வருகிறது கூகுள் பிக்சல் 3a மற்றும் 3a XL: விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் உள்ளே!

விளம்பரம்
Written by Gadgets 360 Staff மேம்படுத்தப்பட்டது: 8 மே 2019 14:49 IST
ஹைலைட்ஸ்
  • மே 15-ஆம் தேதி விற்பனைக்கு வரவுள்ள பிக்சல் போன்கள்
  • மே 8-ஆம் தேதியே முன்பதிவு துவக்கம்
  • 4GB RAM + 64GB சேமிப்பு அளவு கொண்டு வெளியாகவுள்ளது

இந்தியாவில் வெளியாக இருக்கும் கூகுள் பிக்சல் 3a மற்றும் 3a XL ஸ்மார்ட்போன்கள்

2019-க்கான கூகுள் I/O திருவிழா(Google I/O 2019) கடந்த மே 7 ஆம் தேதி துவங்கியது. மே 9-ஆம் தேதி வரை நடைபெற உள்ள இந்த விழாவில் முதல் நாளான நேற்று, கூகுள் நிறுவனம் தன் பல தயாரிப்புகள் மற்றும் மேம்பாட்டுகளை வெளியிட்டது.

அதில் கூகுள் நெஸ்ட் ஹப் மேக்ஸ், அண்ட்ராய்ட் Q பீடா 3, கூகுள் மேப்பில் இன்கொக்னிடோ (INCOGNITO) வசதி, கூகுள் லென்ஸ்-இல் பல மேம்பாடுகள் என பல முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டது. அதில் ஒரு முக்கிய அறிவிப்புதான் இந்த கூகுள் பிக்சல் 3a மற்றும் 3a XL. இந்த நிறுவனம் சென்ற வருடம் கூகுள் பிக்சல் 3 மற்றும் 3 XL அதன் விலையோ ஐம்பதாயிரங்களில் உள்ளது.

அதை கருத்தில் கொண்டு சற்று குறைந்த விலையில் ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் வெளியிடப்பட்ட போன்கள்தான் இந்த கூகுள் பிக்சல் 3a மற்றும் 3a XL. இந்த ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் எப்போது விற்பனைக்கு வரவுள்ளது, அதன் விலை என்ன, அதன் அம்சங்கள் என்னென்ன, வாருங்கள் தெரிந்துகொள்ளலாம்.

கூகுள் பிக்சல் 3a மற்றும் 3a XL ஸ்மார்ட்போன்களின் விலை!

கூகுள் பிக்சல் 3a மற்றும் 3a XL ஆகிய ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் வருகின்ற மே 15-ஆம் தேதி விற்பனைக்கு வரும் என்ற கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது. இருந்தாலும் இந்த ஸ்மார்ட்போன்களுக்கான முன்பதிவு மே 8-ஆம் தேதியான இன்றிலிருந்தே ஃப்ளிப்கார்ட்டில் துவங்க இருக்கிறது.

இந்த முன்பதிவு மதியம் 12:30 மணிக்கு ஃப்ளிப்கார்ட்  நிறுவனத்தில் துவங்க இருப்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் சில நாட்களில் இந்தியாவிற்கு விற்பனைக்கு வரவுள்ள கூகுள் பிக்சல் 3a மற்றும் 3a XL, 4GB RAM + 64GB சேமிப்பு அளவு கொண்டு ஓரே வகையில்தான் வெளிவரவுள்ளது. இந்த ஸ்மார்ட்போன்களுக்கு இந்தியாவில் விற்பனை விலையை அறிவித்துள்ள கூகுள் நிறுவனம், கூகுள் பிக்சல் 3a ஸ்மார்ட்போனுக்கு ரூபாய் 39,999-ம் மற்றும் கூகுள் பிக்சல் 3a XL ஸ்மார்ட்போனுக்கு ரூபாய் 44,999 எனவும் விலை நிர்ணயம் செய்துள்ளது.

மேலும் இந்த போன்கள் கருப்பு, வெள்ளை மற்றும் பர்ப்லிஷ் (வெள்ளை நிறத்தில் ஊதா நிறம் கலந்தது போன்ற வண்ணம்) ஆகிய வண்ணங்களில் விற்பனைக்கு கிடைக்கும் எனவும் கூறியிருந்தது. 

