ஹானர் 9N மொபைலில் 3ஜி.பி ரேம்/32ஜி.பி ஸ்டோரேஜ் 11,999 ரூபாய். 4ஜி.பி ரேம்/64ஜி.பி ஸ்டோரேஜ் 14,999 ரூபாய். 4ஜி.பி ரேம்/128ஜி.பி ஸ்டோரேஜ் 17,999 ரூபாய்
ஹானர் 9N ஸ்மார்ட்ஃபோன் முதல் முறையாக இந்தியாவில் இன்று ஃபிளிப்கார்ட்டில் விற்பனைக்கு வந்தது. ஹானர்9ஐ மொபைலின் இந்திய மாடல் தான் 9N. நாட்ச் டிஸ்பிளே, மெட்டல் கொண்டு வடிவமைக்கப்பட்ட இந்த மெல்லிய மொபைல், நடுத்தர விலையில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
இந்தியாவில் விலை:
ஹானர் 9N மொபைலில் மூன்று வகைகள் உள்ளன 3ஜி.பி ரேம்/ 32 ஜி.பி ஸ்டோரேஜ் 11,999 ரூபாய். 4ஜி.பி ரேம்/64 ஜி.பி ஸ்டோரேஜ் 14,999 ரூபாய். 4ஜி.பி ரேம்/128 ஜி.பி ஸ்டோரேஜ் 17,999 ரூபாய். ஆனால் இப்போது 64 ஜி.பி மற்றும் 128 ஜி.பி ஆகிய இரண்டு வேரியன்ட்கள் மட்டுமே விற்பனைக்கு வருகிறது. மிட்நைட் கருப்பு மற்றும் சஃபையர் நீல நிறங்களில் கிடைக்கும். 198/299 ரூபாய்க்கு ஜியோ ரீச்சார்ஜ் செய்தால், 100 ஜி.பி கூடுதல் டேட்டாவும், 2,200 ரூபாய் கேஷ்பேக்கும் கிடைக்கிறது.
1,200 ரூபாய் வரை மிந்த்ரா வவுச்சர்கள் கொடுக்கப்படுகிறது.
சிறப்பம்சங்கள்:
இரண்டு சிம் ஸ்லாட்கள் கொண்ட இந்த ஸ்மார்ட்ஃபோன், ஆண்ட்ராய்டு ஓரியோ 8.0.0 இயங்குதளத்தில் கட்டமைக்கப்பட்டுள்ளது. 5.84 இன்ச் முழு ஹெச்.டி நாச் டிஸ்பிளே கொண்டது.
645 ஸ்னாப்டிராகன் பிராசஸர் இருக்கிறது. 19:9 விகிதத்தில் நாட்ச் டிஸ்பிளேவும் உள்ளது. எஸ்.டி கார்டு மூலம் 256 ஜி.பி வரைக்கும் ஸ்டோரேஜை நீட்டித்துக் கொள்ளலாம் நீட்டித்துக் கொள்ளலாம்.
பின் பக்கத்தில், 13 மெகா பிக்சல் மற்றும் 2 மெகா பிக்சல் சென்சார் கொண்ட டூயல் கேமராவும் உள்ளது. ஒரு எல்.இ.டி ஃபிளாஷும் உள்ளது. மேலும் இந்த கேமராவில், டைம் லாப்ஸ், பர்ஸ்ட் மோட், ப்ரொ ஃபோட்டோ, ப்ரோ வீடியோ, லைர் பெயின்டிங், ஹெச்.டி.ஆர் என பல அம்சங்களும் உள்ளன. படம் எடுத்த பின் ஃபோக்கஸை முடிவு செய்யும் சிறப்பம்சமும் இதில் உள்ளது. முன்பக்கத்தில் 16 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா உள்ளது.
நெட்வொர்க் தொடர்பை பொறுத்தவரை 4ஜி வோல்ட், வைஃபை 802.11, ப்ளூடூத் வி5.0, எஃப்.எம் ரேடியோ, யூ.எஸ்.பி, ஜி.பி.எஸ், 3.5மிமீ ஹெட்ஃபோன் ஜாக்கும் இதில் உள்ளது. 3300mAh பேட்டரியும் இதன் சிறப்பம்சம்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹64,999
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Samsung Galaxy S27 Ultra Could Get New Image Processing for More Natural Photos: Leak