அசுஸ் ஜென்போன் லைவ் L2, ராக்கெட் ரெட் மற்றும் காஸ்மிக் நீலம் வண்ணங்களில் இந்த போன் விற்பனை செய்யப்படும் எனத் தெரிகிறது.
ஆண்ட்ராய்டு 8 ஓரியோ மென்பொருள் மூலம் இயங்கும் இந்த போனின் பல வெர்ஷன்கள் பல்வேறு சந்தைகளில் சீக்கிரமே ரிலீஸ் ஆகும்.
அசுஸ் ஜென்போன் லைவ் L2 ஸ்மார்ட் போனை எந்தவித பரபரப்புமின்றி அமைதியாக அறிமுகம் செய்துள்ளது அசுஸ் நிறுவனம். கடந்த ஆண்டு மே மாதம் ரிலீஸ் செய்யப்பட்ட அசுஸ் ஜென்போன் லைவ் L1 போனின் அடுத்த வெர்ஷனாக இந்த போன் இருக்கும். அசுஸ் நிறுவனத்தின் அதிகாரபூர்வ இணையதளத்தில் அசுஸ் ஜென்போன் லைவ் L2 குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு 8 ஓரியோ மென்பொருள் மூலம் இயங்கும் இந்த போனின் பல வெர்ஷன்கள் பல்வேறு சந்தைகளில் சீக்கிரமே ரிலீஸ் ஆகும். இந்த போனின் விலை குறித்தோ, எப்போதும் சந்தையில் விற்பனைக்கு வரும் என்பது குறித்தோ எந்தவித அதிகாரபூர்வ தகவலும் தெரிவிக்கப்படவில்லை.
அதே நேரத்தில், அசுஸ் ஜென்போன் லைவ் L2, ராக்கெட் ரெட் மற்றும் காஸ்மிக் நீலம் வண்ணங்களில் இந்த போன் விற்பனை செய்யப்படும் எனத் தெரிகிறது.
அசுஸ் ஜென்போன் லைவ் L2 சிறப்பம்சங்கள்:
அசுஸ் ஜென்போன் லைவ் L2, டூயல் நானோ சிம் ஸ்லாட் வசதியுடன் ஆண்ட்ராய்டு ஓரியோ மென்பொருடன் இயங்கும். 5.5 இன்ச் எச்.டி ஸ்க்ரீன், 18:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ, 400 நிட்ஸ் ப்ரைட்னெஸ், 82.3 சதவிகிதம் ஸ்க்ரீன் டூ பாடி ரேஷியோ வடிவமைப்பை இந்த போன் பெற்றுள்ளது. குவாட் கோர் குவால்கம் ஸ்னாப்டிராகன் 430 அல்லது குவால்கம் ஸ்னாப்டிராகன் 425 எஸ்.ஓ.சி மூலம் பவரூட்டப்பட்டிருக்கும் இந்த போன், ஆட்ரினோ 505 மூலம் இணைக்கப்பட்டுள்ளது. 2 ஜிபி ரேம், 16ஜிபி/32 ஜிபி சேமிப்பு வசதி மற்றும் மைக்ரோ எஸ்.டி கார்டு ஸ்லாட் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை லைவ் L2 பெற்றிருக்கும்.
13 அல்லது 8 மெகா பிக்சல் சென்சார் கொண்ட முதன்மை கேமராவும் 5 மெகா பிக்சல் கொண்ட செல்ஃபி கேமராவும் அசுஸ் ஜென்போன் லைவ் L2 போனில் இருக்கும்.
Wi-Fi 802.11 b/g/n, ப்ளூடூத் 4.0, GPS, 4ஜி LTE சப்போர்ட் போன்ற இணைப்பு ஆப்ஷன்களும் போனில் இருக்கிறது. 3,000 எம்.ஏ.எச் பேட்டரி, 3.5 எம்எம் ஆடியோ ஜாக் போன்ற பிற வசதிகளும் போனில் கொடுக்கப்பட்டுள்ளது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Mushrooms Could Power Future Eco-Friendly Computers, Study Suggests
MIT Physicists Discover a Way to See Inside Atoms Using Tabletop Molecular Technique