கூகுள் நிறுவனத்தின் புதிய 5G ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகம்.. ஆனால்...!

கூகுள் நிறுவனத்தின் புதிய 5G ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகம்.. ஆனால்...!

இந்த இரு ஸ்மார்ட்போன்களும் அறிமுகம் செய்யப்படுவதற்கு வாய்ப்புகள் இல்லை

ஹைலைட்ஸ்
  • Google Pixel 5 5G and Pixel 4a 5G are tipped to launch on September 30
  • The phone will reportedly be offered in black and green colour options
  • The white variant of Google Pixel 4a 5G could launch on October 8
விளம்பரம்

கூகுள் நிறுவனத்தின் புதிய 5G ஸ்மார்ட்போன் அடுத்த மாதம் அறிமுகமாகவுள்ளதாக செய்திகள் வந்துள்ளன. 

கூகுள் நிறுவனம் சார்பில் பிக்சல் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது. உலகளவில் இந்த ஸ்மார்ட்போன்கள் நல்ல ஆதரவைப் பெற்றாலும், இந்தியாவில் போதிய வரவேற்ப்பை பெறவில்லை. 

இந்த நிலையில், தற்போது கூகுள் தரப்பில் பிக்சல் 5 மற்றும் 4a என்ற இரண்டு 5ஜி நெட்வொர்க் ஸ்மார்ட்போன்கள் செப்டம்பர் மாதம் அறிமுகமாகவுள்ளன. ஆனால், இந்த இரு ஸ்மார்ட்போன்களும் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதுதொடர்பாக டிப்ஸ்டர் தளம் கூறுகையில், அடுத்த மாதம் கூகுளின் புதிய 5ஜி ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளதாகவும்,  பிக்சல் 5 பச்சை நிறத்திலும் கருப்பு நிறத்திலும் அறிமுகமாகலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே போல் பிக்சல் 4a ஸ்மார்ட்போன் கருப்பு நிறத்தில் மட்டும் வரவுள்ளதாக என்று கூறப்படுகிறது. 

இவற்றில் பிக்சல் 5 ஸ்மார்ட்போன் செப்டம்பர் 30 ஆம் தேதியும், பிக்சல் 4a ஸ்மார்ட்போன் அக்டோபர் மாதமும் அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  இதனிடையே கூகுள் பிரான்ஸில் இந்த ஸ்மார்ட்போன்களுக்கான முன்பதிவு அக்டோபர் 8 ஆம் தேதி முதல் ஆரம்பமாவதாக டுவிட்டரில் தகவல்கள் வருகின்றன.

பெஞ்ச்மார்க் இணையதளத்தில் கூகுள் பிக்சல் 5 ஸ்மார்ட்போனில் ஸ்நாப்டிராகன் 765 SoC  பிராசசர் இருப்பதாக லீக் ஆகியுள்ளது. இருப்பினும் இந்தியாவில் இந்த இரு ஸ்மார்ட்போன்களும் அறிமுகம் செய்யப்படுவதற்கு வாய்ப்புகள் இல்லை. கூகுள் தரப்பிலும் இதுதொடர்பான உறுதியான எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.


Why are smartphone prices rising in India? We discussed this on Orbital, our weekly technology podcast, which you can subscribe to via Apple Podcasts, Google Podcasts, or RSS, download the episode, or just hit the play button below.

Comments

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Google, Pixel 5 5G, Pixel 4a 5G, Google Pixel 5 5G, Google Pixel 4a 5G
பேஸ்புக்கில் பகிரலாம் Gadgets360 Twitter Shareட்வீட் பகிர் Snapchat ரெட்டிட்டில் கருத்து
#சமீபத்திய செய்திகள்
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »