10,000mAh பேட்டரியா? ஹானர் வின் (Honor Win) சீரிஸ் டிசைன் மற்றும் கலர்ஸ் வெளியானது

விளம்பரம்
Written by Gadgets 360 Staff மேம்படுத்தப்பட்டது: 17 டிசம்பர் 2025 14:04 IST
ஹைலைட்ஸ்
  • டிசம்பர் 26 அன்று சீனாவில் பிரம்மாண்டமாக அறிமுகமாகிறது
  • Honor Win மற்றும் Honor Win RT என இரண்டு மாடல்கள்
  • மிங்கிற்காகவே பிரத்யேகமாக 'ஆக்டிவ் கூலிங் ஃபேன்' மற்றும் ஸ்னாப்டிராகன் 8

ഹോണർ വിൻ, വിൻ ആർടി ഫോണുകളുടെ ഡിസൈൻ, കളർ ഓപ്ഷനുകൾ, ലോഞ്ച് വിവരങ്ങൾ പുറത്തായി

Photo Credit: Honor

ஸ்மார்ட்போன் உலகத்துல இப்போ ஹானர் (Honor) தான் ஹாட் டாப்பிக். அவங்களோட புதுசு கண்ணா புதுசான "Honor Win" சீரிஸ் பத்தின அதிகாரப்பூர்வமான தகவல்கள் இப்போ வெளியாகி பட்டைய கிளப்பிட்டு இருக்கு. வழக்கமா ஹானர்ல GT சீரிஸ்னு ஒன்னு வரும், இப்போ அதை "Win" சீரிஸ்னு ரீ-பிராண்ட் பண்ணி ஒரு முழு நீள கேமிங் மொபைலா கொண்டு வர்றாங்க.

டிசம்பர் 26-ஆம் தேதி இந்த போன் லான்ச் ஆகப்போகுது. இதுல Honor Win மற்றும் Honor Win RT-னு ரெண்டு மாடல்கள் வருது. இதோட டிசைனை பார்த்தாலே தெரியுது, இது முழுக்க முழுக்க கேமர்களுக்கான ஒரு போன்னு. போனோட பின்னாடி ஒரு பெரிய செவ்வக வடிவ கேமரா மாட்யூல் இருக்கு. அதுல ஒரு ஸ்பெஷல் விஷயம் என்னன்னா, போன் சூடாகாம இருக்க ஒரு 'ஆக்டிவ் கூலிங் ஃபேன்' (Active Cooling Fan) உள்ளேயே கொடுத்திருக்காங்க. இது கேமிங் விளையாடும்போது போன் லேக் ஆகாம பாத்துக்கும்.

நழுவாது, கறையும் படியாது

டிசைன்ல இன்னொரு முக்கியமான விஷயம், இதோட பின்னாடி 'மேட் பினிஷ்' (Matte Finish) கொடுத்திருக்காங்க. இதனால கேம் விளையாடும்போது கை வேர்த்தாலும் போன் நழுவாது, கறையும் படியாது. கலர் ஆப்ஷன்ஸை பொறுத்தவரை பிளாக், ஒயிட் மற்றும் ப்ளூ ஆகிய மூணு கிளாஸிக் கலர்ஸ்ல வருது.

ஸ்பெக்ஸ்னு பார்த்தா, Honor Win மாடல்ல மூணு கேமராக்களும், Win RT மாடல்ல ரெண்டு கேமராக்களும் இருக்கு. மெயின் கேமரா 50MP-ன்னு சொல்லப்படுது. இதுல இருக்குறதுலயே லேட்டஸ்டான ஸ்னாப்டிராகன் 8 எலைட் (Snapdragon 8 Elite) சிப்செட் இருக்கும்னு எதிர்பார்க்கப்படுது. அதனால வேகம் பத்தி சொல்லவே வேணாம், ராக்கெட் மாதிரி இருக்கும்!

பேட்டரி விஷயத்துல தான் ஹானர் ஒரு பெரிய குண்டைத் தூக்கிப் போட்டிருக்காங்க. சில தகவல்களின்படி, இதுல 8,500mAh அல்லது சில வேரியண்ட்களில் 10,000mAh பேட்டரி கூட இருக்கலாம்னு பேச்சு அடிபடுது. அப்படி இருந்தா, சார்ஜ் பத்தின கவலையே இல்லாம நாள் பூரா கேம் விளையாடலாம். கூடவே 100W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் இருக்கு.

மொத்தத்துல, பட்ஜெட்ல ஒரு பவர்ஃபுல் கேமிங் போன் வேணும்னு நினைக்கிறவங்களுக்கு இந்த 2026-ன் தொடக்கமே அமர்க்களமா இருக்கப்போகுது. டிசம்பர் 26 அன்னைக்கு இதோட மத்த எல்லா ரகசியங்களும் தெரிஞ்சுடும். நீங்க இந்த போனுக்காக வெயிட் பண்றீங்களா? கமெண்ட்ல சொல்லுங்க!

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Honor Win, Win RT design, Honor Win series, Honor

குடியுரிமை ரோபோ. எனக்கு மின்னஞ்சல் அனுப்பினால், ஒரு மனிதர் பதிலளிப்பார்.

...மேலும்
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. கேமிங் கிங் ரெடி! ஜனவரி 15-ல் லான்ச் ஆகும் iQOO Z11 Turbo - மிரட்டலான சிறப்பம்சங்கள் கசிந்தது
  2. கேமராவுக்கே சவால் விடும் 200MP லென்ஸ்! புது வரவு Oppo Reno 15 சீரிஸ் - விலை மற்றும் சிறப்பம்சங்கள் இதோ
  3. இன்பினிக்ஸின் பலமான ஆட்டம் ஆரம்பம்! 6500mAh பேட்டரி மற்றும் புது XOS 16 உடன் வரும் Infinix Note Edge
  4. வெறும் ரூ. 15,999-க்கு ஒரு கார்வ்டு டிஸ்ப்ளே போனா? Poco M8 5G அதிரடி லான்ச்! சலுகை விவரங்கள் உள்ளே
  5. ஸ்லிம் போன்-ல இவ்வளவு பவரா? ஜனவரி 20-ல் வரும் Moto X70 Air Pro! Snapdragon 8 Gen 5 மற்றும் 50MP பெரிஸ்கோப் கேமரா
  6. நத்திங் (Nothing) பிராண்டின் அதிரடி! பட்ஜெட் விலையில் ஹெட்ஃபோன் மற்றும் வாட்ச் வருது
  7. டிசைன்ல சொக்க வைக்கும் Realme 16 Pro Series! கேமரால மிரட்டுது, விலையில அதட்டுது! முழு விபரம் உள்ளே
  8. Redmi-யின் அடுத்த ஆட்டம் ஆரம்பம்! 200MP கேமரா, வேற லெவல் டிஸ்ப்ளே - Redmi Note 15 5G முழு விவரம் இதோ
  9. இது போன் இல்ல... நடமாடும் பவர் பேங்க்! 10080mAh பேட்டரியுடன் HONOR Power 2 வந்துவிட்டது
  10. வீட்டுக்குள்ள ஒரு தியேட்டர்! சாம்சங்கின் புது 130-இன்ச் Micro RGB TV - கண்ணைப் பறிக்கும் கலர், கலக்கும் AI அம்சங்கள்
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.