இன்று வெளியாகும் Google Pixel 4, Pixel 4 XL!

விளம்பரம்
Written by Tasneem Akolawala மேம்படுத்தப்பட்டது: 15 அக்டோபர் 2019 16:37 IST
ஹைலைட்ஸ்
  • Snapdragon 855 SoC-யால் Pixel 4 series இயக்கப்படும்
  • 6.3-inch Quad HD+டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது Pixel 4 XL
  • வெளியீட்டு நிகழ்வு YouTube-ல் நேரடியாக ஒளிபரப்பப்படும்

Google Pixel 4 series-ன் வெளியீடு New York-ல் இன்று நடக்கிறது

Photo Credit: Twitter/ Evan Blass

கூகுள் Pixel 4 சீரிஸ் இன்று நியூயார்க்கில் நடைபெறும் நிறுவனத்தின் மேட் பை கூகுள் நிகழ்வில் தொடங்க உள்ளது. பிக்சல் 4 தொலைபேசிகள் traditional bezels, 90Hz display மற்றும் square-shaped dual rear camera module ஆகியவற்றைக் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

லைவ் ஸ்ட்ரீமிங் லிங்க் மற்றும் எதிர்பார்க்கப்படும் விலை: 

கூகுள் நியூயார்க்கில் Pixel 4 வெளியீட்டு நிகழ்வை யூடியூபில் நேரடியாக ஒளிபரப்பவுள்ளது. நேரடி ஸ்ட்ரீம் காலை 10 மணிக்கு EST. அதாவது இந்திய நேரப்படி இன்றிரவு 7.30 மணிக்குத் தொடங்கும். மேலும் அதை கீழே உள்ள வீடியோவில் பார்க்கலாம். 

tipster Evan Blass-ன் கூற்றுப்படி, Google Pixel 4-ன் 64GB ஸ்டோரேஜின் விலை CAD 1,049.95 (சுமார் ரூ. 56,000)-யில் இருந்து தொடங்கும். அதன் 128GB ஸ்டோரேஜின் விலை CAD 1,199.95 (சுமார் ரூ. 64,000) வரை செல்லும். 

Pixel 4 XL-ன் 64GB ஸ்டோரேஜ் CAD 1,199.95 (சுமார் ரூ. 64,000) விலையிலும், அதன் 128GB ஸ்டோரேஜ் CAD 1,359.95 (சுமார் ரூ. 72,500) விலையிலும் கிடைக்கும். 

Pixel 4 சீரிஸ், 'Pink', ‘Sky Blue', ‘Really Yellow', ‘Slightly Green', ‘Clearly White', ‘Just Black', மற்றும் ‘Oh So Orange' ஆகிய நிறங்களில் வரக்கூடும். அமெரிக்க வெளியீட்டு நிகழ்வுக்குப் பிறகு, இந்திய விலை மற்றும் கிடைக்கும் விவரங்கள் பற்றி விரைவில் அறிவிக்கப்படும். 

சிறப்பம்சங்கள்:

Pixel 4-ல் 5.7-inch full-HD+ OLED Smooth 90Hz டிஸ்பிளேவையும், Pixel 4 XL-ல் 6.3-inch Quad HD+ OLED Smooth 90Hz டிஸ்பிளேவையும் கொண்டிருக்கும். இரண்டு ஸ்மார்ட்போன்களும் 6 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி ஸ்டோரேஜுடன் இணைக்கப்பட்ட Snapdragon 855 SoC-யால் இயக்கப்படும். 

Advertisement

கேமராவைப் பொருத்தவரை, Pixel 4, Pixel 4 XL உடன்12 மெகாபிக்சல் மற்றும் 16 மெகாபிக்சல் சென்சார்கள் மற்றும் 4K video resolution-ன் ஆதரவைக் கொண்டிருக்கும். தொலைபேசிகள் 10 மெகாபிக்சல் முன் கேமராக்களை 1080p video resolution ஆதரவுடன் பேக் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. Face Unlock-யும் ஆதரிக்கும். Google Play Store-ல் பணம் செலுத்துவதற்கு Pixel 4 தொலைபேசிகளில் Face Unlock அம்சம் பயன்படுத்தப்படும் என்றும் சமீபத்திய அறிக்கை தெரிவிக்கிறது. 

Pixel 4-ல் 2,700mAh பேட்டரியையும், Pixel 4 XL-ல் அதிகமாக 3,700mAh பேட்டரியையும் பேக் செய்யும்.

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. Vi 5G விரிவாக்கம்: அடுத்த இரண்டு மாதங்களில் 90 நகரங்களுக்கு 5G சேவை வழங்கப்படும் என நிறுவனம் அறிவிப்பு
  2. ஆப்பிளின் ஏர் டிராப் (AirDrop) போன்ற புதிய வசதி: ஆண்ட்ராய்டு 17 மற்றும் One UI 9-ல் 'Tap to Share' அம்சம்களுடன்
  3. ஒன்பிளஸ் Ace 6 அல்ட்ரா ஏப்ரலில் அறிமுகமாக வாய்ப்பு: ரெட்மி K90 அல்ட்ராவுக்குப் போட்டியாக அமையுமா?
  4. விவோ X300s சிறப்பம்சங்கள் அதிகாரப்பூர்வமாக உறுதி: 200MP கேமரா மற்றும் 7,100mAh பேட்டரியுடன் வெளியாகிறது
  5. இந்தியாவில் அறிமுகமாகிறது ஓப்போ Find X9 Ultra: பிஐஎஸ் (BIS) தரவுத்தளத்தில் இடம்பெற்றதால் எதிர்பார்ப்பு அதிகரிப்பு
  6. லாவா போல்ட் N2 ப்ரோ 4G மார்ச் 31-ல் இந்தியாவில் அறிமுகம்: முக்கிய சிறப்பம்சங்களை வெளியிட்டது நிறுவனம்
  7. iOS 27-ல் ஆப்பிளின் புதிய 'சிரி' (Siri) செயலி: குரல் மற்றும் உரை முறைகளோடு, பிற நிறுவனங்களின் சாட்பாட்களுக்கான 'எக்ஸ்டென்ஷன்' வசதியையும் வழங்குகிறது
  8. ஆப்பிளின் முதல் மடிக்கக்கூடிய ஐபோன்: ஐபோன் வரலாற்றிலேயே மிகப்பெரிய மாற்றமாக இருக்கும் என மார்க் குர்மன் தகவல்
  9. முதன்முறையாக ஒரு வால்நட்சத்திரம் தனது சுழற்சி திசையை மாற்றுவதை படம் பிடித்த ஹப்பிள் தொலைநோக்கி
  10. கட்டுரைகளில் ஏஐ உருவாக்கிய உரைகளுக்கு விக்கிப்பீடியா தடை; ஆனால் இரண்டு விலக்குகளை அளித்துள்ளது
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.