Photo Credit: Honor
நீங்கள் பட்ஜெட் விலையில் புதிதாக ஸ்மார்ட்போன், வாட்ச், ஸ்பீக்கர் உட்பட எது வாங்க திட்டமிடுகிறீர்கள் என்றாலும் இந்த பதிவு உங்களுக்கானது மக்களே. நீங்கள் எதிர்பார்க்கும் விலைக்குள் எந்த ஸ்மார்ட்போன் சிறந்தது? எந்த போன் சிறந்த பெர்பார்மென்ஸை கொண்டுள்ளது? எந்த போனில் கேமரா அம்சம் மிரட்டலாக இருக்கிறது? எந்த போனில் டிஸ்பிளே சூப்பராக அமைந்துள்ளது? எது பட்ஜெட்டில் சூப்பர் போன்? என்பது போன்ற விபரங்களை நாங்கள் உங்களுக்கு விளாவாரியாக சொல்லப்போகிறோம். இப்போ நாம் பார்க்க இருப்பது Honor Magic 7 RSR Porsche Design செல்போன் பற்றி தான்.
Honor Magic 7 RSR Porsche Design சீனாவில் வெளியிடப்பட்டது. இதன் வடிவமைப்பு மற்றும் முக்கிய அம்சங்களை நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில் டிஸ்பிளே, பில்ட் மற்றும் பேட்டரி விவரங்கள் பற்றிய குறிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது. Honor Porsche Design Magic 6 RSR மாடல் அக்டோபரில் அறிமுகப்படுத்தப்பட்ட Honor Magic 7 சீரியஸ் செல்போன் வரிசையில் இணையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஹானர் மேஜிக் 7 RSR போர்ஸ் டிசைன் 1/1.3-இன்ச் 50-மெகாபிக்சல் OV50K முதன்மை சென்சார் கேமரா af/1.4-f2.0 ஆப்ஷன் உடன் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது . இதனுடன் 50 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் ஆங்கிள் ஷூட்டர் 122 டிகிரி ஃபீல்ட்-ஆஃப்-வியூ கேமரா மற்றும் 25 மிமீ மேக்ரோ மோட் திறன் கொண்ட கேமரா இருக்கும் என கூறப்படுகிறது.
ஹானர் மேஜிக் 7 ஆர்எஸ்ஆர் போர்ஸ் டிசைனில் பெரிஸ்கோப் லென்ஸுடன் 1/1.4-இன்ச் 200 மெகாபிக்சல் டெலிஃபோட்டோ சென்சார்கேமரா சேர்க்கப்பட்டுள்ளது. இது OIS, 3x ஆப்டிகல் ஜூம்ம், 100x டிஜிட்டல் ஜூம், f/1.88 துளை மற்றும் 1G+5P மிதக்கும் பெரிஸ்கோப் அமைப்புக்கான சப்போர்ட் கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது. இது இரட்டை மின்காந்த மோட்டார், ALC பூச்சு, 1200-புள்ளி dTOF ஃபோகஸ் மாட்யூல் மற்றும் ஒரு ஃப்ளிக்கர் சென்சார் ஆகியவற்றைப் பெறுகிறது.
ஹானர் மேஜிக் 7 ஆர்எஸ்ஆர் போர்ஸ் டிசைன் "தொழில்துறையின் முதல் பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ அல்ட்ரா-லார்ஜ் அபர்ச்சர்" மற்றும் முதல் இரட்டை மின்காந்த ஃபோகஸ் மோட்டாரை பெறும் என்று நிறுவனம் ஏற்கனவே அறிவித்துள்ளது. இந்த போன் சீனாவில் டிசம்பர் 23 அன்று உள்ளூர் நேரப்படி பிற்பகல் 2 மணிக்கு அறிமுகப்படுத்தப்பட்டது.
Honor Porsche Design Magic 6 RSR குவாட்-வளைந்த வடிவமைப்பு கூடிய 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதம் கொண்ட 6.8 இன்ச் 1.5கே எல்டிபிஓ டிஸ்ப்ளேவைக் கொண்டிருக்கும் என்று தெரிய வருகிறது. 50 மெகாபிக்சல் செல்ஃபி ஷூட்டருடன் ஃபோனில் ToF 3D டெப்த் கேமரா கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது ஆண்ட்ராய்டு 15-அடிப்படையிலான MagicOS 9 உடன் வருகிறது. 100W வயர்டு மற்றும் 80W வயர்லெஸ் ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான சப்போர்ட் கொண்டிருக்கும். மேலும் 5,850mAh பேட்டரி மற்றும் நீர் மற்றும் தூசி எதிர்ப்பிற்கான IP68/IP69 மதிப்பீட்டைக் கொண்டிருக்கும்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்