Photo Credit: Samsung
நீங்கள் பட்ஜெட் விலையில் புதிதாக ஸ்மார்ட்போன், வாட்ச், ஸ்பீக்கர் உட்பட கேட்ஜெட் எது வாங்க திட்டமிடுகிறீர்கள் என்றாலும் இந்த பதிவு உங்களுக்கானது மக்களே. நீங்கள் எதிர்பார்க்கும் விலைக்குள் எந்த ஸ்மார்ட்போன் சிறந்தது? எந்த போன் சிறந்த பெர்பார்மென்ஸை கொண்டுள்ளது? எந்த போனில் கேமரா அம்சம் மிரட்டலாக இருக்கிறது? எந்த போனில் டிஸ்பிளே சூப்பராக அமைந்துள்ளது? எது பட்ஜெட்டில் சூப்பர் போன்? என்பது போன்ற விபரங்களை நாங்கள் உங்களுக்கு விளாவாரியாக சொல்லப்போகிறோம். செல்போன் தாண்டி மற்ற தொழில்நுட்ப தகவல்களும் உங்களை வந்து சேரும். இப்போ நாம் பார்க்க இருப்பது Samsung Galaxy S25 Edge செல்போன் பற்றி தான்
கலிபோர்னியாவின் சான் ஜோஸில் நடைபெற்ற Galaxy Unpacked 2025 நிகழ்வில் தென் கொரிய தொழில்நுட்பக் குழுமமான சாம்சங் நிறுவனம் Galaxy S25 தொடரை அறிமுகப்படுத்தியது. இது அதன் முதன்மை மாடல்களை விட மெல்லிய செல்போனாக இதனை அறிமுகப்படுத்தியது. அதன் விலை அல்லது பற்றிய எந்த தகவலும் இன்னும் வெளியாகவில்லை. இப்போது சாம்சங் நிறுவனத்தின் பிரதிநிதி கேலக்ஸி எஸ் 25 எட்ஜின் வெளியீட்டு விவரங்களை பகிர்ந்துள்ளார்.
Galaxy S25 Slim ஏப்ரல் மாதத்தில் அறிமுகமாகும் என்று 9to5Google தெரிவிக்கிறது . ஏப்ரல் அல்லது மே மாத வெளியீட்டை இது உறுதிப்படுத்துகிறது. Galaxy Unpacked விழாவில் சாம்சங் டீஸர் வீடியோவில் போனில் உள்ள ஆப்ஷன்களை காட்சிப்படுத்தியது. பின்புறத்தில் செங்குத்தாக அடுக்கப்பட்ட லென்ஸ்கள் கொண்ட இரட்டை கேமரா யூனிட் இருக்கிறது. Galaxy S25 Edge ஆனது Galaxy S25 தொடரில் உள்ள முந்தைய மாடல்களை விட மிகவும் மெலிதாக இருக்கும் என கூறப்படுகிறது .
மற்ற விவரங்கள் எதுவும் அறியப்படாத நிலையில் ஐபோன் 17 சீரியஸ் வெளியீட்டின் போது ஒரு பகுதியாக இதுவும் வெளியாகும் என பேசப்படுகிறது. iPhone 17 Air க்கு சாம்சங்கின் பதில் இது என்று பரவலாகக் கூறப்படுகிறது . கேலக்ஸி எஸ் 25 பிளஸ் மற்றும் கேலக்ஸி எஸ் 25 அல்ட்ரா மாடல்களுக்கு இடையில் இந்த Samsung Galaxy S25 Edge மாடல் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Samsung Galaxy S25 Edge ஆனது Galaxy S25+ மாடலைப் போலவே 6.66-இன்ச் டிஸ்ப்ளே கொண்டிருக்கலாம் என தெரிகிறது. கேமரா யூனிட் இல்லாமல் 6.4 மிமீ மெல்லிய தடிமன் கொண்டுள்ளது. அதே நேரத்தில் கேமரா யூனிட் 8.3 மிமீ தடிமன் கொண்டிருக்கும்.
கேமராவை பொறுத்தவரையில் 200 மெகாபிக்சல் முதன்மை கேமராவுடன் இரட்டை பின்புற கேமரா அமைப்பைக் கொண்டிருக்கும். Galaxy S25 Edge ஆனது Galaxy சிப்செட் மூலம் இயக்கப்படும். Snapdragon 8 Elite சிப்செட் பொருத்தப்பட்டிருக்கும். Galaxy S25 மாடல்களிலும் இதுவே உள்ளது. இது ஸ்டாண்டர்டாக 12ஜிபி ரேம் உடன் வரலாம் என தெரிகிறது. ஆண்ட்ராய்டு 15 மூலம் இயங்கும். 4900mAh பேட்டரியை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. 256 ஜிபி வரை மெமரி இருக்கலாம்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்