கூகுள் உருவாக்கிய Android Debug Bridge (ADB) எனும் சக்திவாய்ந்த கட்டளைக் கருவியைப் (Command line tool) பயன்படுத்தி இந்தப் பதிவிறக்கக் காத்திருப்பினைப் பயனர்கள் தவிர்க்கலாம்
Photo Credit: Unsplash/ Mika Baumeister
கூகிள் தனது புதுப்பிக்கப்பட்ட சைடுலோடிங் கட்டுப்பாடுகளை 2026 செப்டம்பர் மாதம் முதல் வெளியிடத் தொடங்கும்.
கூகுள் தனது ஆண்ட்ராய்டு பாதுகாப்பு கொள்கைகளில் மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது. இது கூகுள் பிளே ஸ்டோர் (Google Play Store) தவிர்த்து மற்ற வழிகளில் பதிவிறக்கம் செய்யப்படும் செயலிகளைப் பாதிக்கும். பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் கொண்டு வரப்பட்டுள்ள முக்கிய மாற்றங்களில் ஒன்று, சரிபார்க்கப்படாத (Unverified) மென்பொருள் உருவாக்குநர்களிடமிருந்து செயலிகளைப் பதிவிறக்கும் போது (Sideload), 24 மணிநேரம் காத்திருக்க வேண்டும் என்பதாகும். மோசடிகள் மற்றும் மால்வேர் தாக்குதல்களைக் கட்டுப்படுத்தவே இந்த நடவடிக்கை என கூகுள் கூறுகிறது. இந்த மாற்றங்கள் அமலுக்கு வர இன்னும் சில மாதங்கள் இருந்தாலும், அடிக்கடி செயலிகளை சைடுலோடு செய்யும் பயனர்களுக்கு இது எரிச்சலை ஏற்படுத்தலாம்.
அதிர்ஷ்டவசமாக, கூகுள் உருவாக்கிய Android Debug Bridge (ADB) எனும் சக்திவாய்ந்த கட்டளைக் கருவியைப் (Command line tool) பயன்படுத்தி இந்தப் பதிவிறக்கக் காத்திருப்பினைப் பயனர்கள் தவிர்க்கலாம். இது குறித்து நீங்கள் அறிய வேண்டியவை இங்கே:
கூகுளின் புதிய 'டெவலப்பர் சரிபார்ப்பு முறை', பிளே ஸ்டோருக்கு வெளியே செயலிகள் நிறுவப்படுவதைக் கட்டுப்படுத்தும். புதிய விதிகளின்படி, சரிபார்க்கப்பட்ட டெவலப்பர்களிடமிருந்து மட்டுமே ஆண்ட்ராய்டு போன்கள் செயலிகளை நிறுவும். இதற்கு டெவலப்பர்கள் தங்கள் அடையாளச் சான்று, 'ஆப் சைனிங் கீ' (App signing keys) ஆகியவற்றைச் சமர்ப்பித்து, கட்டணம் செலுத்திச் சரிபார்ப்பை முடிக்க வேண்டும்.
இதன் விளைவாக, சரிபார்க்கப்படாத டெவலப்பர்களின் செயலிகள் இயல்பாகவே தடுக்கப்படும். இத்தகைய செயலிகளை நிறுவ விரும்பும் பயனர்கள், 'டெவலப்பர் செட்டிங்ஸில்' (Developer Settings) மறைந்துள்ள ஒரு விருப்பத்தை (Bypass option) இயக்க வேண்டும். இது வேண்டுமென்றே சற்று சிக்கலானதாக மாற்றப்பட்டுள்ளது. இந்தச் செயல்முறையை முடித்த பிறகும், 24 மணிநேரப் பாதுகாப்புக் காத்திருப்பு காலத்தைக் கடந்தே செயலியை நிறுவ முடியும்.
சமூகப் பொறியியல் (Social engineering) தாக்குதல்களைத் தடுக்கவே இந்தத் தாமதம் என்று கூகுள் கூறுகிறது. பயனர்களைக் கட்டாயப்படுத்தி உடனடியாக தீங்கிழைக்கும் மென்பொருள்களை நிறுவ வைப்பதைத் தடுத்து, சரிபார்ப்பிற்குத் தேவையான கால அவகாசத்தை இது வழங்குகிறது.
ADB என்பது கணினி மூலம் ஆண்ட்ராய்டு சாதனத்துடன் தொடர்புகொள்ளப் பயன்படும் ஒரு கருவியாகும். பொதுவாக டெவலப்பர்கள் பிழைகளைத் திருத்த (Debugging) இதைப் பயன்படுத்தினாலும், சிஸ்டம் கமாண்டுகளை (System commands) இயக்கவும் இது பயன்படும்.
ஆண்ட்ராய்டின் புதிய கட்டுப்பாடுகளின் சூழலில், 24 மணிநேரக் காத்திருப்பினைத் தவிர்க்க ADB ஒரு மாற்றாக அமைகிறது. இது ஆப் சரிபார்ப்புடன் தொடர்புடைய அமைப்புகளை நேரடியாக மாற்றுவதன் மூலம் செயல்படுகிறது. இதற்கு யுஎஸ்பி டீபக்கிங் (USB Debugging) வசதியை இயக்க வேண்டும். தொழில்நுட்ப அறிவு உள்ளவர்கள் மட்டுமே இதைப் பயன்படுத்த வேண்டும். மேலும், டெவலப்பர் ஆப்ஷன்களை இயக்குவது வங்கிச் செயலிகள் போன்ற சில ஆப்ஸ்கள் இயங்குவதைப் பாதிக்கலாம் என்பதை நினைவில் கொள்க.
எச்சரிக்கை: மால்வேர் மற்றும் மோசடிகளிலிருந்து உங்களைப் பாதுகாக்கவே கூகுள் இத்தகைய தடைகளை வைத்துள்ளது. இவற்றைத் தவிர்ப்பது உங்கள் சாதனத்திற்குப் பாதிப்பை ஏற்படுத்தலாம். எனவே, நம்பகமான மூலங்களிலிருந்து மட்டுமே செயலிகளைப் பதிவிறக்கவும்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹59,805
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Lenovo ThinkBook 14x Launched in India With Intel Core Ultra Series 2 Processors: Price, Specifications