விரைவில் வெளியாக இருக்கும் ஹானர் 10ஐ போனின் எக்ஸ்க்ளூசிவ் தகவல்களை ரஷ்யாவை சேர்ந்த ஒரு நிறுவனம் வெளியிட்டுள்ளது. விலை மற்றும் வெளியாகும் தேதி பற்றிய தகவல்கள் இன்னும் அறியப்படாத நிலையில் தற்போது வெளியான புகைப்படத்தில் ஹானர் 10 ஐ ஸ்மார்ட்போன், ஏற்கனேவே வெளியான ஹானர் 10 லைட் போனைப்போலவே இருப்பதாக தெரிகிறது.
மேலும் இந்த புகைப்படங்களில் போனின் வடிவம் மற்றும் வாட்டர் டிராப் நாட்சை கொண்டிருப்பதை காண முடிகிறது. அதுபோல் இந்த ஹானர் 10 ஐ ஸ்மார்ட்போன் 6.21 இஞ்ச் ஹெச்டிதிரை, பின்புறத்தில் ஃபிங்கர் பிரிண்ட் சென்சார் மற்றும் 24/8/2 மெகா பிக்சல் கேமராக்களை கொண்டுள்ளதாக வெளியான தகவலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்புறத்தில் இருக்கும் செல்ஃபி கேமராவை பொருத்தவரைக்கும் 32 மெகா பிக்சல் சென்சார் இருப்பதாக தகவல் கசிந்துள்ளது. போனின் மற்ற அமைப்புகள் பொருத்தவரை 4ஜிபி ரேம்,128ஜிபி சேமிப்பு வசதி மற்றும் 3,650mAh பேட்டரி வசதி இருக்கும் என தகவல் கசிந்துள்ளது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்