இந்தியாவில் முதன்முறையாக ஹானர் 20 இன்று விற்பனைக்கு வரவுள்ளது. ஃப்ளிப்கார்ட்டில் விற்பனைக்கு வரவுள்ள இந்த ஸ்மார்ட்போனை, இந்தியாவின் பெரிய ஸ்மார்ட்போன் விற்பனை செய்யும் கடைகளிலும் பெற்றுக்கொள்ளலாம். ஹானர் நிறுவனம், ஹானர் 20i, ஹானர் 20 Pro ஆகிய ஸ்மார்ட்போன்களுடன் அறிமுகப்படுத்திய மூன்றாவது ஸ்மார்ட்போன்தான் இந்த ஹானர் 20. மூன்று ஸ்மார்ட்போன்களுமே இந்தியாவில் இரண்டு வாரங்கள் முன்பே அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில், ஹானர் 20i-யின் விற்பனை முன்னதாக இந்தியாவில் நடைபெற்றது. இன்னும் ஹானர் 20 Pro விற்பனை தேதி அறிவிக்கப்படாத நிலையில், இந்தியாவில் இன்று ஹானர் 20 ஸ்மார்ட்போனின் விற்பனை நடைபெறவுள்ளது. இந்த 'ஹானர் 20' ஸ்மார்ட்போனின் விலை, சலுகைகள், சிறப்பம்சங்கள் உள்ளே!
இந்தியாவில் ஒரே ஒரு வகையில் மட்டும் அறிமுகமாகவுள்ள இந்த 'ஹானர் 20' ஸ்மார்ட்போனின் விலை 32,999 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இன்று விற்பனைக்கு வரவுள்ள இந்த ஸ்மார்ட்போன் 6GB RAM மற்றும் 128GB சேமிப்பு அளவை கொண்டுள்ளது. இரண்டு வண்ணங்களில் கிடைக்கப்பெரும் இந்த ஸ்மார்ட்போன், கருப்பு (Midnight Black) மற்றும் நீலம் (Sapphire Blue) என்ற இரண்டு வண்ணங்களை கொண்டுள்ளது.
இணைய சந்தையில் ஃப்ளிப்கார்ட்டில் மட்டும் விற்பனைக்கு வரவுள்ள இந்த ஸ்மார்ட்போன், இந்தியாவின் பெரிய ஸ்மார்ட்போன் விற்பனை செய்யும் கடைகளிலும் கிடைக்கப்பெரும். இந்த ஸ்மார்ட்போனின் விற்பனை ஜூன் 25-ஆம் தேதியான இன்று மதியம் 12 மணிக்கு துவங்கவுள்ளது.
இந்த ஸ்மார்ட்போனை 'லவ் இட் ஆர் ரிடர்ன் இட்' (Love it or Return it) என்ற சவால் ஒன்றுடனே விற்பனை செய்யவுள்ளது. இந்த சவாலின்படி, ஒருவர் 90 நாட்கள் அந்த ஸ்மார்ட்போனை பயன்படுத்தலாம். 90 நாட்களில், இந்த ஸ்மார்ட்போனை உபயோகிப்பதற்கு நன்றாக இல்லை என்று திருப்பி அளித்தால், ஸ்மார்ட்போனை பெற்ற தொகையிலிருந்து 90 சதவிகித தொகையை திருப்பி அளிப்பதாக இந்த நிறுவனம் அறிவித்துள்ளது.
இரண்டு நானோ சிம் வசதி கொண்ட இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்ட் 9 பை (Android 9 Pie) அமைப்பை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் கிரின் 980 எஸ் ஓ சி (Kirin 980 SoC) ப்ராசஸர் பொருத்தப்பட்டுள்ளது.
6.26-இன்ச் FHD+ (1080x2340 பிக்சல்) திரை, ஹோல்-பன்ச் செல்பி கேமரா டிஸ்ப்ளே, 19.5:9 திரை விகிதம் என்ற திரை அம்சங்களை கொண்டுள்ளது.
ஹானர் 20 ஸ்மார்ட்போன் பின்புறத்தில் நான்கு கேமராக்கள் பொருத்தப்பட்டு வெளியாகவுள்ளது. அதன்படி 48 மெகாபிக்சல் அளவிலான முதன்மை கேமரா, 16 மெகாபிக்சல் அளவிலான 117-டிகிரி ஆங்கிள் வரை விரிந்த புகைப்படங்களை எடுக்கும் வைட்-ஆங்கிள் கேமரா, 2 மெகாபிக்சல் அளவிலான டெப்த்-சென்சார் கேமரா மற்றும் 2 மெகாபிக்சல் அளவிலான் மேக்ரோ கேமரா என நான்கு கேமராக்களை கொண்டுள்ளது.
இதன் முன்புறத்தில், 32 மெகாபிக்சல் அளவிலான செல்பி கேமரா பொருத்தப்பட்டுள்ளது.
128GB சேமிப்பு அளவு கொண்ட இந்த ஹானர் 20 ஸ்மார்ட்போனில், சேமிப்பை கூட்டிக்கொள்ள SD கார்ட் வசதியில்லை. டைப்-C சார்ஜர் போர்ட் கொண்டு வெளியாகியுள்ள இந்த ஸ்மார்ட்போனில் 4G வசதி, வை-பை மற்றும் ப்ளூடூத் v5.0 வசதி என அனைத்தும் இடம்பெற்றுள்ளது. 154.25x73.97x7.87mm என்ற அளவை கொண்ட இந்த ஸ்மார்ட்போன் 174 கிராம் எடையை கொண்டுள்ளது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்