ஜனவரி 14-ல் வெளியாகிறது Honor 9X!

Honor 9X, - 4GB + 64GB, 6GB + 64GB, and 6GB + 128GB ஆகிய மூன்று ஸ்டோரேஜ் ஆப்ஷன்களில் சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்டது.

ஜனவரி 14-ல் வெளியாகிறது Honor 9X!

Honor 9X Pro-வுடன் Honor 9X கடந்த ஆண்டு ஜூலை மாதம் சீனாவில் அறிமுகமானது

ஹைலைட்ஸ்
  • Honor 9X வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது
  • பிளிப்கார்ட் ஒரு மைக்ரோசைட் உருவாக்கியுள்ளது
  • Honor 9X, pop-up செல்பி கேமரா & டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது
விளம்பரம்

இந்தியாவில், ஜனவரி 14-ஆம் தேதி Honor 9X வெளியாகிறது. Honor 9X இந்த மாத இறுதியில் நாட்டில் அறிமுகம் செய்யப்படும் என்று ஹானர் இந்தியா தலைவர் சார்லஸ் பெங் (Charles Peng) வெளிப்படுத்திய சில நாட்களுக்குப் பிறகு, இந்த புதிய அறிவிப்புகள் வந்துள்ளன. சீன பிராண்ட் இந்த வார தொடக்கத்தில் தனது சமூக ஊடகங்கள் மூலம் அறிமுகத்தை கிண்டல் செய்தது. நினைவுகூர, Honor 9X கடந்த ஆண்டு ஜூலை மாதம் Honor 9X Pro-வுடன் சீனாவில் வெளியிடப்பட்டது. இரண்டு ஹானர் போன்களும் pop-up செல்பி கேமராவுடன் வருகின்றன.

ஹானர் அனுப்பிய Save the Date அழைப்பைத் தவிர, Honor 9X ஆன்லைனில் கிடைப்பதை பரிந்துரைக்க பிளிப்கார்ட் மைக்ரோசைட்டை வெளியிட்டுள்ளது. பிளிப்கார்ட்டுடன் சேர்ந்து, ஸ்மார்ட்போன் நாட்டின் பிற சேனல்கள் மூலம் வாங்குவதற்கு வாய்ப்புள்ளது.


இந்தியாவில் Honor 9X-ன் விலை (எதிர்பார்க்கப்படுபவை):

இந்தியாவில் Honor 9X-ன் விலை இன்னும் வெளியிடப்படவில்லை. இருப்பினும், இது கடந்த மாதம் சீன சந்தையில் அறிவிக்கப்பட்டவற்றுக்கு ஏற்ப இருக்கக்கூடும். இந்த ஸ்மார்ட்போனின் 4GB RAM + 64GB ஸ்டோரேஜ் ஆப்ஷன் CNY 1,399 (சுமார் ரூ. 14,400) அறிமுகப்படுத்தப்பட்டது. அதன், 6GB RAM + 64GB ஸ்டோரேஜ் மாடல் CNY 1,599 (சுமார் ரூ. 16,500)-யாகவும் மற்றும் 6GB RAM + 128GB ஸ்டோரேஜ் வேரியண்ட் CNY 1,899 (சுமார் ரூ. 19,600)-யாகவும் விலைக் குறியீட்டைக் கொண்டுள்ளது.

honor 9x save the date invite gadgets 360 Honor 9X

Honor 9X-ன் இந்திய வெளியீட்டு தேதி Save the Date அழைப்பின் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

Honor 9X-ன் விவரக்குறிப்புகள்:

Honor 9X, EMUI 9.1.1 உடன் Android Pie-ல் இயங்குகிறது. இது 6.59-inch full-HD+ (1080x2340 pixels) டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது. இது 6GB RAM வரை இணைக்கப்பட்டு, octa-core HiSilicon Kirin 810 SoC-யால் இயக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனின் டூயல் ரியர் கேமரா அமைப்பில், f/1.8 lens உடன் 48-megapixel பிரதான சென்சார் மற்றும் 2-megapixel depth சென்சார் ஆகியவை அடங்கும். மேலும், இது f/2.2 lens உடன் 16-megapixel செல்ஃபி கேமரா சென்சாருடன் வருகிறது.

