Photo Credit: Deutsche Bahn AG
போனின் ரிலீஸுக்கு முன்னரே அது குறித்து மற்றவர்களுக்குத் தெரிந்துவிடக் கூடாது என்பதற்காக ஹானர் நிறுவனம் ‘திரும்ப கண்டுபிடித்துத் தாருங்கள்’ என்ற ட்வீட் முயற்சியை எடுத்துள்ளது
சாதாரண மக்கள் ஸ்மார்டை போனை தொலைத்துவிடுவது அவ்வப்போது நடப்பதுதான். ஆனால், ஒரு பெரிய போன் தயாரிப்பு நிறுவனமே அதைச் செய்தால், என்ன செய்வது. வேறு வழியில்லை, திரும்ப கொடுத்துவிடுங்கள் என்று கோரிக்கையைத்தான் வைக்க முடியும். ஹூவேய்-இன் துணை நிறுவனமான ஹானர், இன்னும் ஒரு மாதத்தில் வெளியிடப் போகும் ஒரு போனின் ‘ப்ரோடோடைப்'-ஐ (முன்மாதிரி போன்) தொலைத்துவிட்டது. தற்போது அந்த போனை கண்டுபிடித்து ஒப்படைப்பவர்களுக்கு ரூ.4 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என்றும் ஹானர் கூறியுள்ளது.
பொதுவாக ஒரு ஸ்மார்ட் போனை பெரிய நிறுவனங்கள் தயாரித்தால், ரிலீஸுக்கு முன்னர் அதன் ஊழியர்களிடம் கொடுத்து பயன்படுத்தச் சொல்லி, சோதனை செய்யும். அப்படி ஒரு ஊழியர் ஹானரின் போன் ஓன்றை பயன்படுத்திய போதுதான், அது மிஸ் ஆகியுள்ளது.
⚠️Bitte helft uns ⚠️
— HonorDE (@HonorGermany) April 22, 2019
Hinweise an de.support@hihonor.com oder jeden Servicemitarbeiter der Deutschen Bahn! ???????? pic.twitter.com/vI5ZjDOlpN
இது குறித்து ஹானர் ஜெர்மனி, தனது ட்விட்டர் பக்கத்தில், ‘டசல்டர்ஃப்-இல் இருந்து முனிச்க்கு செல்லும் ரயிலில் ப்ரோடோடைப் ஸ்மார்ட் போனை எங்கள் ஊழியர் ஒருவர் தொலைத்துவிட்டார். அந்த போனை கண்டுபிடித்து கொடுப்பவர்களுக்கு 4 லட்சம் ரூபாய் வரை சன்மானம் கொடுக்கப்படும்' என்று கூறியுள்ளது.
ஹானர் நிறுவனம் அடுத்த மாதம் 19 ஆம் தேதி ஹானர் 20 வரிசையில் ஒரு போனை வெளியிட உள்ளது. லண்டனில் நடக்கும் நிகழ்ச்சியில் இந்த போன் ரிலீஸ் செய்யப்பட உள்ளது. அந்த போனின் ப்ரோட்டோடைப்தான் தற்போது தொலைந்துள்ளதாக கூறப்படுகிறது. போனின் ரிலீஸுக்கு முன்னரே அது குறித்து மற்றவர்களுக்குத் தெரிந்துவிடக் கூடாது என்பதற்காக ஹானர் நிறுவனம் ‘திரும்ப கண்டுபிடித்துத் தாருங்கள்' என்ற ட்வீட் முயற்சியை எடுத்துள்ளது. ஆனால் போன் கிடைக்குமா என்பது சந்தேகம்தான்.
காரணம், ஹானர் கொடுப்பதை விட சில மொபைல் இணையதளங்கள் அந்த போனை கண்டுபிடித்துத் தருபவர்களுக்கு அதிக தொகை கொடுக்கத் தயாராக இருக்கும் எனப்படுகிறது.
ஹானர் நிறுவனம், தனது 20 வரிசை போன்களில் இதுவரை ஹானர் 20, ஹானர் 20 ப்ரோ, ஹானர் 20ஏ, ஹானர் 20சி, ஹானர் 20x உள்ளிட்ட போன்களை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ஹானர் 20ஐ சமீபத்தில் சீனாவில் வெளியிடப்பட்டது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்