சந்தையில் கிடைக்கும் சிறந்த ப்ளூடூத் ஸ்பீக்கர்கள்: விலையும் சிறப்பம்சமும்

விளம்பரம்
Written by Shobhit Varma மேம்படுத்தப்பட்டது: 18 ஜூலை 2018 19:38 IST
ஹைலைட்ஸ்
  • ஜே.பி.எல் கோ சிறந்த, தெளிவான சவுண்டை தருகிறது
  • யூ.இ ரோல் 2, பணத்துக்கு ஏற்ற தரம்
  • ஜேபி.எல் சார்ஜ் 3ல், ஸ்மார்ட்ஃபோனை சார்ஜ் செய்ய முடியும்

பயணத்தின் போதோ, பார்ட்டியின் போதோ, அல்லது ரிலாக்ஸாக நல்ல பாடல் கேட்க ப்ளூடூத் ஸ்பீக்கர்களை இந்தியர்கள் விரும்பத் தொடங்கியுள்ளனர். சந்தையில் பல புளூடூத் ஸ்பீக்கர்கள் கிடைக்கின்றன. பல்வேறு பிராண்டிலும், பல்வேறு வகையிலும் கிடைக்கின்றன. அவற்றில் இரண்டாயிரம் ரூபாய்க்கு கீழ் உள்ள ப்ளூடூத் ஸ்பீக்கர்களின் பட்டியல் இங்கே.

ஜே.பி.எல் கோ:

பட்ஜெட் விலை ப்ளூடூத் ஸ்பீக்கர்களில் ஜே.பி.எல் கோ சிறந்த தேர்வு. தெளிவான சிறந்த சவுண் சிஸ்டத்தை தரும் இந்த ஸ்பீக்கரில், ஃபோன் அழைப்புகளை பேச மைக்ரோஃபோனும் உள்ளது. 5 மணி நேர பேட்ட்ரி லைஃபும் உள்ளது. இதன் விலை 2,699ரூபாய். ஆனால் ஆன்லைனில் 1800 ரூபாய்க்கு கிடைக்கிறது.

லாகிடெக் X50:

சிம்பிளாக சிறிய அளவில் வடிவமைக்கப்பட்டுள்ளது லாகிடெக் X50. 142 கிராம் எடையும், 750mAh பேட்டரியும் கொண்டு 5 மணி நேரம் சார்ஜ் அளிக்கக் கூடியதாக இருக்கிறது. சவுண்ட் தெளிவாக இருந்தாலும், பேஸ்ஸில் சிறிது பின்னடைவாக இருக்கிறது. இதன் விலை 2,495 ரூபாயாக இருக்கிறது. ஆன்லைனில் 1,300 ரூபாய்க்கே கிடைக்கிறது. இந்த விலைக்கு இது சிறந்த தேர்வாக இருக்கும்.

 

நாய்ஸ் அக்வா மினி:

இந்த ஸ்பீக்கர் 4.2 ப்ளூடூத் வெர்ஷனை கொண்டது. இதன் வெளிப்புறம் ரப்பரால் செய்யப்பட்டுள்ளதால், கடினமான பயன்பாட்டுக்கு ஏற்றதாக இருக்கிறது. இந்த ஸ்ப்பீக்கரின் ஹைலைட்டே அதன் வாட்டர் ரெசிஸ்டென்ஸில் இருக்கிறது. 1 மீட்டர் அளவுக்கு இந்த ஸ்பீக்கர் நீருக்குள் மூழ்கினாலும் எந்த பிரச்சனையும் இருக்காது. மேலும், எஃப்.எம் ரேடியோ வசதியும் இருக்கிறது. சவுண்டை பொருத்தவரை எந்த ஒரு இடையூறுகளும் இல்லாமல் தெளிவாக இருக்கிறது பேஸ் சிறிது குறைவாக இருந்தாலும், மிக மோசமாக இல்லை. நன்றாக இருக்கிறது என்றே கூறலாம். இதன் விலை ஆன்லைனில் 2,000 ரூபாய்க்கே கிடைக்கிறது.

Advertisement

5,000 ரூபாய்க்கு கிழ் இருக்கும் சிறந்த ப்ளூடூத் ஸ்பீக்கர்கள்

ஜே.பி.எல் ஃபிளிப் 2 பிளாக் எடிஷன்:

இரண்டு 40 மி.மீ டிரைவ்களும், பேஸுக்கு என்றே சிறப்பு போர்ட்டும் கொண்டு அட்டகாசமான சவுண்ட் பன்ச்சை தருகிறது இந்த ஃபிளிப் 2 பிளாக் எடிஷன். இந்த ஸ்பீக்கரில் மைக்ரோஃபோனும், எக்கோ மற்றும் நாய்ஸை விலக்கும் தொழில்நுட்பமும் இருப்பதால், சவுண்ட் மிக மிகத் தெளிவாக இருக்கிறது. ஆன்லைனில் இதன் இலை 3,999 ரூபாய்.

Advertisement

யூ.இ. ரோல் 2:

IPX7 சான்று பெற்ற ப்ளூடுத் ஸ்பீக்கர் இந்த ரோல் 2. மற்ற ஸ்பீக்கர்களில் இல்லாத அளவு, 9 மணி நேரம் சார்ஜ் தருகிறது. இதிலிருக்கும் பேஸும், சவுண்டின் தெளிவும் நுட்பமாக இருக்கிறது. இரண்டு ப்ளூடூத்களை ஒரே நேரத்தில் இணைக்க முடியும். இதன் எடை வெறும் 333 கிராம்கள் தான். 1 மீட்டர் வரையில் ஆழம் வரை நீரில் தாக்கு பிடிக்கும். ஆன்லைனில் இதன் விலை 3,500 ரூபாய். 
 

