Photo Credit: HMD
நீங்கள் பட்ஜெட் விலையில் புதிதாக ஸ்மார்ட்போன், வாட்ச், ஸ்பீக்கர் உட்பட எது வாங்க திட்டமிடுகிறீர்கள் என்றாலும் இந்த பதிவு உங்களுக்கானது மக்களே. நீங்கள் எதிர்பார்க்கும் விலைக்குள் எந்த ஸ்மார்ட்போன் சிறந்தது? எந்த போன் சிறந்த பெர்பார்மென்ஸை கொண்டுள்ளது? எந்த போனில் கேமரா அம்சம் மிரட்டலாக இருக்கிறது? எந்த போனில் டிஸ்பிளே சூப்பராக அமைந்துள்ளது? எது பட்ஜெட்டில் சூப்பர் போன்? என்பது போன்ற விபரங்களை நாங்கள் உங்களுக்கு விளாவாரியாக சொல்லப்போகிறோம். இப்போ நாம் பார்க்க இருப்பது HMD Arc செல்போன் பற்றி தான்.
HMD Arc தாய்லாந்தில் சமீபத்திய மலிவு ஸ்மார்ட்போனாக அறிமுகப்படுத்தப்பட்டது. 60Hz HD+ டிஸ்ப்ளே, 13-மெகாபிக்சல் பின்புற கேமரா மற்றும் ஆண்ட்ராய்டு 14 (Go Edition) மூலம் இயங்குகிறது. டிஸ்பிளே கார்னிக் கொரில்லா கிளாஸ் பாதுகாப்புடன் உறுதியான போனாக வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் பயனாளர்களே செல்போனை பழுது நீக்கும் ஆப்ஷன் வழங்கப்படுகிறது. செல்போனுடம் வரும் கிட் மூலம் டிஸ்பிளே, பேட்டரியை பயனாளர்களே சுயமாக மாற்ற முடியும். இதனால் அங்கீகரிக்கப்பட்ட சேவை மையத்திற்குச் செல்ல வேண்டிய அவசியம் குறைகிறது.
HMD Arc 6.52-இன்ச் HD+ LCD திரையை கொண்டுள்ளது. இது 576 x 1,280 பிக்சல்கள் இருக்கும். 60Hz புதுப்பிப்பு வீதம், 20:9 விகிதம் மற்றும் 460 nits உச்ச பிரகாசம் கொண்ட திரையை பெற்றுள்ளது. 185.4 கிராம் எடை கொண்டது. கைபேசியானது சந்தையைப் பொறுத்து IP52 (ஐரோப்பா) மற்றும் IP54 தூசி மற்றும் நீர் எதிர்ப்பு மதிப்பீட்டைக் கொண்டுள்ளது.
HMD Arc யூனிசாக் 9863A சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது, 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரியுடன் இணைக்கப்பட்டுள்ளது. இது Android 14 (Go Edition) மூலம் இயங்குகிறது. மைக்ரோ எஸ்டி கார்டு வழியாக சேமிப்பகத்தை 128 ஜிபி வரை விரிவாக்க முடியும். இணம்தா ஸ்மார்ட்போன் இரண்டு ஆண்டுகளுக்கு புதுப்பிப்புகளைப் பெறும் என்று நிறுவனம் கூறுகிறது.
கேமரா பொறுத்தவரையில் HMD Arc ஆட்டோஃபோகஸுடன் கூடிய 13-மெகாபிக்சல் முதன்மை பின்புற கேமரா மற்றும் 5-மெகாபிக்சல் செல்ஃபி கேமராவை முன்பக்கத்தில் வாட்டர் டிராப்-ஸ்டைல் நாட்ச்சில் வைக்கப்பட்டுள்ளது. பொக்கே, நைட் மோட், தொழில்முறை முறை, ஸ்லோ மோஷன், விரைவு ஸ்னாப்ஷாட், ஃபில்டர்கள், டைம் லேப்ஸ் மற்றும் பனோரமா போன்ற அம்சங்களை கேமரா சப்போர்ட் செய்கிறது. HMD லோகோ அருகே ஒரு எல்இடி ஃபிளாஷ் சேர்க்கப்பட்டுள்ளது. இது ஒற்றை ஸ்பீக்கர் மற்றும் மைக்ரோஃபோன் யூனிட் கொண்டது.
10W வயர்டு சார்ஜிங் சப்போர்ட் உடன் 5,000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. இணைப்பு விருப்பங்களில் Wi-Fi, ப்ளூடூத் 5.2, GPS, 3.5mm ஆடியோ ஜாக் மற்றும் USB Type-C போர்ட் ஆகியவை உள்ளது. HMD Arc பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை சென்சார், மெய்நிகர் ரேம் ஆதரவு, முடுக்கமானி, சுற்றுப்புற ஒளி சென்சார் மற்றும் ப்ராக்ஸிமிட்டி சென்சார் ஆகியவற்றைப் பெறுகிறது. இதன் விலை ரூ.10,000 விலைக்குள் இருக்குமென்று கூறப்படுகிறது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்