ஹானரின் மூன்று பட்ஜெட் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்!

விளம்பரம்
Written by Kathiravan Gunasekaran மேம்படுத்தப்பட்டது: 30 ஏப்ரல் 2020 15:56 IST
ஹைலைட்ஸ்
  • ஹானர் 9 சி ஆக்டா கோர் கிரின் 710A SoC-யால் இயக்கப்படுகிறது
  • 9 ஏ, 9 எஸ் இரண்டும் ஆக்டா கோர் மீடியாடெக் MT6762R SoC-யில் இயங்குகிறது
  • மூன்று போன்களிலும் 4 ஜி எல்டிஇ இணைப்பு உள்ளது

ஹானர் 9 சி, ஹானர் 9 ஏ, ஹானர் 9 எஸ் ஆகியவை செல்பி கேமராவிற்கு வெவ்வேறு வடிவமைப்புகளைக் கொண்டுள்ளன

ஹானர் நிறுவனத்தின் ஹானர் 9 ஏ, ஹானர் 9 சி, மற்றும் ஹானர் 9 எஸ் ஆகிய மூன்று பட்ஜெட் ஸ்மார்ட்போன்கள் அறிமுகமாகியுள்ளன. இந்த மூன்று ஹானர் போன்களும் ஒற்றை ரேம் மற்றும் ஸ்டோரேஜ் ஆப்ஷன்களில் வருகின்றன. போன்கள் ஹானர் ரஷ்யா இணையதளத்தில் பட்டியலிடப்பட்டிருந்தாலும், அவை மே 4-ந் தேதி விற்பனைக்கு வரும். 


ஹானர் 9 சி விலை:

போனின் 4 ஜிபி + 64 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட்டின் விலை RUB 12,990 (இந்திய மதிப்பில் ரூ.13,300) ஆகும். இந்த போன் ப்ளூ மற்றும் மிட்நைட் பிளாக் கலர் ஆப்ஷன்களில் கிடைக்கும். 


ஹானர் 9 ஏ விலை:

போனின் 3 ஜிபி ரேம் + 64 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட்டின் விலை RUB 10,990 (இந்திய மதிப்பில் ரூ.11,300) ஆகும். இந்த போன் நீலம், பச்சை மற்றும் 'தி பிளாக்' ஆகிய மூன்று கலர் ஆப்ஷன்களைக் கொண்டுள்ளன. 


ஹானர் 9 எஸ் விலை:

போனின் 2 ஜிபி + 32 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட்டின் விலை RUB 6,990 (இந்திய மதிப்பில் ரூ.7,200) ஆகும். இந்த போன் நீலம், சிவப்பு மற்றும் 'தி பிளாக்' கலர் ஆப்ஷன்களைக் கொண்டுள்ளன.


ஹானர் 9 சி விவரங்கள்: 

இந்த போன் Android 9 உடன் EMUI 10.1.1-ல் இயக்குகிறது. இது 6.20 அங்குல திரை 720x1,560 பிக்சல்கள் தெளிவுதிறன் மற்றும் 269ppi பிக்சல் அடர்த்தி கொண்டது. இந்த போன் ஆக்டா கோர் கிரின் 710A SoC-யால் இயக்கப்படுகிறது. இது 4 ஜிபி ரேம் உடன் வருகிறது. 

இந்த போன் 48 மெகாபிக்சல் முதன்மை கேமரா, 8 மெகாபிக்சல் இரண்டாம் நிலை கேமரா மற்றும் 2 மெகாபிக்சல் மூன்றாம் நிலை கேமரா ஆகியவற்றைக் கொண்டுள்ளது. முன்புறத்தில், 8 மெகாபிக்சல் கேமரா உள்ளது. இது ஹோல்-பஞ்ச் வடிவமைப்பில் வைக்கப்பட்டுள்ளது.

Honor 9C, 64 ஜிபி ஆன்போர்டு ஸ்டோரேஜுடன் வருகிறது. இதனை மைக்ரோ எஸ்டி கார்டு வழியாக (512 ஜிபி வரை) விரிவாக்கம் செய்யலாம். இந்த போன் 4,000 எம்ஏஎச் பேட்டரியைக் கொண்டுள்ளது. இது 176 கிராம் எடையுடன் 159.81x76.13x8.13 மிமீ அளவில் உள்ளது.


ஹானர் 9 ஏ விவரங்கள்:

இந்த போன் ஆண்ட்ராய்டு 10 உடன் மேஜிக் யுஐ 3.1-ல் இயக்குகிறது. இது 6.3 அங்குல திரை 720x1,600 பிக்சல்கள் தெளிவுதிறன் மற்றும் 278 பிபி பிக்சல் அடர்த்தி கொண்டது. இந்த போன் ஆக்டா கோர் மீடியாடெக் MT6762R SoC-யால் இயக்கப்படுகிறது. இது ஒற்றை 3 ஜிபி ரேம் ஆப்ஷனில் வருகிறது. 

