ஹானரின் இரண்டு புதிய ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்! 

விளம்பரம்
Written by Kathiravan Gunasekaran மேம்படுத்தப்பட்டது: 18 ஏப்ரல் 2020 11:23 IST
ஹைலைட்ஸ்
  • ஹானர் 9 எக்ஸ் லைட் 6.5 இன்ச் டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது
  • ஹானர் 20 இ 6.21 இன்ச் திரையுடன் வருகிறது
  • ஹானர் 9 எக்ஸ் லைட்டில் 48 மெகாபிக்சல் முதன்மை கேமரா உள்ளது

ஹானர் 20 இ, மிட்நைட் பிளாக் மற்றும் பாண்டம் ப்ளூ ஆப்ஷன்களில் வருகிறது

ஹானர் 9 எக்ஸ் லைட் மற்றும் ஹொனர் 20 இ ஆகிய இரண்டு புதிய ஸ்மார்ட்போன்களை ஹானர் அறிமுகப்படுத்தியுள்ளது. ஹானர் 9 எக்ஸ் லைட் டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. ஹானர் 20 இ டிரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. இந்த போன்களின் விலை, விவரங்கள் பின்வருமாறு:


ஹானர் 9 எக்ஸ் லைட் விலை:

Honor 9X Lite-ன் 4 ஜிபி + 128 ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷனின் விலை யூரோ 199 (இந்திய மதிப்பில் சுமார் ரூ.16,400) ஆகும். 
இந்த போன், கருப்பு மற்றும் பச்சை கலர் ஆப்ஷன்களில் கிடைக்கும்.
ஹானர் 9 எக்ஸ் லைட் மே 14-ஆம் தேதி விற்பனைக்கு வருகிறது.


ஹானர் 20 இ விலை:

Honor 20E-ன் 4 ஜிபி + 64 ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷனின் விலை யூரோ 180 (இந்திய மதிப்பில் சுமார் ரூ.14,800) ஆகும். 
இந்த போன், மிட்நைட் பிளாக் மற்றும் பாண்டம் ப்ளூ கலர் ஆப்ஷன்களைக் கொண்டுள்ளது. 
ஹானர் 20 இ வரும் வாரங்களில் ஐரோப்பிய சந்தைகளில் விற்பனைக்கு வரக்கூடும்.


ஹானர் 9 எக்ஸ் லைட் விவரங்கள்:

இந்த போன், EMUI 9 உடன் ஆண்ட்ராய்டு 9-ல் இயக்குகிறது. இது 6.5 இன்ச் (1,080x2,340 பிக்சல்கள்) முழு எச்டி + டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது. இந்த போன் 4 ஜிபி ரேம் கொண்ட ஆக்டா கோர் கிரின் 710 SoC-யால் இயக்கப்படுகிறது. 

போனின் டூயல் ரியர் கேமராவில், 48 மெகாபிக்சல் முதன்மை ஷூட்டர், 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார் ஆகியவை உள்ளன. முன்பக்கத்தில், 16 மெகாபிக்சல் செல்ஃபி ஷூட்டர் உள்ளது.

ஹானர் 9 எக்ஸ் லைட், 128 ஜிபி ஆன்போர்டு ஸ்டோரேஜுடன் வருகிறது. இந்த போன் 3,750 எம்ஏஎச் பேட்டரியைக் கொண்டுள்ளது. இது 160.4x76.6x7.8 மிமீ அளவு மற்றும் 175 கிராம் எடையைக் கொண்டுள்ளது.


ஹானர் 20 இ விவரங்கள்: 

இந்த போன், EMUI 9.1 உடன் ஆண்ட்ராய்டு 9-ல் இயங்குகிறது. இது 6.21 இன்ச் (1,080x2,340 பிக்சல்கள்) முழு எச்டி + ஐபிஎஸ் பேனலைக் கொண்டுள்ளது. இந்த போன், 4 ஜிபி ரேம் உடன் ஆக்டா கோர் கிரின் 710 எஃப் SoC-யால் இயக்கப்படுகிறது. 