இந்தியா, அமெரிக்கா உட்பட 13 நாடுகளில் இந்த இரு ஸ்மார்ட்போன்களையும் வெளியிட உள்ளது இந்த நிறுவனம். அமேரிக்காவில்  கூகுள் பிக்சல் 3a ஸ்மார்ட்போனின் விலை $399 (ரூபாய் 28,000) மற்றும் கூகுள் பிக்சல் 3a XL ஸ்மார்ட்போனின் விலை $479 (ரூபாய் 33,500) என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

கூகுள் பிக்சல் 3a மற்றும் 3a XL ஸ்மார்ட்போன்களின் அம்சங்கள்!

ஓரே ஒரு சிம் கார்டை மட்டும் இணைத்துக்கொள்ளும் வசதி கொண்ட இந்த ஸ்மார்ட்போன்கள் அண்ட்ராய்ட் 9.0 பை (Android 9.0 Pie) அமைப்பு கொண்டு இயங்குகிறது. ஒரு சிம் கார்ட் மட்டுமே இணைத்துக்கொள்ளும் வசதி இருந்தாலும், ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் இந்த ஸ்மார்ட்போன்களில் இ-சிம் வாயிலாக தங்கள் சேவைகளுடன் இணைந்து கொள்ளலாம் என கூறியுள்ளது.

Advertisement

இ-சிம் என்பது என்னவென்றால், நாம் அன்றாடம் நம் மொபைல்போன்களில் பயன்படுத்தும் ப்லாஸ்டிக் கார்டுகள் இல்லாமலேயே அந்த தொலைதொடர்பு நிறுவனங்களின் சேவைகளில் இணைந்துகொள்ளலாம். மேலும் இந்த ஸ்மார்ட்போன்கள் அந்த நிறுவனத்தின் AR எனப்படும் ஆகுமென்டெட் ரியாலிடி (Augmented Reality) வசதிகளை ஏற்றுக்கொள்ளும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போன்கள் ஸ்னேப்ட்ரேகன் 670 ஒருங்கிணைக்கப்பட்ட அமைப்பு மூலம் இயங்குகிறது. இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களும் 4GB RAM மற்றும் 64GB சேமிப்பு அளவு கொண்டே வெளியாக உள்ளது. கூகுள் பிக்சல் 3a 5.7-இன்ச் FHD+ திரை, 1080x2220 என்ற பிக்சல்கள் கொண்ட திரை மற்றும் 18.5:9 என்ற திரை விகிதத்தில் வெளியாகவுள்ளது. அதே நேரத்தில் கூகுள் பிக்சல் 3a XL 6-இன்ச் FHD+ திரை, 1080x2160 என்ற பிக்சல்கள் கொண்ட திரை மற்றும் 18:9 என்ற திரை விகிதம் கொண்டு வெளியாகவுள்ளது. பிக்சல் 3-ல் இருப்பது போன்று கண்ணாடி போல் இல்லாமல், இந்த ஸ்மார்ட்போன்களின் உடல் பகுதி பாலிகார்பனேட்டால்(Polycarbonate) தயாரிக்கப்பட்டுள்ளது.

அடுத்து இந்த ஸ்மார்ட்போன்களில் பேசப்படவேண்டிய முக்கியமான அம்சம், கேமரா. பின்புறம் மற்றும் முன்புறம் என இருபுறங்களிலும் ஒரே ஒரு கேமராவை வைத்தே இந்த இரு ஸ்மார்ட்போன்களும் தயாரிக்கப்பட்டுள்ளது.

Advertisement

பின்புறம் 12.2MP கேமராவும், முன்புறத்தில் 8MP கேமராவும் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இரு போன்களின் கேமராவும் நல்ல தரத்தில் ஒளி குறைவான இடங்களில் கூட நல்ல படங்களை எடுக்கும் வண்ணம் அமைந்துள்ளது. மேலும் இருபுறம் இருக்கும் கேமராக்களிலும் உள்ள பொர்ட்ரைட் (Portrait Mode) வசதி, படத்தின் ஆழத்தை நாமே சரி செய்துகொள்ளும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ளது.

பிக்சல் 3a 3,000mAh பேட்டரி அளவு கொண்டும், பிக்சல் 3a XL 3,700mAh பேட்டரி அளவு கொண்டும் உள்ளது. இதன் பேட்டரி, அதிகபட்சமாக 30 மணி நேரம் வரை நீடிக்கும் சக்தியுள்ளது. மேலும் இதன் 18-வாட் சார்ஜர், நீங்கள் இந்த போனை வெறும் 15 நிமிடங்கள் சார்ஜ் செய்தாலே, 7 மணி நேரம் நீடிக்கும் பேட்டரி திறனை அளிக்கும். மேலும் இந்த மொபைல்போன்களில் 4G வசதி, வை-பை, ப்ளுடூத் v5.0, மற்றும் 3.5mm ஹெட்போன் ஜாக் போன்ற வசதிகள் உள்ளன.

