ஹூவாய் நிறுவனத்தின் துணை நிறுவனமான ஹானர் தனது v20 மாடலின் விலை, சிறப்பம்சங்கள் உள்ளிட்ட தகவல்களை தற்போது வெளியிட்டுள்ளது
Photo Credit: Vmall
ஹானர் v20யில் டர்போ டெக்னாலஜியும் கொண்டுள்ளது.
ஹானர் v20 ஸ்மார்ட்போனானது சீனாவில் அறிமுகமானது. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ஹூவாய் நிறுவனத்தின் துணை நிறுவனமான ஹானர் தனது v20 மாடலின் விலை, சிறப்பம்சங்கள் உள்ளிட்ட தகவல்களை தற்போது வெளியிட்டுள்ளது.
சாம்சங் கேலக்ஸி A8s ஸ்மார்ட்போனை தொடர்ந்து, இன்ஃபினிட்டி ஓ டிஸ்பிளேயுடன் வெளிவரும் இரண்டாவது ஸ்மார்ட்போனாகும். ஹோல் பன்ச் செல்பி கேமராவுடன், ஹூவாய் நோவா 4 டூயல் கேமராவும் கொண்டுள்ளது.
இந்த போனின் சிறப்பம்சமே 48மெகா பிக்செல்ஸ் சோனி கேமரா, ஹைசிலிகான் கிரின் 980, 25 மெகா பிக்செல்ஸ் செல்பி ஸ்நாப்பர் 4,000 mAh பேட்டரி மற்றும் டர்போ டெக்னாலஜி ஆகும். வரும் ஜன.22ஆம் தேதி பாரீஸில் வைத்து இந்த போன் வெளியாகிறது.
ஹானர் v20 6ஜிபி ரேம் + 128ஜிபி நினைவகம் கொண்ட போனின் விலையானது CNY 2,999 (தோராயமாக ரூ.30,400) ஆகும். 8ஜிபி ரேம் + 128ஜிபி கொண்ட போனின் விலையானது CNY 3,499 (தோராயமாக ரூ.35,500) ஆகும். இந்த போன் ப்ளூ, ரெட், மற்றும் மிட்நைட் பிளாக் உள்ளிட்ட நிறங்களில் கிடைக்கிறது. இதில் 8ஜிபி ரேம் + 256ஜிபி நினைவகம் கொண்ட போனின் விலையானது CNY 3,999 (தோராயமாக ரூ.40,600) ஆகும்.
ஹோல் பன்ச் செல்பி கேமரா சென்சார் போனின் இடதுபுறம் பொருத்தப்பட்டுள்ளது. இந்த போனின் வடிவமைப்பானது கிளாஸி கிரேடியண்ட் பினிஷிங் கொண்டுள்ளது. இதனுடன் டூயல் கேமரா செட்டப், கைரேகை சென்சாரும் உள்ளது.
டூயல் சிம் கொண்ட ஹானர் v20 ஸ்மார்ட்போனானது, ஆண்ட்ராய்டு 9.0 பை கொண்டு இயங்குகிறது. இதன் ஸ்போர்டஸ் 6.4-இன்ச் புல் எச்டி + (1080x2310 பிக்செல்ஸ்) டிஎப்டி டிஸ்பிளே 19.5:9 அக்செப்ட் ரேசியோ, 16.7 மில்லியன் கலர்கள் கொண்டுள்ளது.
இதில் ஆக்டோ கோர் ஹைசிலிகான் கிரின் 980 பிராசஸருடன் 8ஜிபி மற்றும் 6ஜிபி வேரியண்ட்களில் கிடைக்கிறது. இதன் நினைவகம் 128ஜிபி மற்றும் 256ஜிபி வகைகளில் கிடைக்கிறது. இதில் மைக்ரோ Sd கார்ட் சப்போர்ட் கிடையாது.
ஹானர் v20 கேமராவை பொறுத்தவரையில், 48 மெகா பிக்ஸெல்ஸ் சோனி IMX586 சென்சாருடன் f/1.8 அப்பர்ச்சர், 960fps ஸ்லோ மோஷன் வீடியோ ரெகார்டிங் சப்போர்ட், எச்டிஆர், எல்இடி பிளாஷ் கொண்டுள்ளது. முன்பக்கம் 25 மெகா பிக்ஸெல்ஸ் சென்சார் கொண்டுள்ளது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹63,999
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹36,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Amazon Great Indian Festival 2026: Best 1.5-Ton 5-Star AC Deals From Daikin, Blue Star, and More
India Could Be Among First Countries to Roll Out 6G, Says Jio
Amazon Great Indian Festival 2026: iPhone 16, iPhone 17e Get Discounts