6.5 இன்ச் நாட்ச் டிஸ்பிளேயுடன் வெளியாகிறது ஹானர் 8 எக்ஸ்!

6ஜிபி+ 64ஜிபி ஸ்டோரேஜ் வகை போன் ரூ.16,999க்கும், 6 ஜிபி+ 128 ஜிபி ஸ்டோரேஜ் வகை போனின் விலை ரூ.18,999க்கும் கிடைக்கிறது

6.5 இன்ச் நாட்ச் டிஸ்பிளேயுடன் வெளியாகிறது ஹானர் 8 எக்ஸ்!

ஹானர் 8 எக்ஸ் 4ஜிபி/64ஜிபி வேரியன்டின் விலை ரூ.14,999 ஆகும்.

ஹைலைட்ஸ்
  • ஹானர் 8 எக்ஸ் இந்திய விலையானது ரூ.14,999 ஆகும்.
  • இந்த ஸ்மார்ட்போன் அமேசானில் பிரத்தியோகமாக கிடைக்கிறது.
  • ஹானர் 8 எக்ஸ் ஜிபியூ டர்போ டெக்னாலஜி திறன் கொண்டுள்ளது.
விளம்பரம்

 

ஹூவாயின் துணை நிறுவனமான ஹானர் தனது புதிய மாடலான ஹானர் 8 எக்ஸ்ஸை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. இந்த மொபைல் சீனாவில் கடந்த மாதம் அறிமுகமானது. இதன் சிறப்பம்சமாக பின்பக்கம் ப்ரீமியம் கிளாஸ் பினிஷிங், நாட்ச் டிஸ்பிளே, டூயல் கேமரா, டால்பி அட்மோஸ் சரவுண்ட் சவுண்ட் ஸ்பீக்கர்ஸ் கொண்டுள்ளது. மேலும் இந்த மொபைல் ஜிபியூ டர்போ டெக்னாலஜி கொண்டுள்ளது. இதனால் பேட்டரி பயன்பாடு 30 சதவீதம் கூடுதலாக நீடிக்கிறது.

இந்த டர்போ டெக்னாலஜியால், உயர்தர கிராபிக்ஸ் மொபைல் கேமிங்கின் போது அதன் வேகம் குறையாமல் இருந்து நல்ல கேமிங் அனுபவத்தை அளிக்கிறது. மேலும் ஹானர் மொபைல்கள் இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் 500 சதவீதம் வளர்ந்துள்ளதாகவும் ஹானர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஹானர் 8 எக்ஸ் இந்திய விலை,

ஹானர் 8 எக்ஸ் ஸ்மார்ட்போனின் 4ஜிபி+ 64ஜிபி வேரியன்டின் இந்திய விலையானது ரூ.14,999லிருந்து தொடங்குகிறது. இதில் 6ஜிபி+ 64ஜிபி ஸ்டோரேஜ் வகை போன் ரூ.16,999க்கும், 6 ஜிபி+ 128 ஜிபி ஸ்டோரேஜ் வகை போனின் விலை ரூ.18,999க்கும் கிடைக்கிறது. ஹானர் 8 எக்ஸ் மொபைலானது வரும் அக்.24 முதல் பிரத்தியோகமாக அமேசானில் மட்டும் கிடைக்கிறது. இந்த போன் பிளாக், ரெட், ப்ளூ உள்ளிட்ட நிறங்களில் கிடைக்கிறது.

ஹானர் 8 எக்ஸ் சிறப்பம்சங்கள் மற்றும் விவரக்குறிப்புகள்,

ஹானர் 8 எக்ஸ் ஸ்மார்ட்போனானது ப்ரிமீயம் கிளாஸ் பினிஷிங் பேக் கொண்டுள்ளது. இது 15 அடுக்குகள் கொண்ட ஆரோரா கிளாஸால் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் முன்பக்கம் நாட்ச் டிஸ்பிளே கொண்டுள்ளது. டிஸ்பிளேயின் அனைத்து பக்கமும் ஸ்போர்ட்ஸ் தின் பேசல் கொண்டுள்ளது. பின் பக்கம் மேல் முனையில் டூயல் கேமரா கொண்டுள்ளது.

இந்த ஹானர் 8 எக்ஸ் ஸ்மார்ட்போனில் கைரேகை சென்சார் பின்பக்கம் கொண்டுள்ளது. இது ட்ரிபிள் ஸ்லாட் கொண்டுள்ளது, இதனால், டூயல் சிம், மைக்ரோ SD கார்ட் என இரண்டையும் பயன்படுத்திக்கொள்ளலாம். மேலும் ஃபேஸ் அன்லாக்கும் உள்ளது.

