ரெட்மீ K20, ரெட்மீ K20 Pro, ரெட்மீ 7A, ரியல்மீ X, ரியல்மீ 3i, என ஐந்து ஸ்மார்ட்போன்கள் ஃப்ளிப்கார்ட்டின் இந்த சூப்பர் ஃப்ளாஷ் சேலில் இடம்பெற்றுள்ளது.
இவற்றில் ரெட்மீ K20 Pro-தான் விலை உயர்ந்த ஸ்மார்ட்போன்
ஃப்ளிப்கார்ட் நிறுவனம் இன்று 'சூப்பர் ஃப்ளாஷ் சேல்' ஒன்றை அறிவித்துள்ளது. அதன்படி டாப் நிறுவனங்களின் புதிய ஸ்மார்ட்போன்கள் இந்த விற்பனையில் இடம்பெற்றுள்ளது. ரெட்மீ K20, ரெட்மீ K20 Pro, ரெட்மீ 7A, ரியல்மீ X, ரியல்மீ 3i, என ஐந்து ஸ்மார்ட்போன்கள் இந்த சூப்பர் ஃப்ளாஷ் சேலில் இடம்பெற்றுள்ளது. இந்த ஐந்து ஸ்மார்ட்போன்களின் ஃப்ளாஷ் சேலும் ஃப்ளிப்கார்ட் தளத்தில் ஜூலை 28, அதாவது ஞாயிறு அன்று மதியம் 12 மணிக்கு நடைபெறவுள்ளது.
முதலாவதாக ரெட்மீ K20 Pro. இந்த ஸ்மார்ட்போன் சில நாட்களுக்கு முன்பு இந்தியாவில் இரண்டு வகைகளில் அறிமுகப்படுத்தப்பட்டது. 6GB RAM + 128GB சேமிப்பு அளவு மற்றும் 8GB RAM + 256GB சேமிப்பு அளவு ரெட்மீ K20 Pro ஸ்மார்ட்போன்கள், 27,999 ரூபாய் மற்றும் 30,999 ரூபாய் என்ற விலைகளில் விற்பனையாகவுள்ளது.
இதனுடன் அறிமுகமான ரெட்மீ K20 ஸ்மார்ட்போனும் இந்த விற்பனையில் இடம்பெற்றுள்ளது. ரெட்மீ K20 ஸ்மார்ட்போன் 6GB RAM + 64GB சேமிப்பு அளவு, 6GB RAM + 128GB சேமிப்பு அளவு என இரு வகைகளில் 21,999 ரூபாய் மற்றும் 23,999 ரூபாய் என்ற விலையில் விற்பனையாகவுள்ளது.
இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களையும் ஐசிஐசிஐ கிரடிட் அல்லது டெபிட் கார்டுகளை பயன்படுத்தி பெற்றுக்கொண்டால் சியோமி நிறுவனம் 1,000 ரூபாய் தள்ளுபடி வழங்கவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ரெட்மீ 7A ஸ்மார்ட்போன் இரண்டு வகைகளில் விற்பனையாகவுள்ளது. 2GB RAM மற்றும் 16GB சேமிப்பு, 2GB RAM மற்றும் 32GB சேமிப்பு என்ற அளவுகளை கொண்ட இந்த ஸ்மார்ட்போன்கள் 5,999 ரூபாய், 6,199 ரூபாய் என்ற விலையில் விற்பனையாகவுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் கருப்பு (Matte Black), நீலம் (Matte Blue), மற்றும் தங்கம் (Matte Gold) என மூன்று வண்ணங்களை கொண்டுள்ளது. மேலும், சியோமி நிறுவனம் இந்த ஸ்மார்ட்போனிற்கு 200 ரூபாய் தள்ளுபடி வழங்கவுள்ளது.
ரியல்மீ X ஸ்மார்ட்போன் இரண்டு வகைகளில் இந்தியாவில் அறிமுகமானது. 4GB RAM + 128GB சேமிப்பு அளவு, 8GB RAM + 128GB சேமிப்பு அளவு என்ற ரியல்மீ X ஸ்மார்ட்போனின் வகைகள் 16,999 ரூபாய், 19,999 ரூபாய் என்ற விலையில் விற்பனையாகவுள்ளது. இந்த ஸ்மார்ட்போன்கள் வெள்ளை (Polar White) மற்றும் நீலம் (Space Blue) என்ற இரு வண்ணங்களில் விற்பனையாக உள்ளது. இந்த ஃப்ளாஷ் சேல் ஃப்ளிப்கார்ட் தளத்தில் மட்டுமே நடைபெறவுள்ள நிலையில், ரியல்மீ தளத்தில் இந்த ஸ்மார்ட்போனிற்கான அடுத்த ஃப்ளாஷ் சேல் ஜூலை 31 அன்று நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
3GB RAM + 32GB சேமிப்பு அளவு கொண்ட 'ரியல்மீ 3i' ஸ்மார்ட்போன் 7,999 ரூபாய் என்ற விலையில் விற்பனையாகவுள்ளது. அதே நேரம் 4GB RAM + 64GB சேமிப்பு அளவில் அறிமுகமான மற்றொரு 'ரியல்மீ 3i' ஸ்மார்ட்போன் 9,999 ரூபாய் என்ற விலையில் விற்பனையாகவுள்ளது. இந்த ஸ்மார்ட்போன்கள் கருப்பு (Diamond Black), நீலம் (Diamond Blue), மற்றும் சிவப்பு (Diamond Red) என மூன்று வண்ணங்களில் விற்பனைக்கு வரவுள்ளது. இந்த ஃப்ளாஷ் சேலும் ஃப்ளிப்கார்ட் தளத்தில் மட்டுமே நடைபெறும். ரியல்மீ தளத்தில் இந்த ஸ்மார்ட்போனிற்கான அடுத்த ஃப்ளாஷ் சேல் ஜூலை 30 அன்று நடைபெறவுள்ளது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹44,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Haier M70 Mini LED 65-inch
Starts from ₹74,990
CMF Buds Neo True Wireless Stereo (TWS) Earphones
Starts from ₹2,199
Xiaomi TV FX Mini LED 65
Starts from ₹64,999
WhatsApp May Launch a Guest Calls Feature, Allowing People Without an Account to Join Calls
Sony and Guerrilla Games Reportedly Working on a New Killzone Project
Ai+ Nova 2 Power Confirmed to Launch in India Soon; Teased to Feature 7,000mAh Battery, MediaTek Dimensity 7100 SoC