பி.எஸ்.என்.எல் தனது பட்டியலில் ஒரு புதிய ரூ.2,399 ப்ளானை சேர்த்துள்ளது. இந்த ப்ளானின் வேலிடிட்டி 600 நாட்கள் ஆகும்.
பிஎஸ்என்எல் ரூ.2,399 ப்ளானில் டேட்டா பலன்கள் இல்லை
பிஎஸ்என்எல் புதிய ப்ரீபெய்ட் ப்ளானை ரூ.2,399-க்கு அறிமுகப்படுத்துகிறது. இந்த ப்ளானின் வேலிடிட்டி 600 நாட்கள் ஆகும். புதிய ப்ளான் நிறுவனத்தின் சத்தீஸ்கர் வட்டம் ட்விட்டர் கணக்கிலிருந்து அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ப்ளான் ஒரு நாளைக்கு 250 நிமிட குரல் அழைப்புகளை அனுமதிக்கிறது. டேட்டா பலன்கள் வசதி இந்த ப்ளானில் இல்லை. நாடு முழுவதும் உள்ள பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்கள் இந்த ப்ளானைப் பெறலாம். இலவச பிஎஸ்என்எல் ட்யூன்களை முதல் 60 நாட்களுக்குப் பயன்படுத்தலாம்.
நிறுவனத்தின் சத்தீஸ்கர் வட்டம் ட்விட்டர் கணக்கின் படி, பிஎஸ்என்எல் ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்கள் ரூ.2,399-க்கு ரீசார்ஜ் செய்தால் 600 நாட்கள் வேலிடிட்டியைப் பெறுவார்கள். ஒவ்வொரு நாளும் முழு நாட்டிலும் உள்ள எந்த எண்ணுக்கும் 250 நிமிட குரல் அழைப்புகள் செய்யலாம். ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் பயன்படுத்தலாம். இந்த ப்ளானுடன் எந்த டேட்டாவையும் பயன்படுத்த முடியாது.
இந்தத் ப்ளானிற்கு ஒரு எம்பி டேட்டா பயன்பாட்டிற்கு 25 பைசா செலவாகும். தினசரி குரல் அழைப்புகளின் உள்ளூர் அழைப்புகளுக்கு நிமிடத்திற்கு 1 ரூபாயும், தேசிய அழைப்புகளுக்கு நிமிடத்திற்கு 1.3 ரூபாயும் செலவாகும். முதல் 60 நாட்கள் இலவச பிஎஸ்என்எல் ட்யூன்களைப் பயன்படுத்தலாம். இதற்கான செலவு மாதத்திற்கு 42 ரூபாய் ஆகும்.
Is Redmi Note 9 Pro Max the best affordable camera phone in India? We discussed this on Orbital, our weekly technology podcast, which you can subscribe to via Apple Podcasts or RSS, download the episode, or just hit the play button below.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Paramount's New Offer for Warner Bros. Is Not Sufficient, Major Investor Says
HMD Pulse 2 Specifications Leaked; Could Launch With 6.7-Inch Display, 5,000mAh Battery