சிறப்பு விற்பனை வரும் 12 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது
பிளிப்கார்டில் ஹானர் 10ன் விலை ரூ.8,000 ஆகும்.
ஹூவாயின் துணை நிறுவனமான ஹானர் வெள்ளியன்று விழாக்கால விற்பனையை நீட்டித்துள்ளதாக அறிவித்துள்ளது. அதில், ஹானர் 9 லைட் ரூ.9,999, ஹானர் 7எஸ் ரூ.5,999, ஹானர் 9ஐ ரூ 12,999 மற்றும் ஹானர் 10 அடங்கும். இந்தியாவில் அமேசான், பிளிப்கார்ட் மற்றும் தி ஹானர் ஸ்டோரில் தீபாவளி விற்பனைக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து விற்பனை வரும் 12 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஹானர் 10-ன் விலை தற்போது ரூ8,000 வரை குறைந்து 24,999 விற்பனை செய்யப்படுகிறது. ஹானர் 9 லைட் 3ஜிபி ரேம்/32 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் கொண்ட ஸ்மார்ட் போன் தள்ளுபடி விலையில் ரூ.9,999 ஆகும். ஹானர் 9 லைட் 4ஜிபி ரேம்/ 64ஜிபி ஸ்டோரேஜ் ஸ்மார்ட் போனிற்கு எக்ஸ்சேன்ஜ் ஆஃபரை அறிவித்துள்ளது. ஹானர் 9 லைட் 3ஜிபி ரேம்/32ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் ரூ.9,999 ரூபாய். ஹானர் 9 லைட் 4ஜிபி/64ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் ரூ. 11,999 ஆகும்.
கடந்த ஜனவரி மாதம் வெளியான போது ஹானர் 9 லைட் 3ஜிபி ரேம்/32ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் விலை ரூ. 10,999 ஆகும். 4ஜிபி ரேம்/ 64ஜிபி வேரியண்ட் ரூ. 14,999க்கு அறிமுகப்படுத்தப்பட்டது. ஹானர் 9 லைட் தவிர, பிற ஹானர் ஸ்மார்ட்போன்களிலும் ஆஃபர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஹானர் 7எஸ் ரூ.6,999க்கு அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது அதன் விலை ரூ 5,999 ஆகும். ஹானர் 9ஐ ரூ.14,999 ரூபாயில் விற்பனைக்கு வந்தது. பிளிப்கார்ட் விற்பனையில் இப்போது ரூ. 12,999க்கு கிடைக்கிறது.
அமேசான், பிளிப்கார்ட், ஹானர் ஸ்டோரில் தீபாவளி விற்பனையில் ஹானர் நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்கள் கடந்த வருடத்தை விட இந்த வருடம் 300 சதவீதம் அதிகமாக விற்பனையானது தெரியவந்துள்ளது. பிளிப்கார்ட்டின் ‘பிக் பில்லியன் டேஸ் சேலில்' ஹானர் 9என் (ரூ.10,719) ஸ்டார் பிராடெக்டாகவும், ஹானர் 8எக்ஸ் (ரூ.14,999) 12,000 - 15,000 உட்பட்ட ஸ்மார்ட்போன்களின் விற்பனையில் அமேசான் கிரேட் இந்தியன் ஃவெஸ்டிவல் சேலில் சிறந்த விற்பனை பட்டியலில் இடம்பிடித்துள்ளது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Oppo Reno 16 Series Early Leak Hints at Launch Timeline, Dimensity 8500 Chipset and Other Key Features