ஃப்ளிப்கார்ட் இந்த வாரம் தனது பிக் சேவிங் டேஸ் விற்பனையுடன் திரும்பியுள்ளது. ஐந்து நாட்களாக நடைபெறும் இந்த விற்பனையில் பல பிரிவுகளில் உள்ள தயாரிப்புகளில் 'மிகக் குறைந்த விலையை' கொண்டு வருவதாக உறுதியளிக்கிறது. இந்த விற்பனையின் போது தள்ளுபடிகள் பெரிதாக இல்லை என்றாலும், கொரோனா தொற்று காலத்தில் நீங்கள் வீட்டிலிருந்து வேலை செய்யும் போது அல்லது படிக்கும்போது உங்கள் ஸ்மார்ட்போன், டிவி அல்லது மடிக்கணினியை இன்னும் மேம்படுத்த விரும்பினால் அதற்கானவற்றை வாங்குவதற்கு இது ஒரு நல்ல நேரம். ஃப்ளிப்கார்ட் எச்.டி.எஃப்.சி வங்கியுடன் இணைந்து வங்கியின் கடன் மற்றும் டெபிட் அட்டைதாரர்களுக்கு 10 சதவீத உடனடி தள்ளுபடியை வழங்கியுள்ளது. ஆன்லைன் சந்தையில் விலை இல்லாத EMI விருப்பங்கள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட தயாரிப்புகளுடன் தொகுக்கப்பட்ட பரிமாற்ற சலுகைகளையும் வழங்குகிறது. நீங்கள் வாங்கவேண்டிய சிறந்த பொருட்களை நாங்கள் தேர்ந்தெடுத்துள்ளோம்.
ஐபோன் xs 64ஐபி
இந்த பிக் சேவிங் டேஸ் சேலில் ஐபோன் xs 64ஐபி போன் விலையானது தற்போது ரூ.58,999 ஆக குறைந்துள்ளது. கூடுதலாக ரூ.13,950 அளவில் எக்ஸ்சேன்ஜ் ஆஃபரும் ப்ளிப்கார்ட் வழங்குகிறது. இதில், உங்கள் பழைய ஸ்மார்ட்போனை கொடுத்துவிட்டு இந்த உடனடி தள்ளுபடியை பெறலாம்.
விலை: Rs. 58,999 (MRP Rs. 89,900)
விவோ z1x
விவோ z1x (8ஜிபி, 128 ஜிபி) தள்ளுபடி விலையில் இந்த வாரம் ஃப்ளிப்கார்ட்டில் பிக் சேவிங் டேஸ் விற்பனையின் போது ரூ.16,990 (எம்ஆர்பி ரூ.24,990). உங்கள் பழைய ஸ்மார்ட்போனையும் எக்ஸ்சேன்ஜ் செய்து கொள்ளலாம் விவோ z1x உடன் கூடுதல் தள்ளுபடியாக ரூ.13,950 எச்.டி.எஃப்.சி வங்கி அட்டைதாரர்கள் 10 சதவீத கூடுதல் தள்ளுபடியைப் பெறலாம்.
விலை: Rs. 16,990 (MRP Rs. 24,990)
கூகுள் ஹோம் மினி
கூகிள் ஹோம் மினி ஸ்மார்ட் ஸ்பீக்கர் மீண்டும் இந்த வாரம் பிக் சேவிங் டேஸ் சேலின் போது ஃப்ளிப்கார்ட்டில் ரூ.2,299 (எம்ஆர்பி ரூ.4,999). ஃப்ளிப்கார்ட்டில் முன்பு வரையறுக்கப்பட்ட கால விற்பனையின் போது நாம் கண்ட அதே விலை இதுதான்.
விலை: Rs. 2,299 (MRP Rs. 4,999)
சோனி பிராவியா 65 இன்ச் 4k ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு டிவி
சோனியின் 65 அங்குல பிராவியா 4k ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு டிவி இப்போது ஃப்ளிப்கார்ட்டில் பிக் சேவிங் டேஸ் சேலின் போது ரூ.97,999 கிடைக்கிறது. (எம்ஆர்பி ரூ.2,64,900). எச்.டி.எஃப்.சி வங்கி கடன் மற்றும் டெபிட் கார்டு பயனர்கள் வாங்கினால் 10 சதவீத உடனடி தள்ளுபடியைப் பெறலாம். உங்கள் பழைய டிவியை மாற்றும்போது ரூ.7,000 தள்ளுபடி கிடைக்கும்.
விலை: Rs. 97,999 (MRP Rs. 2,64,900)
கேனான் EOS3000D
கேனான் EOS3000D டிஎஸ்எல்ஆர் இந்த வாரம் ஃப்ளிப்கார்ட் பிக் சேவிங் டேஸ் சேலில் ரூ.18,999 ஆகும் (எம்ஆர்பி ரூ.29,495). கேமரா 18-55 மிமீ லென்ஸ் கிட், 16 ஜிபி மெமரி கார்டு மற்றும் கேரி கேஸுடன் வருகிறது. ஃப்ளிப்கார்ட்டில் உள்ள தயாரிப்பு பட்டியலின்படி, வாங்கிய தேதியிலிருந்து ஒரு வருட கூடுதல் உத்தரவாதத்துடன் தரமான ஒரு வருட நிலையான உத்தரவாதமும் இத்துடன் வருகிறது.
விலை: Rs. 18,999 (MRP Rs. 29,495)
லெனோவா ஐடியாபேட்130 15.6 அங்குல லேப்டாப்
சாதாரண பயன்பாட்டிற்கான பேர்போன்ஸ் லேப்டாப் சந்தையில் நீங்கள் இருந்தால், லெனோவா ஐடியாபேட் 130 இந்த வாரம் பிக் சேவிங் டேஸ் சேலின் போது ஃப்ளிப்கார்ட்டில் ரூ.24,990 ஆகும் (எம்ஆர்பி ரூ.39,090). இது ஆன்லைனில் அதன் வழக்கமான விற்பனை விலையை விட ரூ.1,000 குறைவாகும். இந்த லேப்டாப் 7வது தலைமுறை இன்டெல் கோர் i3 செயலி மூலம் இயக்கப்படுகிறது, இது 4ஜிபி ரேம் மூலம் ஆதரிக்கப்படுகிறது. இது எந்த இயக்க முறைமையும் நிறுவப்படாமல் 1TB வழக்கமான ஹார்டு டிஸ்குடன் வருகிறது.
விலை: Rs. 24,990 (MRP Rs. 39,090)
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்