48எம்.பி.,பேக் கேமரா, 25எம்.பி.,செல்பி கேமரா கொண்ட ஹானர் வியூ 20! - விலை தெரியுமா?

விளம்பரம்
Written by Gaurav Shukla மேம்படுத்தப்பட்டது: 7 ஜனவரி 2019 15:36 IST
ஹைலைட்ஸ்
  • ஹானர் வியூ 20 ஸ்மார்ட்போனானது அமேசானில் பிரத்தியோகமாக கிடைக்கும்.
  • இதில் 6.4-இன்ச் புல் எச்டி + (1080x2310 பிக்செல்ஸ்) டிஎப்டி டிஸ்பிளே கொண்
  • இந்த போன் ஆண்ட்ராய்டு 9.0 பை கொண்டு இயங்குகிறது.

ஹானர் வியூ 20 ஸ்மார்ட்போனானது சீனாவில் கடந்த டிசம்பரில் ஹானர் வி20 என்ற பெயரில் அறிமுகமானது.

ஹானர் வியூ 20 ஸ்மார்ட்போனானது இந்திய சந்தை வெளியிட்டுக்கு தயாராகி வருகிறது. இதன் வெளியிடானது இந்தியாவில் வரும் ஜன.29ஆம் தேதி இருக்கும் என தெரிகிறது. அமேசான் வலைதளமானது ஹானர் வியூ 20 ஸ்மார்ட்போனை பிரத்தியோகமாக விற்பனை செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது. எனினும் இதன் விலை விவரங்கள் வெளியிடப்படவில்லை. ஹூவாய் நிறுவனத்தின் துணை நிறுவனமான ஹானர் தற்போது 10க்கும் மேற்பட்ட மாடல்களை விற்பனை செய்து வருகிறது.

ஹானர் வியூ 20 ஸ்மார்ட்போனானது சீனாவில் டிசம்பர் மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது சர்வதேச சந்தையில் இந்த போன் வரும் ஜன.22ஆம் தேதி அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

ஹானர் வியூ 20 விலை, (எதிர்பார்க்கப்படுகிறது)

ஹானர் வியூ 20 ஸ்மார்ட்போனின் இந்திய விலை விவரம் இன்னும் அறிவிக்கப்படவில்லை, எனினும் சீன சந்தை விலையை வைத்து இந்தியாவில் எதிர்ப்பார்க்கும் விலை விவரங்கள், ஹானர் v20 6ஜிபி ரேம் + 128ஜிபி நினைவகம் கொண்ட போனின் விலையானது CNY 2,999 (தோராயமாக ரூ.30,400) ஆகும். 8ஜிபி ரேம் + 128ஜிபி கொண்ட போனின் விலையானது CNY 3,499 (தோராயமாக ரூ.35,500) ஆகும்.

இந்த போன் ப்ளூ, ரெட், மற்றும் மிட்நைட் பிளாக் உள்ளிட்ட நிறங்களில் கிடைக்கிறது. இதில் 8ஜிபி ரேம் + 256ஜிபி நினைவகம் கொண்ட போனின் விலையானது CNY 3,999 (தோராயமாக ரூ.40,600) ஆகும். இந்த போன் ஏற்கனவே சீன சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்தியாவில் வரும் ஜன.29முதல் அறிமுகமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹோல் பன்ச் செல்பி கேமரா சென்சார் போனின் இடதுபுறம் பொருத்தப்பட்டுள்ளது. இந்த போனின் வடிவமைப்பானது கிளாஸி கிரேடியண்ட் பினிஷிங் கொண்டுள்ளது. இதனுடன் டூயல் கேமரா செட்டப், கைரேகை சென்சாரும் உள்ளது.

ஹானர் வியூ 20 சிறப்பம்சங்கள்,

டூயல் சிம் கொண்ட ஹானர் வியூ 20 ஸ்மார்ட்போனானது, ஆண்ட்ராய்டு 9.0 பை கொண்டு இயங்குகிறது. 6.4-இன்ச் புல் எச்டி + (1080x2310 பிக்செல்ஸ்) டிஎப்டி டிஸ்பிளே 19.5:9 அக்செப்ட் ரேசியோ, 16.7 மில்லியன் கலர்கள் கொண்டுள்ளது.

இதில் ஆக்டோ கோர் ஹைசிலிகான் கிரின் 980 பிராசஸருடன் 8ஜிபி மற்றும் 6ஜிபி வேரியண்ட்களில் கிடைக்கிறது. இதன் நினைவகம் 128ஜிபி மற்றும் 256ஜிபி வகைகளில் கிடைக்கிறது. இதில் மைக்ரோ Sd கார்டு சப்போர்ட் கிடையாது.

ஹானர் வியூ 20 கேமரா,

ஹானர் வியூ 20 கேமராவை பொருத்தவரையில், 48 மெகா பிக்ஸெல்ஸ் சோனி IMX586 சென்சாருடன் f/1.8 அப்பர்ச்சர், 960fps ஸ்லோ மோஷன் வீடியோ ரெகார்டிங் சப்போர்ட், எச்டிஆர், எல்இடி பிளாஷ் கொண்டுள்ளது. முன்பக்கம் 25 மெகா பிக்ஸெல்ஸ் சென்சார் கொண்டுள்ளது.

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Powerful processor
  • Modern design
  • Good battery life
  • Bundled supercharger
  • Bad
  • Inconsistent face recognition
  • Hole-punch design might not appeal to everyone
 
KEY SPECS
Display 6.40-inch
Processor HiSilicon Kirin 980
Front Camera 25-megapixel
Rear Camera 48-megapixel
RAM 6GB
Storage 128GB
Battery Capacity 4000mAh
OS Android 9
Resolution 1080x2310 pixels
NEWS
VARIANTS

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. iPhone Fold-ல் iPad போன்ற UI, Split-Screen Apps ஆதரவு வரலாம்
  2. James Webb Space Telescope-ன் புதிய கண்டுபிடிப்பு: Jupiter ஆரோராவில் Io, Ganymede தடயங்கள்
  3. Meta Platforms மோசடி தடுப்பு கருவிகளை விரிவுபடுத்துகிறது – WhatsApp-ல் புதிய Device Link எச்சரிக்கை
  4. Xiaomi 17 Ultra இந்தியாவில் அறிமுகம் – 200 மெகாபிக்சல் Leica கேமரா, தொடர்ச்சியான Optical Zoom: விலை மற்றும் அம்சங்கள்
  5. Vivo Y51 Pro 5G இந்தியாவில் அறிமுகம் – 7,200mAh பேட்டரி, 50 மெகாபிக்சல் கேமரா: விலை மற்றும் விவரங்கள்
  6. iPhone 17 Pro கேமரா சோதனையில் Samsung Galaxy S26 Ultra-வை முந்தியது: DxOMark மதிப்பீடு
  7. OnePlus 15T வெள்ளை நிற மாடல் மற்றும் டிஸ்ப்ளே அம்சங்கள் வெளியீடு; சீனாவில் Pre-Order தொடக்கம்
  8. OnePlus Nord Buds 4 Pro இந்திய வெளியீட்டு தேதி, முக்கிய அம்சங்கள் மற்றும் கிடைக்கும் விவரங்கள் அறிவிப்பு
  9. Realme Note 80 6,300mAh பேட்டரி, 6.74-இஞ்ச் டிஸ்ப்ளே உடன் அறிமுகம்: விலை மற்றும் விவரக்குறிப்புகள் வெளியானது
  10. Lava Bold 2 5G இந்திய வெளியீட்டு தேதி அறிவிப்பு; Under-Display Fingerprint Scanner உறுதி
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.