ஹூவாய் துணை நிறுவனமான ஹானர், தனது ஹானர் 10 லைட் ஸ்மார்ட்போனை இந்தியாவில் இந்த மாதம் வெளியிட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், ஹைசிலிகான் கிரின் 710 பிராசஸர், நாட்ச் டிஸ்பிளே கொண்டுள்ளது.
ஹானர் 10 லைட் ஸ்மார்ட்போனானது சீனாவில் கடந்த நவம்பர் மாதமே அறிமுகப்படுத்தப்படுகிறது. ஹானர் 10 லைட் 4ஜிபி ரேம்/64ஜிபி நினைவகம் கொண்ட வேரியண்டின் விலையானது சீனாவில் CNY 1,399 (தோராயமாக ரூ.14,400 ஆகும்). 6ஜிபி ரேம்/64ஜிபி நினைவகம் கொண்ட மாடலின் விலையானது CNY 1,699 (தோராயமாக ரூ.17,500) 6ஜிபி ரேம்/128ஜிபி நினைவகம் கொண்ட மாடலின் விலை CNY 1,899 (தோராயமாக ரூ.19,500 ஆகும்). இது நான்கு கலர் வேரியண்டுகளில் கிடைக்கிறது.
டூயல் சிம் கொண்ட ஹானர் 10 லைட் ஸ்மார்ட்போனானது, ஆண்ட்ராய்டு 9.0 பையில் இயங்குகிறது. இதில் 6.21 இன்ச் புல்எச்.டி+(1080x2340பிக்செல்ஸ்) டிஸ்பிளே உடன் பிக்செல் டென்சிட்டி 415ppi கொண்டுள்ளது. மேலும், இதில் ஆக்டா கோர் ஹைசிலிகான் கிரின் 710 பிராசஸர், 2.2GHz கொண்டுள்ளது. இதில் 4ஜிபி ரேம் மற்றும் 6ஜிபி ரேம் வகைகளும் உள்ளது.
ஹானர் 10 லைட் ஸ்மார்ட்போனில், டூயல் கேமரா உடன் 13 மெகா பிக்செல் பிரைமரி சென்சார் உடன் f/1.8 அப்பர்செர் மற்றும் 2 மெகா பிக்செல்ஸ் செகண்டரி சென்சார். முன்பக்கம் கேமராவை பொறுத்தவரையில், 24 மெகா பிக்செல் கேமரா உடன் f/2.0 அப்பர்செர் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 64ஜிபி மற்றும் 128ஜிபி நினைவகம் கொண்டுள்ளது. இந்த இரண்டு வகைகளிலும் SD கார்டு கொண்டு (512ஜிபி வரை) நினைவகத்தை விரிவுபடுத்தி கொள்ளலாம்.
இந்த ஹானர் 10 லைட் ஸ்மார்ட்போனின் அளவானது 154.8x73.64x7.95mm and இடையானது 162 கிராம் ஆகும். மேலும் இதில் 3,400mAh பேட்டரி திறன் கொண்டுள்ளது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்