ஆப்பிள் தயாரிப்புகளின் முக்கிய சப்ளையரான ஃபாக்ஸ்கான், மார்ச் மாத விற்பனையில் 7.7 சதவீதம் சரிவை சந்தித்துள்ளது. உலகின் மிகப்பெரிய ஒப்பந்த எலக்ட்ரானிக்ஸ் தயாரிப்பாளர், மார்ச் மாதத்தில் TWD 347.7 பில்லியன் (11.51 பில்லியன் டாலர்) வருவாயைப் பதிவு செய்துள்ளார். இது ஒரு வருடத்திற்கு முந்தைய காலத்தை விட 376.6 பில்லியன் டாலர்களாக சரிவடைந்துள்ளது.
ஜனவரி-மார்ச் மொத்த வருவாய் TWD 929.7 பில்லியனாக இருந்தது, இது முந்தைய ஆண்டைவிட 12.0 சதவீதம் குறைந்துள்ளது. கடந்த மாதம், ஃபாக்ஸ்கான் 2019-ஆம் ஆண்டின் கடைசி மூன்று மாதங்களில் 23.7 சதவிகித சரிவை பதிவுசெய்தது. பிப்ரவரி மாதம், கடந்த ஏழு ஆண்டுகளில் இல்லாத அளவில் ஃபாக்ஸ்கான் மிகப் பெரிய மாதாந்திர வருவாய் இழப்பை பதிவுசெய்தது. ஆனால், வைரஸ் தொற்றால், விநியோகச் சங்கிலி சீர்குலைந்து, வணிகம் சரிவை சந்தித்துள்ளது.
© Thomson Reuters 2020
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்