கொரோனா வைரஸ்: பிப்ரவரி 9 வரை சீனாவில் உள்ள அனைத்து கடைகளையும் மூடவுள்ளது ஆப்பிள்!

விளம்பரம்
Written by Kathiravan Gunasekaran மேம்படுத்தப்பட்டது: 1 பிப்ரவரி 2020 14:40 IST
ஹைலைட்ஸ்
  • வைரஸ் பாதிப்பு ஒரு வாரத்திற்கு முன்பு இருந்ததைவிட தற்போது அதிகரித்துள்ளது
  • இந்த வார தொடக்கத்தில், சீனாவில் மூன்று கடைகளை ஆப்பிள் மூடியது
  • பிற நிறுவனங்கள் அத்தியாவசியமற்ற வணிக பயணத்தை நிறுத்திவிட்டன

வைரஸ் பாதித்த நகரம், பல ஆப்பிள் சப்ளையர்களின் தாயகமாகும்

வைரஸ் பாதிப்பு காரணமாக, ஆப்பிள் அனைத்து சீன பிரதான கடைகளையும் மூடவுள்ளது (ராய்ட்டர்ஸ்) - கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்த அச்சம் மற்றும் இறப்பு எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் பிப்ரவரி 9-ஆம் தேதி வரை சீனாவின் பிரதான நிலப்பரப்பில் உள்ள அனைத்து அதிகாரப்பூர்வ கடைகளையும், கார்ப்பரேட் அலுவலகங்களையும் மூடுவதாக ஆப்பிள் இன்க் (Apple Inc) சனிக்கிழமை தெரிவித்துள்ளது. ஒரு வாரத்திற்கு முன்பு இருந்ததைவிட 250-க்கு மேல் இரட்டிப்பாகியது.

"மிகுந்த எச்சரிக்கையுடன் மற்றும் முன்னணி சுகாதார நிபுணர்களின் சமீபத்திய ஆலோசனையின் அடிப்படையில், பிப்ரவரி 9-ஆம் தேதி வரை சீனாவின் பிரதான நிலப்பகுதியில் உள்ள எங்கள் அனைத்து நிறுவன அலுவலகங்கள், கடைகள் மற்றும் தொடர்பு மையங்களை நாங்கள் மூடுகிறோம்" என்று Apple ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

"கூடிய விரைவில்" கடைகளை மீண்டும் திறக்க எதிர்பார்த்துள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த வார தொடக்கத்தில், வைரஸ் பரவுவது குறித்த கவலைகள் காரணமாக சீனாவில் மூன்று கடைகளை ஆப்பிள் மூடியது. இது ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தற்காலிகமாக மூடுவதற்கு ஸ்டார்பக்ஸ் கார்ப் மற்றும் மெக்டொனால்டு கார்ப் உள்ளிட்ட சில வெளிநாட்டு சில்லறை விற்பனையாளர்களுடன் இணைகிறது. இதற்கிடையில், பல பிற நிறுவனங்கள், சீனாவின் ஊழியர்கள் வீட்டிலிருந்து வேலை செய்ய வேண்டும் மற்றும் பிப்ரவரி முதல் வாரத்தில் அத்தியாவசியமற்ற வணிக பயணத்தை நிறுத்த வேண்டும்.

பொதுவாக, சீனாவில் வணிகங்கள் ஒரு வார கால சந்திர புத்தாண்டு விடுமுறையின் முடிவைத் தொடர்ந்து, இயல்பான நடவடிக்கைகளுக்குத் திரும்பத் தயாராகின்றன. ஆப்பிள் ஸ்மார்ட்போன் விற்பனை மற்றும் அதன் விநியோக சங்கிலி மற்றும் உற்பத்தி ஆகியவற்றில் சீனாவை பெரிதும் நம்பியுள்ளது.

ஹூபே மாகாணத்தில் பல தொழிற்சாலைகள், ஏபி இன்பெவ் மற்றும் ஜெனரல் மோட்டார்ஸ் கோ ஆகியவற்றால் நடத்தப்படும் ஆலைகள் உட்பட, வைரஸ் காரணமாக உற்பத்தியை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளன. சமீபத்திய வருவாய் அழைப்பில், ஆப்பிள் தலைமை நிர்வாக அதிகாரி Tim Cook, வுஹானில் உள்ள அதன் சப்ளையர்களிடமிருந்து உற்பத்தி இழப்பைச் சமாளிப்பதற்கான தணிப்புத் திட்டங்களை நிறுவனம் மேற்கொண்டு வருவதாகக் கூறினார்

வைரஸ் பாதித்த நகரம், பல ஆப்பிள் சப்ளையர்களின் தாயகமாகும்.

© Thomson Reuters 2019

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Apple, Tim Cook
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. மிரட்டலான 7600mAh பேட்டரி.. 200MP கேமரா! iQOO Z11 Turbo-வின் சிறப்பம்சங்கள் லீக் - இந்தியாவிற்கு iQOO 15R ஆக வருமா?
  2. லேப்டாப் ஸ்க்ரீன் இப்போ விரியும்! லெனோவாவின் மேஜிக் Rollable Laptop மற்றும் SteamOS-ல் இயங்கும் Legion Go 2
  3. சாம்சங்குக்கு சரியான போட்டி! மோட்டோரோலாவின் புதிய 'மெகா' ஃபோல்டபிள் போன் - இதோ சிறப்பம்சங்கள்!
  4. ஷாக் பிரைஸ்! பட்ஜெட் விலையில் லெய்கா கேமரா போன் - சியோமி 14 சிவி அதிரடி விலைக்குறைப்பு
  5. சாம்சங் ரசிகர்களுக்கு கொண்டாட்டம்! ஒரு லட்ச ரூபாய் போன் இப்போ வெறும் ரூ. 66,885-க்கு? அமேசான் ஆஃபர் விவரம்
  6. கரண்ட் மிச்சம், காய்கறி பிரெஷ்! ஹையர் கொண்டு வந்த புது ரக பிரிட்ஜ் - இதோ முழு விபரம்!
  7. நத்திங் (Nothing) பிராண்டின் அதிரடி! பட்ஜெட் விலையில் ஹெட்ஃபோன் மற்றும் வாட்ச் வருது
  8. டிசைன்ல சொக்க வைக்கும் Realme 16 Pro Series! கேமரால மிரட்டுது, விலையில அதட்டுது! முழு விபரம் உள்ளே
  9. Redmi-யின் அடுத்த ஆட்டம் ஆரம்பம்! 200MP கேமரா, வேற லெவல் டிஸ்ப்ளே - Redmi Note 15 5G முழு விவரம் இதோ
  10. இது போன் இல்ல... நடமாடும் பவர் பேங்க்! 10080mAh பேட்டரியுடன் HONOR Power 2 வந்துவிட்டது
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.