ரூபாய் 13,999 முதல் 17,999 வரை விலைகளில் விற்பனை செய்யப்படும் ஹானர் 10 லையிட்.
ஃபிப்கார்ட் மற்றும் ஹைய் ஹானர் கடைகளில் விற்பனையாகும் ஹானர் 10 லையிட்
டெல்லியில் இன்று பத்திரிகையாளர்கள் சந்திப்பில் ஹானர் 10 லைட் அறிமுகம் செய்யப்பட்டது. சீனாவில் கடந்த நவம்பர் மாதம் அறிமுகம் செய்யப்பட்ட இந்த வகை ஸ்மார்ட்போன் இந்தியாவில் ஃபிளிப்கார்ட் மற்றும் ஹூவாய் ஹானர் ஸ்டோர்களில் விற்பனை செய்யப்படுகிறது.
செயற்கை அறிவியலால் இயங்கும் 24 மெகா பிக்சல் செல்ஃபி கேமரா இந்த ஸ்மார்ட்போனின் சிறப்பு அம்சமாகும். மேலும் இந்த ஸ்மார்ட்போன் ஹூவாய் சிலீக்கான் கிரின் 710 எஸ்ஓசி மூலம் இயங்குகிறது. அத்துடன் ஆண்டிராய்டு 9 பைய் மூலம் இயங்குகிறது என்பது கூடுதல் தகவல்.
‘டியுடிராப்' டிஸ்பிளே கொண்ட இந்த ஸ்மார்ட்போன், கடந்த ஆண்டு வெளியான ஹானர் 9 லைட் ஸ்மார்ட்போனை தொடர்ந்து வெளியாகவுள்ளது.
இந்த ஹானர் 10 லைட் ஸ்மார்ட்போனின் 4ஜிபி ரேம் வகை ரூபாய் 13,999 க்கு விற்பனை செய்யப்படவுள்ளது. அதே வகையான 6ஜிபி ரேம் கொண்ட ஹானர் ஸ்மார்ட்போன் 17,999 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படவுள்ளது.
இரண்டு மாடல்களும் மிட்னைட் பிளாக், சாப்பையர் புளூ மற்றும் ஸ்கை புளூ நிறங்களில் வெளியாகுகிறது. ஆன்லைனில் தனது விற்பனையை வரும் ஜனவரி மாதம் 20 ஆம் தேதி சரியாக இரவு 12 மணி முதல் தொடங்குகிறது.
அத்துடன் ஜியோ சார்பாக 2,200 ரூபாய் கேஷ்பேக்கும் கிளியர் டிரிப் சார்பாக 2,800 மதிப்புள்ள வவுச்சர்கள் தரவுள்ளனர்.
ஹானர் நிறுவனம் அளித்துள்ள தகவல் படி 1.5 மில்லியனுக்கு மேலான ஹானர் 9 லைட் போன்களை விற்றுள்ளதாக தகவலை வெளியிட்டனர். மேலும் ஃபிளிப்கார்ட் நிறுவனம் வெளியிட்ட 2018 ஆம் ஆண்டின் மிகவும் பிரபலமான ஸ்மார்ட்போன்களின் பட்டியலில் ஹானர் 9 லைட் ஸ்மார்ட்போன் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
iPhone 17e, Affordable MacBook Said to Launch Next Year Alongside 12th Generation iPad