அமேசான் இந்தியா சார்பாக ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு புதுப்பிக்கப்பட்ட சியோமி தயாரிப்பு ஸ்மார்ட்போன்கள் தள்ளுபடி விலையில் விற்கப்பட உள்ளது. டிசம்பர் 14 ஆம் தேதி வரை இந்த விற்பனை தொடரும் என எதிர்பாக்கப்படுகிறது. இந்த புதுப்பிக்கப்பட்ட தயாரிப்புகள் 6 மாத கால உத்தரவாதத்தை அமேசான் இந்தியா வழங்குகிறது.
மாத தவணை திட்டத்தின் கீழ் பரிவர்த்தனைகள் செய்தால் 5 சதவிகித சலுகைகளை வழங்குவதாக, ஐசிஐசிஐ வங்கியுடன் அமேசான் இணைந்து அறிவித்துள்ளது. மேலும் இவ்வகை புதுபிக்கப்பட்ட போன்கள் புதிய போன்களைபோலவே இருக்கும் என அமேசான் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமேசான் சான்றளிக்கப்பட்ட எம்.ஐ தயாரிப்பு போன்கள் விற்பனையின் ஒரு பகுதியாக சியோமியின் ரெட்மீ 6 ப்ரோ (3 ஜிபி, 32 ஜிபி) ரேம் மற்றும் நினைவகத்தை கொண்ட இவ்வகை போன்கள் 9,899 ரூபாய்க்கு( ஓரிஜினல் விலை11,499) விற்கப்படுகிறது. புதுபிக்கப்படாத மற்ற புதிய ரெட்மீ 6 ப்ரோ போன்கள் 10,999 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. மேலும் அதே வகையில் உள்ள 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி நினைவகம் கொண்ட ரெட்மீ 6 ப்ரோ போன்கள் 11,699 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
எம்.ஐ. மெஸ் 2 (4 ஜிபி, 64ஜிபி) இன் சான்றிதழ் புதுப்பிக்கப்பட்ட போன் மாடல்கள், அமேசான் நிறுவனம் 10,949 (MRP ரூ 18,999) விற்கப்படுகிறது. மேலும் பல புதுபிக்கப்பட்ட ஸ்மார்ட்போன்கள் விற்பனைக்கு வந்துள்ள நிலையில் சியோமியின் வயர்லஸ் ரூட்டர் மற்றும் எம்.ஐ.யின் ஹெ.ஆர்.எஸ். வகைகளும் தள்ளுபடி விலையில் குறைந்தபட்சம் ரூ774லிருந்து - ரூ. 1,299 ரூபாய் வரைக்கும் விற்பனை செய்யப்படுகிறது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்