Photo Credit: Honor
நீங்கள் பட்ஜெட் விலையில் புதிதாக ஸ்மார்ட்போன், வாட்ச், ஸ்பீக்கர் உட்பட எது வாங்க திட்டமிடுகிறீர்கள் என்றாலும் இந்த பதிவு உங்களுக்கானது மக்களே. நீங்கள் எதிர்பார்க்கும் விலைக்குள் எந்த ஸ்மார்ட்போன் சிறந்தது? எந்த போன் சிறந்த பெர்பார்மென்ஸை கொண்டுள்ளது? எந்த போனில் கேமரா அம்சம் மிரட்டலாக இருக்கிறது? எந்த போனில் டிஸ்பிளே சூப்பராக அமைந்துள்ளது? எது பட்ஜெட்டில் சூப்பர் போன்? என்பது போன்ற விபரங்களை நாங்கள் உங்களுக்கு விளாவாரியாக சொல்லப்போகிறோம். இப்போ நாம் பார்க்க இருப்பதுHonor X60 செல்போன்சீரியஸ் பற்றி தான்.
Honor X60 செல்போன் சீரியஸ் சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. Honor X60, Honor X60 Pro ஆகிய இரண்டு மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இரண்டு மாடல்களும் 108 மெகாபிக்சல் முதன்மை பின்புற கேமராக்கள் போன்ற சில அம்சங்களை கொண்டுள்ளன. இந்த செல்போன் Dimensity 7025-Ultra சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. அதே நேரத்தில் Honor X60 Pro மாடல் ஸ்னாப்டிராகன் சிப்செட்டுடன் வருகிறது.
Honor X60 8ஜிபி ரேம் 128ஜிபி மெமரி மாடல் தோராயமாக ரூ. 14,000 விலையில் தொடங்குகிறது. மேலும் 12ஜிபி வரை ரேம் மற்றும் 512ஜிபி வரை மெமரியும் கொண்ட மாடல்களும் உள்ளது. மூன்று வண்ணங்களில் கிடைக்கிறது. எலிகண்ட் பிளாக், மூன்லைட் மற்றும் சீ லேக் கின் ஆகிய வண்ணங்களில் இப்போது கிடைக்கிறது.
Honor X60 Pro 8GB ரேம் 128GB மெமரி மாடல் ரூ. 18,000 விலையில் தொடங்குகிறது. சாம்பல், கருப்பு, ஆரஞ்சு மற்றும் கடல் பச்சை என மொத்தம் நான்கு வண்ணங்களில் இதை வாங்கலாம்.
Honor X60 ஆனது 6.8 இன்ச் TFT LCD திரையுடன் வருகிறது. இது 120Hz புதுப்பிப்பு வீதம் மற்றும் 2412×1080 பிக்சல்கள் கொண்டது. MediaTek Dimensity 7025-Ultra chipset மூலம் இயக்கப்படுகிறது. இது 2.5GHz வேகத்தில் இயங்கும் இரண்டு Cortex-A78 கோர்கள் மற்றும் 2.0GHz கடிகார வேகம் கொண்ட இரண்டு Cortex-A55 கோர்களை உள்ளடக்கிய ஒரு octa-core CPU கொண்டுள்ளது. 12ஜிபி வரை ரேம் மற்றும் 512ஜிபி வரை மெமரி இதில் இருக்கிறது.
இது 35W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் உடன் 5,800mAh பேட்டரியை கொண்டுள்ளது. இந்த மாடலில் பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை சென்சார் உள்ளது.
மறுபுறம் Honor X60 Pro ஆனது 2700×1224 பிக்சல்கள் மற்றும் 120Hz புதுப்பிப்பு வீதத்துடன் கூடிய 6.78-இன்ச் AMOLED திரையை கொண்டுள்ளது. இது குவால்காமின் ஸ்னாப்டிராகன் 6 ஜெனரல் 1 செயலி மூலம் இயக்கப்படுகிறது. 2.2GHz உச்ச கடிகார வேகத்தில் இயக்கப்படுகிறது. 12ஜிபி வரை ரேம் மற்றும் 512ஜிபி வரை மெமரியுடன் வருகிறது. Wi-Fi அல்லது செல்லுலார் நெட்வொர்க் கவரேஜ் இல்லாத சூழ்நிலைகளில் இது இருவழி செயற்கைக்கோள் தொடர்புகளையும் சப்போர்ட் செய்யும். Honor X60 இரண்டு மாடல்களும் 108 மெகாபிக்சல் முதன்மை பின்புற கேமரா மற்றும் 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. முன்புறத்தில் 8 மெகாபிக்சல் முன் செல்ஃபி கேமரா இடம்பெற்றுள்ளது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்