Photo Credit: HMD
நீங்கள் பட்ஜெட் விலையில் புதிதாக ஸ்மார்ட்போன், வாட்ச், ஸ்பீக்கர் உட்பட எது வாங்க திட்டமிடுகிறீர்கள் என்றாலும் இந்த பதிவு உங்களுக்கானது மக்களே. நீங்கள் எதிர்பார்க்கும் விலைக்குள் எந்த ஸ்மார்ட்போன் சிறந்தது? எந்த போன் சிறந்த பெர்பார்மென்ஸை கொண்டுள்ளது? எந்த போனில் கேமரா அம்சம் மிரட்டலாக இருக்கிறது? எந்த போனில் டிஸ்பிளே சூப்பராக அமைந்துள்ளது? எது பட்ஜெட்டில் சூப்பர் போன்? என்பது போன்ற விபரங்களை நாங்கள் உங்களுக்கு விளாவாரியாக சொல்லப்போகிறோம். இப்போ நாம் பார்க்க இருப்பது HMD Skyline செல்போன் பற்றி தான்.
HMD Skyline செல்போன் கடந்த ஜூலை மாதம் உலக சந்தையில் அறிமுகமானது. தற்போது இதே போன் இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. Snapdragon 7s Gen 2 சிப்செட் மூலம் இயங்குகிறது. ஆண்ட்ராய்டு 14 மூலம் இயக்கப்படுகிறது. 4600mAh பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது. புது அம்சமாக பயனாளர்களே சுயமாக பழுதுபார்க்கும் கருவியுடன் அனுப்பப்படுகிறது. டிஸ்பிளே மற்றும் பேட்டரி உட்பட போனின் சில பகுதிகளை பயனர்கள் பிரித்து மாற்றலாம். 108 மெகாபிக்சல் டிரிபிள் ரியர் கேமரா யூனிட் மற்றும் 50 மெகாபிக்சல் செல்ஃபி ஷூட்டர் கேமராவை கொண்டுள்ளது.
HMD Skyline செல்போன் 12GB ரேம் + 256GB மெமரி மாடல் 35,999 ரூபாய் விலையில் விற்கப்படுகிறது. நியான் பிங்க் மற்றும் ட்விஸ்டட் பிளாக் வண்ணங்களில் விற்பனைக்கு வந்துள்ளது. அமேசான், எச்எம்டி இந்தியா இணையதளம் மற்றும் ஆஃப்லைன் சில்லறை விற்பனைக் கடைகள் வழியாக விற்பனைக்கு வந்துள்ளது.
6.55-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் POLED டிஸ்பிளே கொண்டுள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1000 நிட்ஸ் ப்ரைட்னஸ், கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளது. பெரிய டிஸ்பிளே என்பதால் இதைப் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். ஆண்ட்ராய்டு 14 அவுட்-ஆஃப்-தி-பாக்ஸில் இயங்குகிறது.
Hybrid OIS ஆதரவு கொண்ட 108எம்பி பிரைமரி கேமரா + 13எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 50எம்பி டெலிபோட்டோ லென்ஸ் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் கொண்டுள்ளது. செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 50எம்பி கேமராவும் இதில் உள்ளன. இதுதவிர எல்இடி பிளாஸ், 4கே வீடியோ பதிவு, OZO ஸ்பேஷியல் ஆடியோ கேப்சர், ஆட்டோ ஃபோகஸ் உள்ளிட்ட பல வசதிகள் இந்த போனில் உள்ளன. எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் அட்டகாசமான படங்களை எடுக்க முடியும்.
MD Gen 2 பழுதுபார்க்கும் கருவி இதனுடன் வருகிறது. இது பயனர்களுக்கு பின் பேனலை கழற்றி மாற்ற உதவுகிறது. இடது விளிம்பில் ஸ்பெஷல் பித்தன் வைக்கப்பட்டுள்ளது. அழுத்திப் பிடித்தல் மற்றும் இரட்டை அழுத்த செயல்களை செய்ய உதவுகிறது. Qualcomm aptX அடாப்டிவ் ஆடியோ திறன் கொண்ட இரட்டை ஸ்பீக்கர்கள் உள்ளன.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்