Amazon Prime Day 2020: பல ஸ்மார்ட்போன்களுக்கு சிறப்பு தள்ளுபடி- முழு விவரம் இதோ!

விளம்பரம்
Written by Jagmeet Singh மேம்படுத்தப்பட்டது: 23 ஜூலை 2020 17:09 IST
ஹைலைட்ஸ்
  • ஆகஸ்ட் 6-7 ஆகிய தேதிகளில் அமேசான் பிரைம் டே சேல் நடைபெறுகிறது
  • பிரீமியம் ஸ்மார்ட்போன்களும் கிடைக்கின்றன
  • ரெட்மி நோட் 9 ஸ்மார்ட்போனின் புதிய நிற வேரியண்ட் விற்பனpகை்கு வருகிறது

அமேசான் பிரைம் டே சேலில் 40 சதவீதம் வரையில் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.

Photo Credit: Amazon.in

அமேசானில் பிரைம் டே சேல் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதில் புத்தம் புதிய ஸ்மார்ட்போன்கள், எலெக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கு சிறப்பு தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதுபற்றிய விவரங்களை இங்குப் பார்க்கலாம்.

அமேசான் நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் பிரைம் டே சேல் நடத்தி வருகிறது. அந்த வகையில், இந்தாண்டும் தற்போது அமேசான் பிரைம் டே ஆஃபர் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆஃபர் சேல், வரும் ஆகஸ்ட் 6-7 ஆகிய தேதிகளில் நடைபெறகிறது. பிரைம் டே ஆஃபர் என்பது அமேசான் பிரைம் வாடிக்கையாளர்களுக்கு மட்டும் தான். மேற்கொண்டு, புதிய வாடிக்கையாளர்களும் பிரைம் சந்தாவைச் செலுத்தி இந்த ஆஃபர்களைப் பெற்றுக் கொள்ளலாம்.

இந்த பிரைம் டே ஆஃபரில் ஸ்மார்ட்போன்கள், லேப்டாப், டிவி, எலெக்ட்ரானிக்ஸ் பொருட்கள், சிறப்புத் தள்ளுபடியில் விற்கப்படும். குறிப்பாக அண்மையில் வெளியான புத்தம் புதிய ஸ்மார்ட்போன்களுக்கு சிறப்பு ஆஃபர் அறிவிக்கப்பட்டுள்ளது. ப்ரீமியம் லெவல் போன்களான ஒன்பிளஸ் 7T, ஐபோன் 11, ஒன்பிளஸ் 8, சாம்சங் கேலக்ஸி M31 கிடைக்கின்றன. இதே போல் பட்ஜெட் லெவல் ஸ்மார்ட்போன்களான ரெட்மி 8A டூயல், சாம்சங் கேலக்ஸி M21, ஒப்போ A5 2020 விற்பனை செய்யப்படுகின்றன.

சாம்சங் நிறுவனம் அண்மையில் அறிமுகம் செய்த  சாம்சங் கேலக்ஸி M11 குறைந்த விலை ஸ்மார்ட்போன் அமேசான் பிரைம் சேலில் பட்டியலிப்பட்டுள்ளது. எனவே, ஸ்மார்ட்போன் பிரியர்களுக்கு புதிய ஸ்மார்ட்போன் வாங்குவதற்கு  இது நல்ல ஒரு வாய்ப்பாகும்.  

மேற்கண்ட ஆஃபர்களைத் தவிர்த்து, வாட்ச், அன்றாட தேவைகள், விளையாட்டுப் பொருட்கள், வீட்டு உபயோகப் பொருட்கள், ஃபேஷன், அழகு சாதனப் பொருட்கள் உள்ளிட்ட பலவிதமான பொருட்கள் சிறப்பு தள்ளுபடி விற்பனையில் கிடைக்கின்றன. 

அமேசான் பே கணக்கு மூலம் பொருட்கள் வாங்கினால், 2,000 ரூபாய்க்கான கூடுதல் சலுகைகளும் உண்டு. HDFC வங்கி வாடிக்கையாளர்களுக்கு 10% கூடுதல் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. கட்டணமில்லா இஎம்ஐ, எக்ஸ்சேஞ்ச் ஆஃபர்களும் வழங்கப்படுகிறது. இது அமேசானின் நான்காவது பிரைம் டே ஆஃபர் ஆகும்.

அமேசான் பிரைம் ஆண்டு சந்தா ரூ.999,  மாத சந்தா ரூ.129 ஆகும். அமேசானில் சாதாரண வாடிக்கையாளர்களாக இருப்பவர்கள், புதியவர்கள் இந்த சந்தாத் தொகையைச் செலுத்தி பிரைம் வாடிக்கையாளர்களாக மாறலாம். இதன் மூலம் அமேசான் பிரைம் வீடியோ, பிரைம் மியூசிக், பிரைம் ரீடிங் ஆகியவற்றையும் பெற முடியும்.


Why are smartphone prices rising in India? We discussed this on Orbital, our weekly technology podcast, which you can subscribe to via Apple Podcasts, Google Podcasts, or RSS, download the episode, or just hit the play button below.

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. ஜியோ AI கால் ஏஜென்ட் விளக்கம்: இது என்ன, எப்படி வேலை செய்கிறது, இதன் அம்சங்கள் மற்றும் பல
  2. டால்பி அட்மாஸ், 50W ஸ்பீக்கர்களுடன் ஹேயர் HQLED P7 புரோ ஸ்மார்ட் டிவிகள் இந்தியாவில் அறிமுகம்
  3. சாம்சங் கேலக்ஸி M47 5G இந்திய அறிமுகம் டீஸ் செய்யப்பட்டது, அமேசானில் உள்ள மைக்ரோசைட் வடிவமைப்பை உணர்த்துகிறது
  4. 50MP கேமராவுடன் ரெட்மி டர்போ 5 இந்தியாவில் விற்பனைக்கு வந்தது: விலை சலுகைகள்
  5. ஒப்போ ரெனோ 16 உடன் ரெனோ 16c மாடலும் இந்தியாவில் அறிமுகமாக வாய்ப்பு: விவரக்குறிப்புகள் கசிந்தன
  6. 6,500mAh பேட்டரி, ஸ்னாப்டிராகன் 4 ஜென் 2 SoC உடன் விவோ Y6e 5G அறிமுகம்: விலை, விவரக்குறிப்புகள்
  7. சாம்சங் கேலக்ஸி S27 மாடலில் பெரிய டிஸ்ப்ளே மற்றும் கேமரா அப்கிரேடுகள் இருக்காது: அறிக்கை
  8. இந்தியாவில் ஹைசென்ஸ் E8S மினி-LED டிவி சீரிஸ் அறிமுகம்: விலை மற்றும் அம்சங்கள்
  9. இன்ஸ்டாகிராமில் ஸ்பேம் மற்றும் பாட் ஃபாலோயர்களை எவ்வாறு நீக்குவது: ஒரு முழுமையான வழிகாட்டி
  10. ஒப்போ ரெனோ 15A 5G 7,000mAh பேட்டரி, 50-மெகாபிக்சல் மெயின் கேமராவுடன் அறிமுகம்: விலை, சிறப்பம்சங்கள்
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.