Photo Credit: Jio
நீங்கள் பட்ஜெட் விலையில் புதிதாக ஸ்மார்ட்போன், வாட்ச், ஸ்பீக்கர் உட்பட எது வாங்க திட்டமிடுகிறீர்கள் என்றாலும் இந்த பதிவு உங்களுக்கானது மக்களே. நீங்கள் எதிர்பார்க்கும் விலைக்குள் எந்த ஸ்மார்ட்போன் சிறந்தது? எந்த போன் சிறந்த பெர்பார்மென்ஸை கொண்டுள்ளது? எந்த போனில் கேமரா அம்சம் மிரட்டலாக இருக்கிறது? எந்த போனில் டிஸ்பிளே சூப்பராக அமைந்துள்ளது? எது பட்ஜெட்டில் சூப்பர் போன்? என்பது போன்ற விபரங்களை நாங்கள் உங்களுக்கு விளாவாரியாக சொல்லப்போகிறோம். இப்போ நாம் பார்க்க இருப்பது JioPhone Prima 2 செல்போன் பற்றி தான்.
அறிமுகப்படுத்தப்பட்ட JioPhone Primaக்கு அடுத்து இந்த மாடல் அப்டேட் செய்யப்பட்டு வெளியாகிறது. Qualcomm சிப்செட், 2,000mAh பேட்டரி மற்றும் 2.4-இன்ச் வளைந்த திரை ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இது பின்புற மற்றும் முன் கேமராக்கள் இரண்டையும் கொண்டுள்ளது.
இந்தியாவில் JioPhone Prima 2 விலை ரூ. 2,799 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. Luxe Blue வண்ணத்தில் வழங்கப்படுகிறது. இந்த போன் அமேசான் தளம் வழியாக வாங்குவதற்கு கிடைக்கிறது. விரைவில் ஜியோமார்ட், ரிலையன்ஸ் டிஜிட்டல் மற்றும் பிற சில்லறை விற்பனை கடைகளில் விற்பனைக்கு கிடைக்கும் என்று எதிர்பார்க்கலாம். இந்த போனை UNITE TELELINKS NEOLYNCS PRIVATE LIMITED என்ற நிறுவனம் தயாரித்துள்ளது.
JioPhone Prima 2 ஆனது 2.4-இன்ச் வளைந்த திரை மற்றும் கீபேடைக் கொண்டுள்ளது. Qualcomm சிப்செட் மற்றும் KaiOS 2.5.3 மூலம் இயங்குகிறது. இது மைக்ரோ எஸ்டி கார்டு வழியாக 4 ஜிபி மெமரி மற்றும் 128 ஜிபி விரிவாக்கக்கூடிய மெமரியை சப்போர்ட் செய்கிறது. செல்ஃபிக்காக, போனின் முன்பக்கத்தில் 0.3 மெகாபிக்சல் கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. இது தவிர, ஜியோவின் இந்த சமீபத்திய போனில் 512MP ரேம் பொருத்தப்பட்டுள்ளது.
கேமரா பொறுத்தவரையில், JioPhone Prima 2 ஆனது முன் கேமரா யூனிட் மற்றும் பின்புற கேமரா யூனிட் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. வெளிப்புற வீடியோ சேட் பயன்பாட்டைப் பயன்படுத்தாமல், நேரடி வீடியோ அழைப்பை சப்போர்ட் செய்வதாக கூறப்பட்டுள்ளது. இதில் எல்இடி டார்ச் யூனிட் பொருத்தப்பட்டுள்ளது.
ஜியோவின் சமீபத்திய அம்சமான JioPay ஆப் சப்போர்ட் செய்கிறது. இது பயனர்களை ஸ்கேன் செய்து UPI கட்டணங்களைச் செலுத்த உதவுகிறது. இது பொழுதுபோக்குக்காக JioTV, JioCinema மற்றும் JioSaavn போன்ற பயன்பாடுகளுடன் வருகிறது. பேஸ்புக், யூடியூப் மற்றும் கூகுள் அசிஸ்டண்ட் போன்ற வசதிகள் உள்ளது. தகவல் தொடர்பு மற்றும் சமூக ஊடக கருவிகளை பயனர்கள் அணுகலாம். 23 மொழிகளுக்கான சப்போர்ட் உடன் இந்த போன் வருகிறது.
JioPhone Prima 2 ஆனது 2,000mAh பேட்டரி மூலம் ஆதரிக்கப்படுகிறது. கைபேசி ஒற்றை நானோ சிம் மூலம் 4G இணைப்பை ஆதரிக்கிறது. பயனர்கள் தொலைபேசி மூலம் FM ரேடியோவை அணுகலாம். இது 3.5 மிமீ ஆடியோ ஜாக்கை கொண்டுள்ளது. இந்த செல்போன் 20 கிராம் எடையும் கொண்டது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்