151.3x70.1x8.2mm என்ற அளவு கொண்ட கூகுள் பிக்சல் 3a, 147 கிராம் எடை கொண்டுள்ளது. அதே நேரம் 160.1x76.1x8.2mm என்ற அளவு கொண்ட கூகுள் பிக்சல் 3a XL, 167 கிராம் எடை உள்ளது.

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Very good cameras
  • Good software features
  • Guaranteed updates for three years
  • Stereo speakers
  • Bad
  • Expensive
  • Weak processor and low storage for the price
 
KEY SPECS
Display 5.60-inch
Processor Qualcomm Snapdragon 670
Front Camera 8-megapixel
Rear Camera 12.2-megapixel
RAM 4GB
Storage 64GB
Battery Capacity 3000mAh
OS Android 9 Pie
Resolution 1080x2220 pixels
NEWS
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Very good cameras
  • Good software features
  • Guaranteed updates for three years
  • Stereo speakers
  • Bad
  • Expensive
  • Weak processor and low storage for the price
 
KEY SPECS
Display 6.00-inch
Processor Qualcomm Snapdragon 670
Front Camera 8-megapixel
Rear Camera 12.2-megapixel
RAM 4GB
Storage 64GB
Battery Capacity 3700mAh
OS Android 9 Pie
Resolution 1080x2160 pixels
NEWS

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

குடியுரிமை ரோபோ. எனக்கு மின்னஞ்சல் அனுப்பினால், ஒரு மனிதர் பதிலளிப்பார்.

...மேலும்
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. iPhone 17e வருது! பட்ஜெட் ஐபோன்ல இப்போ மேக்சேஃப் சப்போர்ட்.. சிங்கிள் கேமராவோட தரமான சம்பவம் பண்ணப்போற ஆப்பிள்
  2. சாம்சங், ஐபோனுக்கே டஃப் கொடுக்க ஷாவ்மி ரெடி! Xiaomi 17 Ultra-வோட குளோபல் ரெண்டர்ஸ் லீக்.. அந்த 200MP ஜூம் வேற லெவல்
  3. பிக்சல் 10ஏ-ல இவ்வளவு சூப்பர் கலர்ஸா? லீக்கான 4 மாஸ் கலர்கள் இதோ! பிப்ரவரி 18-க்காக வெயிட்டிங்
  4. கனவு விலையில் Vivo V50 5G! Flipkart-ல் மெகா டிஸ்கவுண்ட்.. 6000mAh பேட்டரி, Zeiss கேமரா இப்போ இவ்வளவு கம்மி விலையிலா?
  5. இனி பிளாக்ஷிப் போன் பட்ஜெட் விலையில்! Samsung Galaxy S24 FE இப்போ Amazon-ல் செம சீப்.. மிஸ் பண்ணிடாதீங்க
  6. ஸ்மார்ட்போன் ஹிஸ்டரிலயே இப்படி ஒரு பேட்டரியா? 7,400mAh உடன் மிரட்டும் iQOO 15 Ultra! கேமர்களுக்கு இதுதான் இனி ஒரே சாய்ஸ்
  7. பிக்சல் ரசிகர்களுக்கு குட் நியூஸ்! Google Pixel 10a எப்போ வருது தெரியுமா? டிசைன் மற்றும் கலர் டீசர் ரிலீஸ்
  8. விவோவோட அடுத்த தரமான போன் ரெடி! Geekbench-ல் மிரட்டும் Vivo V70 Elite.. பட்ஜெட்ல ஒரு பிளாக்ஷிப் போனா?
  9. விலை குறைந்தது OnePlus 13! பிளிப்கார்ட்டில் ரூ.12,000 வரை சேமிக்க ஒரு சூப்பர் வாய்ப்பு. ஆஃபரை எப்படி பெறுவது?
  10. S26 Ultra-வோட புது கலர்ஸ் பார்த்தீங்களா? சாம்சங் ரசிகர்களுக்குப் பிடிச்ச அந்த ஒரு கலர் திரும்ப வருது! டிசைன்லயும் பெரிய மாற்றம்
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.