போனின் டிரிபிள் ரியர் கேமராவில், 24 மெகாபிக்சல் பிரதான ஷூட்டர், 8 மெகாபிக்சல் ஷூட்டர் மற்றும் 2 மெகாபிக்சல் கேமரா ஆகியவை உள்ளன. முன்பக்கத்தில், 8 மெகாபிக்சல் செல்பி கேமரா உள்ளது.

Advertisement

ஹானர் 20 இ, 64 ஜிபி ஸ்டோரேஜுடன் வருகிறது. இதனை மைக்ரோ எஸ்டி கார்டு வழியாக (512 ஜிபி வரை) விரிவாக்கம் செய்யலாம். இந்த போன் 10W சார்ஜிங் ஆதரவுடன் 3,400 எம்ஏஎச் பேட்டரியைக் கொண்டுள்ளது. இது 154.8x73.64x7.95 மிமீ அளவுடன் வருகிறது. ஆனால், போனின் எடையை குறிப்பிடவில்லை. இந்த போனில் பின்புறமாக பொருத்தப்பட்ட கைரேகை சென்சார் உள்ளது.


Is iPhone SE the ultimate 'affordable' iPhone for India? We discussed this on Orbital, our weekly technology podcast, which you can subscribe to via Apple Podcasts or RSS, download the episode, or just hit the play button below.

 
KEY SPECS
Display 6.50-inch
Processor HiSilicon Kirin 710
Front Camera 16-megapixel
Rear Camera 48-megapixel + 2-megapixel
RAM 4GB
Storage 128GB
Battery Capacity 3750mAh
OS Android 9
Resolution 1080x2340 pixels
 
NEWS
KEY SPECS
Display 6.21-inch
Processor HiSilicon Kirin 710F
Front Camera 8-megapixel
Rear Camera 24-megapixel + 8-megapixel + 2-megapixel
RAM 4GB
Storage 64GB
Battery Capacity 3400mAh
OS Android 9
Resolution 1080x2340 pixels
 
NEWS

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. BSNL சிம் கார்டு வீட்டுக்கே டெலிவரி! ₹0 செலவில் செல்ஃப்-KYC வசதியுடன் - எப்படி பெறுவது? முழு விபரம்!
  2. Honor X9c: 108MP கேமரா, 1.5K Curved AMOLED டிஸ்ப்ளேவுடன் இந்தியாவில் லான்ச் உறுதி! அமேசானில் கிடைக்கும்!
  3. Poco F7 5G: இந்தியாவுக்கு ஸ்பெஷல் 7550mAh பேட்டரி! ஜூலை 1 முதல் விற்பனை!
  4. Vivo T4 Lite 5G: Dimensity 6300 SoC, IP64 பாதுகாப்புடன் இந்தியாவில மாஸ் காட்டும்!
  5. Vivo X200 FE: Zeiss கேமரா, IP68+IP69 பாதுகாப்புடன் ஒரு ஃபிளாக்‌ஷிப் போன்!
  6. அறிமுகமாகிறது Galaxy Z Fold 7, Z Flip 7: புது AI, Watch 8 சீரிஸுடன் Samsung-ன் பிரம்மாண்ட Unpacked!
  7. அறிமுகமாகிறது Nothing Phone 3: Snapdragon 8s Gen 4 SoC, 5150mAh பேட்டரியுடன் மாஸ் காட்டும்!
  8. Oppo Reno 14 5G சீரிஸ்: ஜூலை 1-ல் உலக அறிமுகம்! Amazon, Flipkart-ல் இந்தியாவில் கிடைக்குது - முழு விபரம்!
  9. அறிமுகமாகிறது Samsung Galaxy M36 5G: Orange Haze, Serene Green கலர் ஆப்ஷன்களுடன் மாஸ் எண்ட்ரி!
  10. அறிமுகமானது OnePlus Bullets Wireless Z3: 10 நிமிடம் சார்ஜ், 27 மணிநேரம் மியூசிக்! மிஸ் பண்ணாதீங்க!
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.