கொரோனா வைரஸ் எதிரொலி: ஃபாக்ஸ்கான் விற்பனை 7.7 சதவீதம் சரிவு! 

விளம்பரம்
Kathiravan Gunasekaran, மேம்படுத்தப்பட்டது: 7 ஏப்ரல் 2020 11:28 IST
ஹைலைட்ஸ்
  • ஃபாக்ஸ்கான் TWD 347.7 பில்லியன் வருவாயைப் பதிவுசெய்தது
  • இந்நிறுவனம் உலகின் மிகப்பெரிய ஒப்பந்த மின்னணு தயாரிப்பாளராகும்
  • கடந்த மாதம், ஃபாக்ஸ்கான் லாபத்தில் 23.7 சதவீதம் சரிவைக் கண்டது

பிப்ரவரி மாதம், கடந்த ஏழு ஆண்டுகளில் இல்லாத அளவில் ஃபாக்ஸ்கான் மிகப் பெரிய மாதாந்திர வருவாய் இழப்பை பதிவுசெய்தது.

ஆப்பிள் தயாரிப்புகளின் முக்கிய சப்ளையரான ஃபாக்ஸ்கான், மார்ச் மாத விற்பனையில் 7.7 சதவீதம் சரிவை சந்தித்துள்ளது. உலகின் மிகப்பெரிய ஒப்பந்த எலக்ட்ரானிக்ஸ் தயாரிப்பாளர், மார்ச் மாதத்தில் TWD 347.7 பில்லியன் (11.51 பில்லியன் டாலர்) வருவாயைப் பதிவு செய்துள்ளார். இது ஒரு வருடத்திற்கு முந்தைய காலத்தை விட 376.6 பில்லியன் டாலர்களாக சரிவடைந்துள்ளது. 

ஜனவரி-மார்ச் மொத்த வருவாய் TWD 929.7 பில்லியனாக இருந்தது, இது முந்தைய ஆண்டைவிட 12.0 சதவீதம் குறைந்துள்ளது. கடந்த மாதம், ஃபாக்ஸ்கான் 2019-ஆம் ஆண்டின் கடைசி மூன்று மாதங்களில் 23.7 சதவிகித சரிவை பதிவுசெய்தது. பிப்ரவரி மாதம், கடந்த ஏழு ஆண்டுகளில் இல்லாத அளவில் ஃபாக்ஸ்கான் மிகப் பெரிய மாதாந்திர வருவாய் இழப்பை பதிவுசெய்தது. ஆனால், வைரஸ் தொற்றால், விநியோகச் சங்கிலி சீர்குலைந்து, வணிகம் சரிவை சந்தித்துள்ளது.

© Thomson Reuters 2020

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Foxconn
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. iQOO Neo 10 Pro+ : மே 20 லாஞ்சுக்கு முன்னாடி ஸ்பெக்ஸ் வெளியாகிடுச்சு
  2. Realme GT 7 ஸ்மார்ட்போன் MediaTek Dimensity 9400 in SoC-ஐக் கொண்டு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது
  3. Samsung Galaxy S25 Edge இந்தியாவில் விலை அறிவிப்பு, முன்பதிவு தொடங்கியது
  4. Motorola Razr 60 Ultra: இந்தியாவில் அறிமுகமான புதிய மடிக்கும் மொபைல்
  5. Vivo V50 Elite Edition வட்ட வடிவ கேமராவுடன் இந்தியாவில் அறிமுகம்
  6. Airtel Black Rs. 399 திட்டம்: IPTV உடன் புதிய புரட்சி செய்ய காத்திருக்கும் அறிவிப்பு
  7. Alcatel V3 Ultra செல்போன் பட்ஜெட் பிரியர்களுக்கு ஒரு சுவாரஸ்ய அப்டேட்
  8. Moto G86 Power 5G பற்றி ஆன்லைனில் வெளியான முக்கிய அறிவிப்புகள்
  9. வரம்பற்ற டேட்டா! ஏர்டெல் அறிமுகப்படுத்தும் International Roaming Plan
  10. Haier C95 and C90 OLED TV இந்தியாவில் Dolby Vision IQ அம்சத்துடன் வருகிறது
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.