Photo Credit: 91Mobiles/ OnLeaks
Google Pixel 4a, 2020-ஆம் ஆண்டில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் அதன் அறிமுகம் வரை, போனின் ரெண்டர்கள் ஆன்லைனில் வெளிவந்துள்ளன. ரெண்டர் கசிவு, ஃபோன் ஒரு hole-punch டிஸ்ப்ளே வடிவமைப்பைக் கொண்டிருக்கும் என்று தெரிவிக்கிறது. இது தொழில்துறையின் தற்போதைய போக்கிலிருந்து எடுக்கப்படுகிறது. பின்புறத்தில், Google Pixel 4 போன்ற அதே சதுர தொகுதி கேமரா அமைப்பை ஒருங்கிணைத்துள்ளதாகத் தெரிகிறது. ரெண்டர்களில், தொகுதிக்குள் ஒற்றை பட சென்சார் இருப்பதை இந்த போனில் காணலாம். ஆனால், டிப்ஸ்டர் OnLeaks, கூகுள் அதிக பட சென்சார்களைச் சேர்க்கலாம் என்று அறிவுறுத்துகிறது.
போனின் வரவிருக்கும் வெள்ளை கலர் ஆப்ஷனில் பல ரெண்டர்கள் கசிந்துள்ளன. ஆனால், போன் கருப்பு மற்றும் ஊதா ஃபினிஷ்களிலும் அறிமுகமாகும் என்று அறிக்கை கூறுகிறது. இதில் கூடுதல் கலர் ஆப்ஷன் சேர்க்கப்படலாம். போன், குறிப்பிட்டுள்ளபடி, திரையின் மேல் இடதுபுறத்தில் கட்-அவுட்டுடன் ஒரு hole-punch டிஸ்ப்ளே இருப்பதைக் காணலாம். டிஸ்பிளேவின் எல்லா பக்கங்களிலும் பெசல்களின் மெல்லிய அவுட்லைன் உள்ளது. மேலும், போனில் 5.7-inch அல்லது 5.8-inch டிஸ்ப்ளே இடம்பெறக்கூடும் என்று அறிக்கை தெரிவிக்கிறது.
வெள்ளை கலர் பேக் பேனலில் மேட் ஃபினிஷ் மற்றும் கேமராவை வைக்க சதுர வடிவ தொகுதி உள்ளது. காணக்கூடிய கேமரா பம்ப் உள்ளது மற்றும் ரெண்டர்கள் ஒரே கேமரா அமைப்பை மட்டுமே பரிந்துரைக்கின்றன. இருப்பினும், டிப்ஸ்டர் அதிக பட சென்சார்கள் சேர்க்கப்பட வேண்டும் என்று பரிந்துரைக்கிறது. Pixel 4a-வில் rear fingerprint சென்சார் இடம்பெறுவதைக் காணலாம். மேலும் ‘G' லோகோ பின் பேனலின் அடிப்பகுதியில் வைக்கப்பட்டுள்ளது. ஆரஞ்சு நிற பவர் பொத்தான் மற்றும் வால்யூம் ராக்கர் ஆகியவை திரையின் வலது விளிம்பில் அமைந்துள்ளன. மேலும் கீழ் விளிம்பில் USB Type-C port மற்றும் ஸ்பீக்கர் கிரில் ஆகியவை உள்ளன. 3.5mm ஆடியோ ஜாக் மேல் விளிம்பில் காணப்படுகிறது. மேலும், இந்த போன் 144.2x69.5x8.2mm அளவிடுவதாகவும், கேமரா பம்பைச் சேர்த்தால், தடிமன் 9mm வரை அதிகரிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. Pixel 4a சீரிஸில் Motion Sense, ஒருங்கிணைக்கப்படுமா, இல்லையா என்பதில் தெளிவு இல்லை.
Google Pixel 4a சீரிஸ் அடுத்த ஆண்டு Google I/O 2020-ல் அறிமுகப்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 4 ஜிபி ரேம், 64 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ், குவால்காம் ஸ்னாப்டிராகன் 730 அல்லது ஸ்னாப்டிராகன் 765 சீரிஸ் SoC மற்றும் 12.2 மெகாபிக்சல் பிரதான பின்புற கேமரா ஆகியவை எதிர்பார்க்கப்படும் விவரக்குறிப்புகள் ஆகும். இந்த போன் 5G ஆதரவுடன் வரலாம்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்