ஆன்கர் சவுண்ட்கோர்:

Advertisement

இந்த ஸ்பீக்கர் 358 கிராம் எடை கொண்டது. பேஸுக்கு என்றே பிரத்யெக போர்ட் இருக்கிறது. 24 மணி நேரம் நீடிக்கும் பேட்டரி என்பது இதன் ஹைலைட். சவுண்டு மிக அற்புதமாக இருக்கிறது. சவுண்ட் மிக்ஸிங் மட்டும் சிறப்பாக இருந்திருக்கலாம். இதன் விலை ஆன்லைனில் 2,999 ரூபாய்

10,000 ரூபாய்க்கு கீழ் சிறந்த ப்ளூடூத் ஸ்பீக்கர்கள்

போஸ் சவுண்ட் லின்க் மைக்ரோ:

இந்த அளவு சிறியதாகவும், மிக அருமையான சவுண்ட் கிளாரிட்டியும் தரும் ப்ளூடூத் ஸ்பீக்கரை பார்ப்பது அரிது. IPX7 வாட்டர் ரெசிஸ்டென்ட் சான்று பெற்றது. ரப்பராலான கவரைக் கொண்டது. அழைப்புகளை ஏற்க மைக்ரோஃபோனும் உள்ளது. கூகுள் வாய்ஸ் அசிஸ்டென்ட் மற்றும் ஆப்பிள் சிரி அம்சமும் இதில் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் விலை 8,990 ரூபாய். ஆன்லைனிலும், ஆஃப்லைனிலும் பெறலாம்.

ஜே.பி.எல் சார்ஜ் 3:

பேட்டரிக்கென்றே பிரத்யேகமாக உருவாக்கப்பட்டது இந்த ஸ்பீக்கர். இதில் ஸ்மார்ட்ஃபோன்களுக்கு சார்ஜ் செய்ய முடியும். நீங்கள் பேஸ் விரும்பியாக இருந்தீர்கள் என்றால், இது உங்களுக்கு 100% ஏற்ற சாய்ஸ். 3 ப்ளூடூத்களை ஒரே நேரத்தில் இணைக்க முடியும். சிரி மற்றும் கூகுள் வாய்ஸ் அசிஸ்டென்ட்டு இருக்கிறது. இதன் விலை 13,999 ரூபாய். ஆனால் ஆன்லைனில் 10 ஆயிரத்துக்கும் கீழ் கிடைக்கிறது. 

யூ.இ பூம் 2:

360 டிகிரி சவுண்ட் அனுபவத்தை தருகிறது யூ.இ பூம் 2. ஒரு மீட்டர் ஆழ நீரில், 30 நிமிடங்கள வரை எந்த பிரச்சனையும் இன்றி தாக்கு பிடிக்கும். ஷாக் ப்ரூஃபும் இதில் உள்ளது. இதன் பேட்டரி சார்ஜ் 15 மணி நேரம் நீடிக்கும். சிரி மற்றும் கூகுள் வாய்ஸ் அசிஸ்டென்ட் அம்சம் இதில் சிறப்பாகவே இருக்கிறது. இதன் விலை 15,995 ரூபாய். ஆனால் ஆன்லைனில் 9,999 ரூபாய்க்கு கிடைக்கிறது.

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: JBL, Bose, Ultimate Ears, Logitech, Sony, Anker, Bluetooth speakers, Wireless audio, Amazon
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. 7,000mAh பேட்டரி கொண்ட உலகின் முதல் போன்! Oppo F31 சீரிஸ் லீக் ஆகி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி!
  2. அவசர வேலைகளில் 'உதவாத' ஏர்டெல்! ஒரே வாரத்தில் இரண்டாவது முறை சேவை முடக்கம்
  3. மடக்கலாம், மிரட்டலாம்! Honor-ன் புது போன் சந்தையில் அறிமுகம்! விலை, சிறப்பம்சங்கள் இதோ!
  4. பெங்களூருவில் Apple-ன் புதிய கடை! செப்டம்பர் 2-ல் திறப்பு! என்ன ஸ்பெஷல்?
  5. இந்தியாவில் Pixel 10, Pixel 10 Pro, Pixel 10 Pro XL லான்ச்! ₹79,999-க்கு Google-ன் புது அஸ்திரம்
  6. கூகிளின் முதல் IP68 ஃபோல்டபிள் போன் லான்ச்! ₹1.72 லட்சத்தில் Pixel 10 Pro Fold
  7. Redmi 15 5G: ₹15,000-க்குள்ளே 7,000mAh பேட்டரி, 144Hz டிஸ்ப்ளே உடன் மாஸ் என்ட்ரி!
  8. Airtel-ன் அதிர்ச்சி அறிவிப்பு! ₹249 ரீசார்ஜ் திட்டம் நீக்கம்! இனி ₹50 அதிகம் செலவு செய்யணும்
  9. Honor X7c 5G லான்ச்! ₹14,999-க்கு 5G போன்! Snapdragon 4 Gen 2 SoC, 5,200mAh பேட்டரி
  10. Airtel-ஆல் வந்த ஜாக்பாட்! 6 மாதங்களுக்கு Apple Music இலவசம்! எப்படி ஆக்டிவேட் செய்வது
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.