ஆசுஸ் ஜென்ஃபோன் 5Z, 8 ஜி.பி ரேம்/ 256 ஜி.பி ஸ்டோரேஜ் ஸ்மார்ட்ஃபோன் இன்று ஃபிளிப்கார்ட் மூலம் முதல் முறையாக இந்தியாவில் விற்பனைக்கு வருகிறது. இதற்கு முன் இதே மொபைல் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. ஆனால், அது 6ஜி.பி ரேம் மற்றும் 64 ஜி.பி ஸ்டோரேஜ் கொண்டதாக மட்டுமே இருந்தது.
இந்தியாவில் விலை:
6ஜி.பி ரேம்/64 ஜி.பி ஸ்டோரேஜ் 29,999 ரூபாய். 6ஜி.பி ரேம்/128 ஜி.பி ஸ்டோரேஜ் 32,999 ரூபாய். 8ஜி.பி ரேம்/256 ஜி.பி ஸ்டோரேஜ் கொண்ட ஸ்மார்ட்ஃபோனின் விலை 36,999 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆக்சிஸ் வங்கியின் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளை பயன்படுத்தி வாங்கினால் 2000 ரூபாய் தள்ளுபடி கிடைக்கும். மேலும் அந்த வங்கியின் பேங்க் பஸ் கார்டில் வாங்கினால் கூடுதலாக 5% தள்ளுபடி கிடைக்கும். 198/299 ரூபாய்க்கு ஜியோ ரீச்சார்ஜ் செய்தால், 100 ஜி.பி கூடுதல் டேட்டாவும், 2,200 ரூபாய் கேஷ்பேக்கும் கிடைக்கிறது.
சிறப்பம்சங்கள்:
இரண்டு சிம் ஸ்லாட்கள் கொண்ட இந்த ஸ்மார்ட்ஃபோன், ஜென் யூ.ஐ 5.0 இன்டர்ஃபேஸை, ஆண்ட்ராய்டு ஓரியோ 8.0.0 இயங்குதளத்தில் கொண்டு இயங்குகிறது. ஆண்ட்ராய்டு 'பி' வெளியானவுடன், இதில் அப்டேட் கொடுக்கப்படும்.
5Z வகையில், டாப் எண்டான இந்த ஸ்மார்ட்ஃபோனில், 845 ஸ்னாப்டிராகன் பிராசஸர் இருக்கிறது. 19:9 விகிதத்தில் நாட்ச் டிஸ்பிளேவும் உள்ளது. 8 ஜி.பி ரேம், மற்றும் 256 ஜி.பி ஸ்டோரேஜும் இருக்கிறது. இந்த ஸ்டோரேஜை எஸ்.டி கார்டு மூலம் 2 டி.பி வரைக்கும் நீட்டித்துக் கொள்ளலாம்.
பின் பக்கத்தில், 12 மெகா பிக்சல் மற்றும் 8 மெகா பிக்சல் சென்சார் கொண்ட டூயல் கேமராவும் உள்ளது. ஒரு எல்.இ.டி ஃபிளாஷும் உள்ளது. முன்பக்கத்தில் 8 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா உள்ளது.
நெட்வொர்க் தொடர்பை பொறுத்தவரை 4ஜி வோல்ட், வைஃபை 802.11, என்.எஃப்.சி, ப்ளூடூத் வி5.0, எஃப்.எம் ரேடியோ, யூ.எஸ்.பி, ஜி.பி.எஸ், 3.5மிமீ ஹெட்ஃபோன் ஜாக்கும் இதில் உள்ளது. ஆக்சலரோமீட்டர், லைட் சென்சார், மின் காம்பஸ், கைரோஸ்கோப், கைரேகை சென்சார், பிராக்ஸிமிட்டி சென்சார், ஆர்.ஜி.பி சென்சார் ஆகிய சென்சார்களும் இதில் அடக்கம். 3300mAh பேட்டரியும் இதன் சிறப்பம்சம். இந்த மொபைலின் எடை 163 கிராம்கள்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்