அமேசான் சம்மர் சேலில், ஒன்பிளஸ் 6T, ரெட்மி Y3, ரியல்மி U1, சாம்சங் கேலக்ஸி M20 போன்ற போன்களுக்கு 40 சதவிகிதம் வரை ஆஃபர் இருக்கின்றது.
அமேசான் ப்ரைம் வாடிக்கையாளர்களுக்கு மே 3 ஆம் தேதி, மதியம் 12 மணி முதலே இந்த விற்பனை ஆரம்பிக்கும்
அமேசான் இந்தியா நிறுவனம், இந்த ஆண்டின் ‘சம்மர் சேல்' ஸ்பெஷல் விற்பனையை வரும் மே 4 ஆம் தேதி முதல் 7 ஆம் தேதி வரை நடத்த உள்ளது. இந்த 4 நாட்கள் விற்பனையின்போது பல ஸ்மார்ட் போன்கள், லேப்டாப்ஸ், கேமராக்கள், ஆடியோ தயாரிப்புகள் உள்ளிட்டவைக்கு தள்ளுபடி கொடுக்கப்படும். இந்த அதிரடி விற்பனைக்காக அமேசான் நிறுவனம், ஒன்பிளஸ், ஆப்பிள், சாம்சங், ரியல்மி, ஓப்போ மற்றும் சியோமி நிறுவனங்களுடன் கைக்கோர்த்துள்ளது. அமேசானின் சொந்த தயாரிப்புகளுக்கும் இந்த விற்பனையில் தள்ளுபடி கொடுக்கப்பட உள்ளது.
அமேசான் ப்ரைம் வாடிக்கையாளர்களுக்கு மே 3 ஆம் தேதி, மதியம் 12 மணி முதலே இந்த விற்பனை ஆரம்பிக்கும். ப்ரைம் வாடிக்கையாளர்கள் இல்லயெனில், மே 4 ஆம் தேதி 12 மணிக்குதான் இந்த விற்பனையின் தள்ளுபடிகளை பெற முடியும். எஸ்.பி.ஐ டெபிட் கார்டு மூலம் பொருட்களை வாங்குபவர்களுக்கு 10 சதவிகித உடனடி கேஷ்-பேக் கொடுக்கப்படும். நோ காஸ்ட் இ.எம்.ஐ வசதி, ஸ்பெஷல் எக்ஸ்சேஞ்ச் வசதி உள்ளிட்டவையும் இந்த சேலில் கிடைக்கப் பெறும்.
அமேசான் சம்மர் சேலில், ஒன்பிளஸ் 6T, ரெட்மி Y3, ரியல்மி U1, சாம்சங் கேலக்ஸி M20 போன்ற போன்களுக்கு 40 சதவிகிதம் வரை ஆஃபர் இருக்கின்றது. இதுவரை எந்தெந்த போன்களுக்கு எவ்வளவு தள்ளுபடி கொடுக்கப்படும் என்பது பற்றி அமேசான் தெளிவாக கூறவில்லை. ஆனால், அடுத்த சில நாட்களில் இந்த ரகசியம் உடைக்கப்படும். ஜேபிஎல், சோனி ஸ்பீக்கர்கள், அமேஸ்ஃபிட் வெர்ஜ், அமேஸ்ஃபிட் பேஸ் ஸ்மார்ட்வாட்ச்களுக்கும் இந்த சேலில் தள்ளுபடி வழங்கப்படும்.
மேலும் கேமராக்களுக்கு 35 சதவிகதம் வரை தள்ளுபடியும், ஹெட்போன் மற்றும் ஸ்பீக்கர்களுக்கு 60 சதவிகிதம் வரை தள்ளுபடியும், லேப்டாப்களுக்கு 70 சதவிகிதம் வரை தள்ளுபடியும், சமையல் சாதனப் பொருட்களுக்கு 70 சதவிகிதம் வரை தள்ளுபடியும், டிவி-க்களுக்கு 60 சதவிகிதம் வரை தள்ளுபடியும் கொடுக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
‘மிகவும் நம்பப்படும் இணைய வணிக தளமாக இருக்கிறது எங்கள் நிறுவனம். எங்கள் வாடிக்கையாளர்களுடன் நாங்கள் ஒவ்வொரு சந்தர்பத்தையும் தவறவிடாமல் கொண்டாட வேண்டும் என்று நினைக்கிறோம். பல அதிரடி தள்ளுபடிகள், நோ காஸ்ட் இஎம்ஐ, சிறப்பு எக்ஸ்சேஞ்ச் ஆஃபர்கள் உள்ளிட்ட அம்சங்களால் அமேசான்.இன் தள்ளுபடி விற்பனையை வாடிக்கையாளர்கள் எதிர்நோக்கலாம்' என்று அமேசான்.இன் நிறுவனத்தின் துணைத் தலைவர் மணிஷ் திவாரி கூறியுள்ளார்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹44,590
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹41,061
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Haier M70 Mini LED 65-inch
Starts from ₹74,990
CMF Buds Neo True Wireless Stereo (TWS) Earphones
Starts from ₹2,199
Xiaomi TV FX Mini LED 65
Starts from ₹64,999