Honor, 64GB மற்றும் 128GB ஆன்போர்டு ஸ்டோரேஜ் ஆப்ஷனையும் வழங்குகிறது. Honor 9X-ன் இணைப்பு விருப்பங்களில் 4G LTE, Wi-Fi, Bluetooth, GPS/ A-GPS, USB Type-C port மற்றும் 3.5mm headphone jack ஆகியவை அடங்கும். தவிர, இந்த போன் 4,000mAh பேட்டரி மற்றும் side-mounted fingerprint சென்சாரையும் கொண்டுள்ளது.

Honor Starts Teasing Honor 9X India Launch, Expected Soon

Honor 9X, 8 Smart Products Including Honor Vision TV Coming to India Soon: Honor India President Charles Peng

Honor 9X, Honor 9X Pro With 4,000mAh Battery, Kirin 810 SoC Launched: Price, Specifications

  • REVIEW
  • KEY SPECS
  • NEWS
  • Variants
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Immersive full-screen display
  • Reliable performance
  • All-day battery life
  • Decent night mode
  • Bad
  • Underwhelming cameras
  • Stutters at gaming
  • EMUI is loaded with bloatware
  • Bulky and unwieldy
Display 6.59-inch
Processor HiSilicon Kirin 710F
Front Camera 16-megapixel
Rear Camera 48-megapixel + 8-megapixel + 2-megapixel
RAM 4GB
Storage 128GB
Battery Capacity 4000mAh
OS Android Pie
Resolution 1080x2340 pixels
Comments

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

தொடர்புடைய செய்திகள்

#சமீபத்திய செய்திகள்
  1. 6 வருஷம் அப்டேட்! Samsung-ன் புது 5G போன் Galaxy F70e வந்தாச்சு.. லெதர் பினிஷ் டிசைன்ல செம மாஸா இருக்கு
  2. Pixel 10 இப்போ பட்ஜெட் விலையில! அமேசான்ல ரூ. 11,000 வரைக்கும் தள்ளுபடி.. இந்த AI கேமரா மான்ஸ்டரை மிஸ் பண்ணிடாதீங்க
  3. S25 Ultra-வோட விலை மளமளன்னு குறைஞ்சிடுச்சு! இப்போ ரூ. 18,599 வரைக்கும் டிஸ்கவுண்ட்.. அமேசான்ல இந்த டீலை மிஸ் பண்ணிடாதீங்க
  4. பட்ஜெட் விலையில் ஒரு பவர்ஃபுல் போன்! Oppo K14 லான்ச் நெருங்கிடுச்சு.. 7000mAh பேட்டரி, 80W சார்ஜிங்னு சிறப்பம்சங்கள் மிரட்டுது
  5. மோட்டோரோலாவின் அடுத்த பிளான் இதுதான்! Moto Buds 2 Plus டிசைன் லீக்.. செம ஸ்டைலான புது கேஸ்ல வருது
  6. ₹90,000 போன் இப்போ ₹57,000-க்கு! Vivo X100 Pro மீது அமேசான் அதிரடி விலைக்குறைப்பு.. டீலை மிஸ் பண்ணிடாதீங்க
  7. இதுதான் சரியான நேரம்! Pixel 9 Pro Fold-க்கு அமேசான்ல ரூ. 52,000 தள்ளுபடி.. ஆஃபர் முடியறதுக்குள்ள அள்ளிக்கோங்க
  8. iPhone 17e வருது! பட்ஜெட் ஐபோன்ல இப்போ மேக்சேஃப் சப்போர்ட்.. சிங்கிள் கேமராவோட தரமான சம்பவம் பண்ணப்போற ஆப்பிள்
  9. சாம்சங், ஐபோனுக்கே டஃப் கொடுக்க ஷாவ்மி ரெடி! Xiaomi 17 Ultra-வோட குளோபல் ரெண்டர்ஸ் லீக்.. அந்த 200MP ஜூம் வேற லெவல்
  10. பிக்சல் 10ஏ-ல இவ்வளவு சூப்பர் கலர்ஸா? லீக்கான 4 மாஸ் கலர்கள் இதோ! பிப்ரவரி 18-க்காக வெயிட்டிங்
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »