கூகிள் பிக்சல் 10 ப்ரோ ஃபோல்டு (படம்) முந்தைய மாடலைப் போன்ற வடிவமைப்பைக் கொண்டுள்ளது
Photo Credit: Google
ஸ்மார்ட்போன் தொழில்நுட்பத்தில் புதுமைகளை புகுத்துவதில் கூகிள் நிறுவனம் எப்போதும் ஒரு படி மேலே இருக்கும். அந்த வகையில, அவர்கள் இப்போது, தங்கள் பத்தாவது தலைமுறை Pixel போன்களில், பல வருட ஆராய்ச்சியின் பலனாக ஒரு பிரமாண்டமான படைப்பை அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள். அதுதான், Google Pixel 10 Pro Fold. இந்த ஸ்மார்ட்போன், வழக்கமான போன்களின் எல்லைகளைத் தாண்டி, ஃபோல்டபிள் போன் சந்தையில் புதிய புரட்சியை ஏற்படுத்தியிருக்கிறது. விலை அதிகமாக இருந்தாலும், அதன் தனித்துவமான அம்சங்கள் மற்றும் AI திறன்களால் இது தொழில்நுட்ப ஆர்வலர்களை தன் பக்கம் ஈர்த்துள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் விலை மற்றும் முழுமையான அம்சங்கள் குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம். Google Pixel 10 Pro Fold-ன் விலை இந்தியாவில ₹1,72,999-க்கு நிர்ணயம் செய்யப்பட்டிருக்கு. இது, 16GB RAM மற்றும் 256GB ஸ்டோரேஜ் கொண்ட ஒரே ஒரு மாடலில் மட்டுமே கிடைக்கிறது. இந்த பிரீமியம் ஃபோல்டபிள் போன், மூன்ஸ்டோன் (Moonstone) என்ற ஒரு கலரில் மட்டுமே விற்பனைக்கு வருகிறது.
இந்த போனின் மிக முக்கியமான அம்சம், அதன் ப்ராசஸர் மற்றும் டிஸ்ப்ளே. இது, கூகிள் நிறுவனத்தின் அடுத்த தலைமுறை சிப்செட் ஆன Tensor G5-ல் இயங்குகிறது. இது 3nm தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டதால், இது முந்தைய மாடல்களை விட வேகமான செயல்திறனையும், குறைவான மின் நுகர்வையும் வழங்குகிறது. இந்த சிப்செட், மேம்பட்ட AI அம்சங்களை சிறப்பாக கையாளும் திறன் கொண்டது. இதன் மூலம், தினசரிப் பயன்பாடுகள் முதல் கேமிங் வரை அனைத்திலும் தடையற்ற அனுபவத்தை பெறலாம்.
டிஸ்ப்ளேவைப் பற்றி பேசினால், இந்த போனில் இரண்டு அற்புதமான டிஸ்ப்ளேக்கள் உள்ளன. வெளிப்புறத்தில், 6.4-இன்ச் ஆக்டுவா டிஸ்ப்ளே கொடுக்கப்பட்டிருக்கிறது. இதை திறந்தால், உள்ளே 8-இன்ச் சூப்பர் ஆக்டுவா ஃபிளெக்ஸ் டிஸ்ப்ளே விரிகிறது. இந்த இரண்டு டிஸ்ப்ளேக்களும் 120Hz ரிஃப்ரெஷ் ரேட் கொண்டதால், ஸ்க்ரோலிங் மற்றும் மல்டிமீடியா பயன்பாடுகள் மிக மிக மென்மையாக இருக்கும். இந்த டிஸ்ப்ளேக்களின் உச்சபட்ச பிரைட்னஸ் 3,000 nits வரை செல்கிறது. எனவே, சூரிய ஒளியில் கூட டிஸ்ப்ளே மிகத் தெளிவாகத் தெரியும்.
பேட்டரியைப் பொறுத்தவரை, இதுல ஒரு பெரிய 5,015mAh பேட்டரி இருக்கு. இது, ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால், 24 மணி நேரத்துக்கும் மேல் நீடிக்கும் என்று கூகிள் நிறுவனம் தெரிவித்துள்ளது. இது 30W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 15W வயர்லெஸ் சார்ஜிங்கையும் சப்போர்ட் பண்ணுது. கேமராவை பொறுத்தவரை, பின்பக்கத்தில் ஒரு ட்ரிபிள் கேமரா செட்டப் இருக்கு. அதுல மெயின் கேமரா, 48-மெகாபிக்சல். கூடவே, 10.5-மெகாபிக்சல் அல்ட்ராவைடு மற்றும் 5x ஆப்டிகல் ஜூம் கொண்ட 10.8-மெகாபிக்சல் டெலிஃபோட்டோ கேமரா ஆகியவை உள்ளன. AI அம்சங்களுடன், இந்த கேமராக்கள் புகைப்படங்களை மேலும் துல்லியமாகவும், அழகாகவும் எடுக்க உதவுகின்றன. செல்ஃபிக்காக வெளிப்புற மற்றும் உட்புற டிஸ்ப்ளேக்களிலும் 10-மெகாபிக்சல் கேமராக்கள் உள்ளன.
இந்த போனின் மிக முக்கியமான அம்சம், அதன் வலிமையான கட்டமைப்பு. இது, IP68 ரேட்டிங் பெற்ற உலகின் முதல் ஃபோல்டபிள் போன் ஆகும். அதாவது, இது தூசி மற்றும் தண்ணீரால் பாதிக்கப்படாது. மேலும், இதன் ஹிஞ்ச் (hinge) மிகவும் வலிமையானதாக வடிவமைக்கப்பட்டுள்ளதால், கிட்டத்தட்ட 10 வருடங்கள் வரை எந்தவித சிக்கலும் இல்லாமல் பயன்படுத்தலாம் என்று கூகிள் உத்தரவாதம் அளித்துள்ளது. இந்த போன், Android 16-ல் இயங்குகிறது, மேலும் 7 வருடங்களுக்கு OS மற்றும் செக்யூரிட்டி அப்டேட்களும் கிடைக்கும்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
...மேலும்