தா Voice Message அனுப்பலாம்! புது ஆப்ஷன் வந்துருச்சு! நீங்க ட்ரை பண்ணீங்களா?
  4. 45W-க்கு இனி டாட்டா! Galaxy S26 Ultra-ல் 60W சார்ஜிங் வருது! Wireless-ல 25W! சாம்சங் ஃபேன்ஸ் இதைத்தான் கேட்டாங்க
  5. புது Foldable போன்! Huawei Mate X7: 88W சார்ஜிங், 5x ஆப்டிகல் ஜூம்! இந்தியால வருமா?
  6. AI-ல அடுத்த புரட்சி! GPT-5.2-ல என்னென்ன இருக்குன்னு பாருங்க! இமேஜை பார்த்து முடிவெடுக்கும் AI
  7. Oppo Reno 15C வருது! 64MP கேமரா, 100W சார்ஜிங்! இந்த Reno சீரிஸ் மாடல் இந்திய மார்க்கெட்டை கலக்குமா?
  8. Galaxy S26: கேமரா அப்கிரேட் ரத்து; விலை கட்டுக்குள் வைக்க Samsung திட்டம்
  9. புது போன் வாங்க வெயிட் பண்ணுங்க! Realme 16 Pro+ வருது! பெரிஸ்கோப் கேமரா, 7000mAh பேட்டரி: வேற லெவல் டீஸ்
  10. Realme Narzo 90 Series: 7000mAh பேட்டரி, 144Hz டிஸ்பிளே உடன் லான்ச்!
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.