Advertisement

இந்த போன் 13 மெகாபிக்சல் பிரதான கேமராவைக் கொண்டுள்ளது. இதனுடன் 5 மெகாபிக்சல் இரண்டாம் நிலை கேமரா மற்றும் 2 மெகாபிக்சல் ஷூட்டர் ஆகியவையும் உள்ளது. செல்ஃபிக்களுக்கு, 8 மெகாபிக்சல் ஷூட்டர் நாட்சில் வைக்கப்பட்டுள்ளது.

Honor 9A, 64 ஜிபி ஆன்போர்டு ஸ்டோரேஜுடன் வருகிறது. இதனை மைக்ரோ எஸ்டி கார்டு வழியாக (512 ஜிபி வரை) விரிவாக்கம் செய்யலாம். இந்த போன் ஒரு பெரிய 5,000 எம்ஏஎச் பேட்டரியைக் கொண்டுள்ளது. இது 159.07x74.06x9.04 மிமீ அளவுடன் 185 கிராம் எடையைக் கொண்டதாகும்.

ஹானர் 9 எஸ் விவரங்கள்:

இந்த போன் ஆண்ட்ராய்டு 10 உடன் மேஜிக் யுஐ 3.1-ல் இயக்குகிறது. இது சிறிய 5.45 அங்குல திரை 720x1,440 பிக்சல்கள் தெளிவுதிறன் மற்றும் 295.4 பிபிஐ பிக்சல் அடர்த்தி கொண்டது. இது ஆக்டா கோர் மீடியாடெக் MT6762R SoC-யால் இயக்கப்படுகிறது. இது ஒற்றை 2 ஜிபி ரேம் ஆப்ஷனில் வருகிறது. 

Advertisement

இந்த போன் ஒரே 8 மெகாபிக்சல் ஷூட்டரைக் கொண்டுள்ளது. முன்புறத்தில் 5 மெகாபிக்சல் ஷூட்டர் உள்ளது. முன் கேமரா மேலே தடிமனான பெசல்கள் வைக்கப்பட்டுள்ளது.

Honor 9S, 32 ஜிபி ஆன்போர்டு ஸ்டோரேஜுடன் வருகிறது. இதனை மைக்ரோ எஸ்டி கார்டு வழியாக (512 ஜிபி வரை) விரிவாக்கம் செய்யலாம். இது 3,020 எம்ஏஎச் பேட்டரியைக் கொண்டுள்ளது. இது 146.5x70.94x8.35 மிமீ அளவையும் 144 கிராம் எடையும் கொண்டது.


இந்த மூன்று Honor போன்களிலும் இணைப்பிற்காக, வைஃபை 802.11 பி / ஜி / என், 4 ஜி எல்டிஇ, புளூடூத் வி 5.0, ஜிபிஎஸ் மற்றும் சார்ஜ் செய்ய மைக்ரோ-யூ.எஸ்.பி போர்ட் உள்ளது.

Advertisement
 
KEY SPECS
Display 6.39-inch
Processor HiSilicon Kirin 710A
Front Camera 8-megapixel
Rear Camera 48-megapixel + 8-megapixel + 2-megapixel
RAM 4GB
Storage 64GB
Battery Capacity 4000mAh
OS Android 9
Resolution 720x1560 pixels
 
NEWS

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. அவசரம்! Realme GT 7, GT 7T போன்கள் ₹28,999-ல இருந்து ஆரம்பம் – இந்த பெஸ்ட் டீலை மிஸ் பண்ணாதீங்க!
  2. அறிமுகமானது Motorola Edge 60: 50MP கேமரா, 5500mAh பேட்டரி, MIL STD-810H - முழு விபரம் இதோ!
  3. Oppo K13x 5G: ₹15,999-க்குள்ளே லான்ச்! பிளாட் டிஸ்ப்ளே, 6000mAh பேட்டரி - கசிந்த முழு விபரம்!
  4. அறிமுகமாகிறது Vivo X Fold 5: -20°C குளிர்லையும் அசால்ட்டா இயங்கும்! அசத்தலான டிசைன் வெளியானது!
  5. அறிமுகமானது Huawei Band 10: 100 வொர்க்அவுட் மோட்ஸ், ஸ்போ2 கண்காணிப்பு - முழு விபரம் இதோ!
  6. அறிமுகமாகிறது Tecno Pova 7 Neo 4G: MediaTek Helio G100, 120Hz டிஸ்ப்ளே - முழு விபரம் இதோ!
  7. அறிமுகமானது OnePlus Pad 3: விலை, அம்சங்கள், பவர்ஃபுல் ப்ராசஸர் – முழு விபரம் இதோ!
  8. அறிமுகமானது OnePlus 13s: கலர் ஆப்ஷன்கள், அம்சங்கள், விலை - முழு விபரம் இதோ!
  9. Vi, Vivo அசத்தல் கூட்டணி: Vivo V50e உடன் 5G, OTT சலுகைகள்! முழு விபரம் இதோ!
  10. 6300mAh பேட்டரி, Snapdragon 7 Gen 4 உடன் Realme 15 5G: பக்கா பட்ஜெட் 5G போன்!
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.