 

 

இது EMUI 8.2.0 ஆண்ட்ராய்டு ஓரியோவில் இயங்குகிறது. ஸ்போர்ட்ஸ் 6.5 இன்ச் புல் ஹச்டி+(1080x2340பிக்சல்ஸ்) டிஸ்பிளே பேனல் 19.5;9 ரேஷஸியோ கொண்டுள்ளது. மேலும் இது ஆக்டோ- கோர் ஹைசிலிகான் கிரின் 710, மாலி ஜி51 மற்றும் 4ஜிபி அல்லது 6ஜிபி ரேம் கொண்டுள்ளது. ஸ்டோரேஜை பொருத்தவரையில் 64 ஜிபி அல்லது 128 ஜிபி கொண்டுள்ளது. மேலும் SD கார்ட் சப்போர்ட் உள்ளதால் கூடுதலாக 400ஜிபி வரை நினைவகத்தை விரிவாக்கம் செய்துகொள்ளலாம்.

இதன் கேமராவை பொருத்தவரையில், பின்பக்கம் 20எம்பி சென்சார் மற்றும் 2எம்பி சகெண்டரி சென்சார் f/1.8 அப்பர்சர் கொண்டுள்ளது. முன்பக்கம் 16 எம்.பி செல்பி கேமரா f/2.0 போகஸ் கொண்டுள்ளது. 3,750 mAh பேட்டரி கொண்டுள்ளது.

  • REVIEW
  • KEY SPECS
  • NEWS
  • Variants
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Premium design
  • Good performance
  • Good value for money
  • Bad
  • Relatively bulky and difficult to handle
  • Average cameras
  • Lacks fast charging
Display 6.50-inch
Processor HiSilicon Kirin 710
Front Camera 16-megapixel
Rear Camera 20-megapixel + 2-megapixel
RAM 4GB
Storage 64GB
Battery Capacity 3750mAh
OS Android 8.1 Oreo
Resolution 1080x2340 pixels
Comments

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

தொடர்புடைய செய்திகள்

#சமீபத்திய செய்திகள்
  1. ஆப்பிள் கிட்ட இப்போ 250 கோடி டிவைஸ்கள் இருக்கு! அதுவும் இந்தியா தான் அவங்களோட 'ஃபேவரைட்' இடமாம்
  2. விலை குறைப்புனா இதுதான் விலை குறைப்பு! Samsung Galaxy S24 இப்போ ரூ.31,000 தள்ளுபடியில் அமேசானில் கிடைக்குது
  3. ஒன்பிளஸ் பிரியர்களுக்கு ஜாக்பாட்! 6,000mAh பேட்டரி, ஸ்னாப்டிராகன் 8 Gen 3 சிப்செட் - இப்போ செம மலிவான விலையில்
  4. ரெட்மி-க்கு செம டஃப்! பட்ஜெட் விலையில பிரீமியம் அம்சங்களை அள்ளித் தெளிக்கும் Moto G67 & G77 - நீங்க எதை வாங்குவீங்க?
  5. போனுக்குள்ளேயே ஃபேனா? 7000mAh பேட்டரி வேறயா! பட்ஜெட் விலையில் பிளாக்ஷிப் கேமிங் போன் - REDMAGIC 11 Air வந்தாச்சு
  6. விவோ-வோட அடுத்த அதிரடி! 7,200mAh பேட்டரி, IP69 பாதுகாப்பு - ஆனா இது 5G இல்லையா?
  7. ரெட்மி நோட் 15 ப்ரோ சீரிஸ் வந்தாச்சு! 200MP கேமரா, IP69 ரேட்டிங்-னு மொரட்டுத்தனமா இருக்கு
  8. சார்ஜ் போட மறந்துட்டீங்களா? கவலையே படாதீங்க! 10,001mAh பேட்டரியுடன் Realme P4 Power 5G வந்தாச்சு
  9. நீங்க ஆவலோட வெயிட் பண்ண Find X9s வராதாம்! ஆனா அதைவிட ஒரு பெரிய சர்ப்ரைஸ் காத்திருக்கு
  10. சாம்சங் ரசிகர்களே ரெடியா? Galaxy S26 சீரிஸின் விலை விவரங்கள் இதோ! Ultra மாடல் விலை குறையப்போகுதா?
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »